அசுத்தமான கடல் நீரால் கர்ப்பம்! ஒலிம்பிக் தடகள வீராங்கனை புகார்!

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ நகரில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நாளை (5-ம் தேதி) தொடங்குகின்றன. இப்போட்டியில் அமெரிக்கா, சீனா, இந்தியா உட்பட 206 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்கின்றனர். தொடக்க விழா நிகழ்ச்சிகள் நாளை (இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 4.30 மணி) தொடங்குவதை முன்னிட்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் ஒலிம்பிக் கிராமத் துக்கு வந்தவண்ணம் உள்ளனர். அவர்களை பிரேசில் மக்கள் தங்கள் பாரம்பரிய நடனங்களை ஆடி வரவேற்று வருகின்றனர். இதனால் ரியோ நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
அதே சமயம் ஒலிம்பிக் போட்டிக்காக பிரத்யேகமாக ஒலிம்பிக் கிராமம் உருவாக்கப்பட்டு வீரர்கள் தங்குவதற்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது போட்டியாளர்கள் அங்கு வசிக்க முடியாத சூழல் இருப்பதாக காரணம் சொல்லப்பட்டுள்ளது. அடைப்பு ஏற்பட்ட கழிவறைகள், வெளியே தெரியும் வயர்கள், கசியும் குழாய்கள் மற்றும் விளக்கு வசதி இல்லாத படிகள் ஆகிய பிரச்சினைகள் இருப்பதாக பல்வேறு நாட்டு வீரர்களும் புகார் தெரிவித்து உள்ளனர்.
இந் நிலையில் புதிய பிரச்சினை ஒன்றை கிளப்பி உள்ளார் டேனிஷ் நீச்சல் வீராங்கனை அல்வில்டா ஜென்சன்.அல்வில்டா உள்ளூர் குறித்து தெரிந்து கொள்ளவும் பயிற்சி மேற்கொள்ளவும் கடந்த 12 ந்தேதியே ரியோடி ஜெனிரா வந்து விட்டார்.திங்களன்று பெண்கள் லேசர் ரேடியல் மருத்துவ பரிசோதனை நடத்தபட்டது அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்து உள்ளது. ஆனால் 27 வயதாகும் அல்விலா தான் கடந்த 3 மாதமாக பாலியல் உறவு வைத்து கொள்ளவில்லை என்றும் ,மாசுபட்ட நீரில் கலந்துள்ள உயிரணு மூலம் தான் கர்ப்பமானதாக நம்புவதாகவும் கூறி உள்ளார்.
“நான் முதல் நாள் கடலில் பயணம் செய்தபோதே அதில் ஆயிரக்கணக்கான ஆணூறைகள் மற்றும் ஊசிகள் நீரில் மிதப்பதை பார்த்தேன்.உண்மையில் அது மிக கேவலமாக இருந்தது. இதனை பார்த்ததும் எனக்கு மிக சங்கடமாக் இருந்தது. இதனால் நோய் ஏதாவது வரும் என நினைத்தேன் இப்படி கர்ப்பமாவேன் என நான் நினைக்கவில்லை” என கூறி உள்ளார்.
ரியோடி ஜெனிராவை சுற்றி உள்ள கடல் நீரில் கழிவுநீர் கலந்து நோய்கிருமிகள் அதிக அளவு உள்ளன. இதனால் அதிக அளவு மக்கள் பாதிக்கபடுகின்றனர் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.