ருத்ரன் – விமர்சனம்!

தமிழ் சினிமா தொடங்கிய காலக் கட்ட கதையை அதையும் அதே ஓல்ட் ஸ்கீரீன் பிளே மூலம் கொதமிழ் சினிமா தொடங்கிய காலக் கட்ட கதையை அதையும் அதே ஓல்ட் ஸ்கீரீன் பிளே மூலம் கொடுத்து ரசிகர்களை இம்சை அடைய வைக்கிறார்கள். படம் ஆரம்பித்தவுடன் ஒரு ஃபைட், ஒரு இண்ட்ரோ சாங், பிறகு ஃபேமிலி சென்டிமென்ட், லவ் மீண்டும் ஆக்சன், சென்டிமென்ட், ஆக்சன் என பழைய ஆதி காலத்து ஃபார்முலாவில் ட்ராவலாகிறது . அதன் காரணமாகவே வலிந்து திணிக்கப்பட்ட அம்மா சென்டிமென்ட் காட்சிகளும், ‘அம்மா, அப்பாவை கைவிட்டுடாதீங்க’ என்ற மெசேஜூம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
அதாவது ட்ரான்ஸ்போர்ட் பிஸ்னஸ் நடத்தும் அப்பா (நாசர்), குடும்பப் பொறுப்பைக் கவனித்துக் கொள்ளும் அம்மாவின் (பூர்ணிமா பாக்யராஜ்) செல்லப் பிள்ளை ருத்ரன் (ராகவா லாரன்ஸ்). அவருக்கு அனன்யா (பிரியா பவானி சங்கர்) மீது காதல். இந்நிலையில், தொழிலை விரிவுபடுத்த வாங்கிய ரூ.6 கோடியுடன், அப்பாவின் நண்பர் தலைமறைவாக, அந்த அதிர்ச்சியில் உயிரிழக்கிறார் அப்பா. அந்தக் கடனைஅடைக்க வெளிநாடு செல்கிறார், ருத்ரன். இந்த நேரத்தில் அவர் குடும்பத்தை ரவுடி பூமியின் ஆட்கள் கொன்று விடுகிறார்கள்.. பிறகென்ன என்பதே ருத்ரன் கதை..
படத்தின் காட்சிகள் அனைத்துமே ஏற்கனவே நாம் பார்த்து பழகிய ஒரு உணர்வை நமக்கு தருவதால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நம்மால் எளிதாக யூகிக்க முடிகிறது. மேலும் சண்டைக் காட்சிகள் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் படங்களையே மிஞ்சும் அளவிற்கு ஓவராக அமைந்திருப்பதும் சண்டைக் காட்சிகளின் நீளம் அதிகமாக இருப்பதும் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது.வழக்கம் போல் ஆட்டம், ஆக்ஷன், குறும்புத்தனமான நடிப்பு என அனைத்து ஏரியாவிலும் ஓவர் டோஸ் கலந்து நடித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். இதில் ஆட்டமும், ஆக்ஷனும் ரசிக்க வைத்தாலும், குறும்புத்தனமான நடிப்பு மட்டும் சில இடங்களில் சகிக்கவில்லை. வழக்கமாக எந்த ஃபார்முலாவில் படம் நடிப்பாரோ அதே ஃபார்முலாவில் இந்த படமும் அமைந்து இருக்கிறது. அது அவரது ரசிகர்களை வேண்டுமானால் திருப்திப்படுத்தி இருக்கலாம் மற்றவர்களை திருப்திப்படுத்தியதா என்றால் கேள்விக்குறியே? நாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், பலமான வேடத்தில் மிக இயல்பாக நடித்திருக்கிறார். முதல் பாதியில் அவருக்கான வேலை குறைவு என்றாலும் இரண்டாம் பாதியில் வரும் அவரது வேடம் மக்கள் மனதில் நின்றுவிடுகிறது.
வில்லனாக சரத்குமார் அவ்வப்போது வந்து மிரட்டிவிட்டு, தமிழ் சினிமா வழக்கப்படி, கிளைமாக்ஸில் உயிர் விடுகிறார்.அப்பா நாசர், நண்பர் காளிவெங்கட், போலீஸ்காரர் இளவரசு, ருத்ரனுக்கு உதவும் ரெடின் கிங்ஸ்லி பாத்திரம் உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடாத பாட்டெல்லாம் ரீமிக்ஸ் பாடல் மட்டும் வருடுகிறது. சாம் சிஎஸ்-ன் பின்னணி இசை வழக்கம் போல் இரைச்சலை ஏற்படுத்தி பார்ப்பவர்கள் காதிலிருந்து ரத்தம் வர வைத்துள்ளது.
மொத்தத்தில் சொல்ல முயன்றிருப்பது நல்ல மற்றும் வரவேற்கத்தக்க சமாச்சாரம் என்றாலும், பொழுது போக்க படம் பார்ப்பவர்களை பாடாய்படுத்தும் அளவுக்கு மசாலா தூவி இருப்பதால் பெயிலாகி விட்டான் இந்த ருத்ரன்
மார்க் 2./5