எஸ்பிஐ-யில் உதவித்தொகையுடன் அப்ரெண்டிஸ் பயிற்சி!

எஸ்பிஐ-யில்  உதவித்தொகையுடன் அப்ரெண்டிஸ் பயிற்சி!

பொதுத்துறை வங்கிகளின் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சியின் பெயர்:

Apprenticeship Training

காலியிடங்கள்:

6,100

உதவித்தொகை:

மாதம் ரூ.15,600

வயதுவரம்பு:

31.10.2020 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி:

ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் உள்ளூர் மொழியில் பேசும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும்.

தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: செனனை, மதுரை, ஈரோடு, சேலம, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், நாகர்கோவில்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.300. கட்டணத்தை எஸ்பிஐ வங்கி இ-ரசீது பயன்படுத்தி ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.sbi.co.in/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:

26.07.2021

மேலும் விவரங்கள் அறிய

ஆந்தை வேலைவாய்ப்பு என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Related Posts

error: Content is protected !!