ரோமியோ – விமர்சனம்

ரோமியோ – விமர்சனம்

முருங்கைக்காய் புகழ் பாக்யராஜின் பாணியில் ஒரு ஜோடி நடத்தும் அழகான தொல்லைகள், குழப்பங்கள் மற்றும் ஆசைகளை வைத்து ரோமியோ என்ற பெயரில் அறுசுவை விருந்தே படைத்து விட்டார்கள். தன்னை வெறுக்கும் ஒரு மனைவிக்கு ஒரு கணவன் அவர் மனதை வெல்வதற்காக இப்படியெல்லாம் தியாகத்தை செய்ய முடியுமா என்ற பட்டிமன்றமே நடத்தும் அளவுக்கு விஜய் ஆண்டனி அப்படி, இப்படி, எப்படி எல்லாமுமாகி மிருணாளினிக்காக  உயிரை கூட பணயம் வைக்க முன் வரும்போது இப்படி ஒரு கணவன் தனக்கு கிடைக்க மாட்டானா என்று பெண்களை ஏக்க பெருமூச்சு விடுவதில் ஜெயித்து படத்தையும் ஆஹா என்று சொல்ல வைத்து விடுகிறார்கள்.

அதாவது 35 வயதாகியும் லவ் ஃபீல் வந்தால் தான் மேரேஜ் செய்வேன் என அடம் பிடித்து வந்த விஜய் ஆண்டனிக்கும், மிருளாணி ரவிக்கும் திருமணம் நடக்கிறது. ஆனால் இந்த திருமணம் மிருளாளினி விருப்பம் இல்லாமல் நடந்ததை உணர்ந்து கொள்ளும் விஜய் ஆண்டனிக்கு, அவர் வாழும் நகரத்து வாழ்க்கை மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறது. அத்துடன் . சினிமா நடிகை ஆகும் எண்ணத்தில் உள்ள மிருணாளினி விஜய் ஆண்டனியை மேரேக் செய்து சென்னையில். குடியேறினால் அப்படியே சினிமா நடிகை ஆகி விடலாம் என்று ஆசைப்பட்டுதான் மணந்து கொள்கிறாராம். ஆனால் மனைவி மிருணாளினி சென்னை வந்த இடத்தில் புதுக் கணவன் விஜய் ஆண்டனிடம் முகம் கொடுத்து கூட மறுக்கிறார. ஆனால் மனைவியின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விஜய் ஆண்டனி மிருணாளியுடன் வேறு பெயரில் தொடர்பு கொண்டு ஒரு ரசிகராக செல்போனில் பேசி பழகுகிறார். அவரிடம் மிருணாளி தனது எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில் மனைவியின் நடிகை ஆசையை நிறைவேற்ற விஜய் ஆண்டனியே . படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்கிறார். அது காதல் படம் என்பதால் தானே ஹீரோவாக நடிப்பேன் என்று விஜய் ஆண்டனி கூறுகிறார் வேண்டா வெறுப்பாக மிருணாளி. ஒப்புக்கொள்கிறார். இதை அடுத்து மிருணாளி மனதில் விஜய் ஆண்டனி ஒரு கணவனாக எப்படி இடம் பிடித்தார் என்பதை நெகிழ்ச்சியுடன் சொல்லி இருப்பதுதான் ரோமியோ படக் கதை..!

இதுவரை அதிரி புதிரியாக பலவித ரோல்களில் வந்து போய் கொண்டிருந்த விஜய் ஆண்டனி, காதல் நாயகனாக இதில் ஓரளவு நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார் என்பதைக் கூட நம்பக் கஷ்டமாகத்தான் இருக்கும். தன்னை வெறுத்தாலும் தனது மனைவியை ஒருதலையாக காதலிக்கும் அவரது நடிப்பு, அறிவு என்ற கதாபாத்திரத்தின் ஆழ்மனதில் இருக்கும் காதலை அழகாக வெளிப்படுத்துகிறது.

ஹீரோயினாக நடித்திருக்கும் மிர்ணாளினி ரவி, நாயகியாக அல்லாமல் ரோமியோ கதையை நகர்த்தும் ஜூலியட் ரோலில் மிக சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்கிறார். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் அவரின் நடிப்பு பலே சொல்ல வைக்கிறது. இவர்களை தவிர யோகிபாபு, விடிவி கணேஷ், ஷாரா ஆகியோரின் கேரக்டர்கள் சிறப்பாக அமைந்திருக்கிறது. . நாயகனுக்கு காதல் ஐடியா கொடுக்கும் யோகி பாபு வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடி. சில இடங்களில் விஜய் ஆண்டனியை கலாய்த்தும் சிரிக்க வைக்கிறார். நாயகியின் நண்பர்களாக நடித்திருக்கும் ஷாரா மற்றும் குழுவினர் வரும் காட்சிகள் கூடுதல் கலகலப்பு.

ஹீரோவுக்கு காதல் ஐடியா கொடுக்கும் யோகி பாபு வரும் காட்சிகள் எல்லாமே நிஜ சிரிப்பு ரகம். சில இடங்களில் விஜய் ஆண்டனியை கலாய்த்தும் சிரிக்க வைக்கிறார். நாயகியின் நண்பர்களாக நடித்திருக்கும் ஷாரா மற்றும் குழுவினர் வரும் காட்சிகளும் ரிலீப் .

கேமராமேன் பரூக் ஜே.பாட்ஷா ஒவ்வொரு காட்சிகளையும் வண்ணமயமாக படமாக்கி ரோமியோவை ரசிக்க வைத்திருக்கிறார். இசையமைப்பாளர் பரத் தனசேகர் இசையில் பாடல்கள் அனைத்தும் ஒவ்வொரு ரகமாக இருப்பதோடு, முணுமுணுக்கவும், தாளம் போடவும் வைக்கிறது. பின்னணி இசையும் மோசமில்லை ரகம்.

மேலும் இதுதான் நடக்கப் போகிறது என சில இடங்களிலும் யோசிக்க கூடிய வகையில் திரைக்கதை இருந்தாலும் மேரேஜூக்குப் பிறகு பெண்களின் கனவு சிதைந்து போவது ஏன் என்பதை பேசி, பெண்களுக்கும், அவர்களது கனவுகளுக்கும் ஊக்கமும், உற்சாகமும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஜாலியான திரைக்கதை மூலம் சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார் புது முக இயக்குநர் .விநாயக் வைத்தியநாதன்,

மொத்தத்தில் இந்த ரோமியோ – சகல வயதினரையும் கவர்கிறான்

மார்க் 3.75/5

error: Content is protected !!