ரிப்பப்பரி – விமர்சனம்!

ரிப்பப்பரி –  விமர்சனம்!

டார்க் காமெடி என்ற பெயரில் பேய்க் கதையை சாதிப் பிரச்சினையுடன் முடிச்சுப் போட்டு ஒரு கதையை தயார் செய்து கொண்டு இதை எப்படி மேற்கொண்டு நகர்த்தி செல்வது என்று தெரியாமல் தவித்துள்ளார்கள். வழக்கமாக அரூபமாக வரும் பேய் இதில் கோரமான மேக் அப்புடன் பார்க்கும் போது பரிதாப உணர்வு தான் வருகிறது. காமெடிக்காக பேய்க் கதையை எடுக்கலாம்தான். ஆனால் அதிலும் கொஞ்சூண்டுடாவது லாஜிக் இருக்க வேண்டுமில்லையா?. இதில் அது ஒரு பர்செண்ட் கூட இல்லை என்பதுதான் சோகம்.

அதாவது முன்னொரு கால நடிகரான மாஸ்டர் மகேந்திரன் முகம் தெரியாத பெண் ஒருவரை லப் பண்ணுகிறார். அந்தக் காதலியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் மகேந்திரன், காதலிக்கும் ஆண்கள் பலர் தொடர்ந்து கொலை செய்யப்படும் ஊரில் தான் தனது காதலி இருப்பதை தெரிந்துக்கொள்கிறார். பிறகென்ன.. காதலுக்காக எதையும் சந்திக்க முடிவு செய்யும் மகேந்திரன், அந்த ஊருக்குள் செல்கிறார். அதை அடுத்து, நடப்பதே ரிப்ப்பபரி கதை(?)யாம்..

நாயகன் ‘மாஸ்டர்’ மகேந்திரன் நடனத்தில் மட்டும் ஜொலிக்கிறார். மற்றபடி விடலைத் தனத்துடன் ஒவ்வொரு ப்ரேமிலும் நடிக்க ட்ரைப் பண்ணி இம்சை கொடுத்துள்ளார். கடைசி வரை நடிப்பு என்பதே இவருக்கு என்னவென்று தெரியவில்லை என்பதுதான் நிஜம்.. நம் சக மீடியா நண்பர், ‘ஏண்ணே..இந்த மாஸ்டர் மஹேந்திரன் குழந்தை நட்சத்திரமாக நடித்த போது கூட இதை விட நல்லா நடிசிருக்கார். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருந்தும் பயன்படுத்தலை இல்லே? அது சரி.. இவர் இதில் காமெடியனா? ஹீரோவா? காமெடி ஹீரோவா’ என்றெல்லாம் கேட்டதுதான் ஹைலைட்..

சக ராஜ்களாக வரும் மாரியும், நோபிள் ஜேம்ஸும் மகேந்திரனுடன் ஒப்பிடும்போது கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்கள். ஆரத்தி பொடி ஹீரோயினாக வருகிறார், போகிறார், அவ்வளவே! பேயாக வரும் ஶ்ரீனி தன் பங்களிப்பை நிறைவாக செய்துள்ளார். ஹீரோவுக்குத் தொல்லை தர வரும் ‘உண்மை காதலன்’ கதாபாத்திரம் தன் உடல்மொழி, வார்த்தை உச்சரிப்பால் தனிக்கவனம் பெறுகிறது. சில இடங்களில் அவர் சிரிக்கவும் வைக்கிறார். இவர்கள் தவிர இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தியாக வரும் செல்லா, நக்கலைட்ஸ் தனம் எனப் பலரும் எவ்வித தாக்கத்தைத் தராமல் கடந்து போகிறார்கள். இந்தக் கூட்டத்தில் பிளாஷ்பேக்கில் வரும் காவ்யா அறிவுமணி மட்டும் தன் நடிப்பால் கவர்கிறார்.

இசை இரைச்சலாக மாறி நம் காதுகளை பதம் பார்க்கிறது.

மொத்தத்தில் வேஸ்ட்

மார்க் 2/5

Related Posts

CLOSE
CLOSE
error: Content is protected !!