June 9, 2023

ஃபேஸ்புக்குக்கு மூடு விழா நடத்துங்க: ஹலோ – ஆப் இந்தியாவில் அறிமுகம் ஆயிடுச்சு!

சமூக அந்தஸ்தாகவே இருந்த பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ஃபேஸ்புக் தன் பயனர் களின் தகவல்களை திருடி விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து அதனை ஃபேஸ்புக் நிறுவன அதிபரான மார்க்-க்கும் ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டார். இதையடுத்து இதுபோன்ற பிரச்னை இனி நிகழாது என்றும் பயனர்களின் தகவல்களை பாதுகாக்கும் வகையில், ஆப் டெவலப்பர்கள் மேம்படுத்தப்பட்டு ‘பக் பவுன்டி’ என்ற திட்டத்தின் மூலம் பிழைகள் சரி செய்யப் பட்டு வருவதாக மார்க் தெரிவித்திருந்தார். ஆனாலும் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சிக்கி ஃபேஸ்புக் நிறுவனம் பயனர்களின் நம்பிக்கையை இழந்து அவப்பெயர் வாங்கி பல பயனாளர்களை இழந்து ஷேர் மார்க்கெட்டும் சரிந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் ஃபேஸ்புக்குக்கு போட்டியாக ஹலோ ஆப் இந்தியாவில் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது, அதிலும் கூகுளின் ஆர்குட் சமூக வலைதளத்தை உருவாக்கிய கூகுள் நிறுவன எக்ஸ் எம்ப்ளாயி Orkut Buyukkokten என்பவரால் இந்த புதிய ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சமூக வலைதளமான ஹலோ இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் போன்றவற்றில் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுளது.

தற்போது சான் ஃபிரான்ஸிஸ்கோ-வை தலைமையிடமாக கொண்டு இந்த ஹலோ ஆப் செயல் படும் என்று Buyukkokten தகவல் தெரிவித்துள்ளார். உலகில் மிகவும் பரவலாகப் பேசப்படும் வார்த்தை ஹலோ, இதன் மூலம் எவருக்கும் எளிய மற்றும் நட்பான சைகை செய்யும்போது பல்வேறு நண்மைகள் கிடைக்கும். எனவே ஹலோவுடன் சேரவும், சில புதிய நண்பர்களை உருவாக்கவும் ஹலோ ஆப் பயன்படுமாம்.

தற்சமயம் இந்த ஆப் 1 மல்லியன் பயனாளர்களுடன் பிரேசில் நாட்டில் அதிகமாக பயன்பட்டு வருகிறது, குறிப்பாக கடந்த 7 மாதங்களாக இந்தியாவில் பீட்டா ஆய்வுக்கு கீழ் செயல்பட்டு வந்தது இந்த ஹலோ ஆப். ஹலோ.காம் என்ற தளம் மூலமாகவும், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் இருந்தும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ஃபேஸ்புக் போன்றே ஹலோ ஆப்பில் உலகில் எந்த மூலையிலும் உள்ள நண்பர்களை இணைத்து சாட்டிங் செய்வது, தகவல் பரிமாற்றம், மெசன்ஜர் என அனைத்து அம்சங்களும் உள்ளன. பிரேசில் நாட்டில் மட்டும் சுமார் 10 லட்சம் பயனாளர்களை ஹலோ ஆப் கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.