ரஷ்யாவில் அடாவடி : அவான்கார்டு ஹைபர்சானிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை!

ரஷ்யாவில் அடாவடி : அவான்கார்டு ஹைபர்சானிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை!

சர்வதேச அளவிலான எந்த நாட்டின் எந்த ஆயுதங்களாலும் தடுத்து நிறுத்த முடியாத அவான்கார்டு ஹைபர்சானிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்து உள்ளது பல்வேறு நாடுகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது..

கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவங்கார்டு ஹைபர்சானிக் ஏவுகணை குறித்து அதிபர் விளாதிமிர் புதின் முதன் முறையாக பேசினார். அவங்கார்டு ஹைப்பர்சோனிக் ஏவுகணையானது ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகமாக பாயும். இந்த ஏவுகணையை உலகில் உள்ள வேறு எந்த ஏவுகணையாலும் வீழ்த்த முடியாது என அதிபர் புதின் கூறியிருந்தார்.கடந்த நவம்பர் மாதம் இந்த ஹைபர்சானிக் ஏவுகணையை அமெரிக்க அதிகாரிகளிடம் காட்டியதாகவும் ரஷ்யா செய்தி வெளியிட்டது.

இச்சூழ்நிலையில் ரஷ்யாவின் முதல் அவங்கார்டு ஹைபர்சானிக் ஏவுகணை டிசம்பர் 27ம் தேதி உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு ராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளதாக ரஷ்யாவின் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த தகவலை ரஷ்யா பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்காய் ஷோய்கூ இன்று அதிபர் விளாதிமிர் புதினிடம் தெரிவித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நவீன ஏவுகணை மணிக்கு 33,000 கிலோமிட்டர் தூரம் வேகத்தில் செல்லக்கூடிய திறன் பெற்றது. சோதனையின் போது ஒலியின் வேகத்தை விட 27 மடங்கு வேகமாக சென்றதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அவாங்கார்டு ஹைபர்சானிக் ஏவுகணை தொடர்பாக வேறு எந்த தகவலும் வெளியிடப்பட வில்லை. இது குறித்து கருத்து கூற ரஷ்ய பாதுகாப்புத்துறை மறுத்துவிட்டது. ஏவுகணை சோதனை யில் ரஷ்யாவின் போட்டி நாடுகளாக கருதப்படும் அமெரிக்காவும், சீனாவும் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் செய்தியாளர்களிடம் பேசுகையில் உலக நாடுகளால் வீழ்த்த முடியாத பல ஆயுதங்களை ரஷ்யா உருவாக்கி வருவதாக அறிவித்தார்.

சர்வதேச ஆயுத போட்டியில் மேற்கத்திய நாடுகளுடன் ரஷ்யா போட்டியிட்ட காலம் மலையேறிவிட்டது. இனி எங்கள் நாட்டின் நவீன வரலாற்றில் ஆயுத தயாரிப்பில் மேற்கத்திய நாடுகளை ரஷ்யா வழிநடத்தும் என அதிபர் புதின் பெருமிதத்துடன் கூறினார்.

Related Posts