ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா-வில் அசிஸ்டென்ட் ஜாப் ரெடி!

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா-வில் அசிஸ்டென்ட் ஜாப் ரெடி!

நமது நாட்டின் வங்கிகளின் கட்டுப்படுத்தும் அமைப்பாகவும், தேசப் பொருளாதாரத்தின் அடித்தளமாகவும் திகழும் பாரத ரிசர்வ் வங்கி பெரும்பாலும் ஆர்.பி.ஐ., என்ற பெயராலேயே அனைவராலும் அறியப்படுகிறது. பெருமைக்குரிய இந்த வங்கியில் காலியாக உள்ள 623 அசிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி உடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம்: ஆமதாபாத்தில் 19, பெங்களூருவில் 25, போபாலில் 25, புவனேஷ்வரில் 17, சண்டிகரில் 13, சென்னையில் 15, கவுகாத்தியில் 36, ஐதராபாத்தில் 16, ஜெய்பூரில் 13, ஜம்முவில் 23, கான்பூர் & லக்னோவில் 44, கோல்கட்டாவில் 23, மும்பையில் 264, நாக்பூரில் 15, புது டில்லியில் 47, பாட்னாவில் 15ம், திருவனந்தபுரம் / கொச்சியில்13ம் என மொத்தம் 623 காலியிடங்கள் உள்ளன.

வயது தகுதி: 2017 அக்., 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 20 – 28 வயது உடையவராக இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உரிய வயது சலுகை உள்ளது.

கல்வித் தகுதி: குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய வேர்டு பிராசசிங்கில் தகுதி தேவைப்படும்.

தேர்ச்சி முறை: பிரிலிமினரி மற்றும் மெயின் தேர்வு என இரண்டு கட்டமாக ஆன்லைன் தேர்வு நடத்தப்படும். இவற்றில் வெற்றி பெறுபவர்கள் மொழி தேர்வு மற்றும் இதர தேர்ச்சி முறைகள் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புவர்கள் http://ibps.sifyitest.com/rbiastoct17 என்ற இணையளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் 450 ரூபாய்.

கடைசி நாள்: 2017 நவ., 10.

விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!