ஜே.ஆர்.டி டாடா❤ மறைந்த நாளின்று !
டாடா என்ற ஒரு நிறுவனம் மட்டும் இந்தியாவில் இல்லையென்றால் இந்தியத் தொழில்துறை பல ஆண்டுகள் பின்னோக்கிய நிலையில் இருந்திருக்கும். அத்தகைய சக்தி வாய்ந்த நிறுவனத்தில் ஜே.ஆர்.டி.டாடா 53 வருடங்களாக தலைவராக நிறுவனத்தை நிர்வாகித்து வந்தார். அரை நூற்றாண்டு காலத்தில் பல தொழில்களை உருவாக்கி அரசங்கத்திற்கு அடுத்தபடியாக வேலை வாய்பை உருவாக்கி தந்தவர்.
இந்தியர் அனைவரும் டாடா என்ற நிறுத்தின் பெயரை கூற வைத்தவர். தொழில் துறையில் ஜே.ஆர்.டி.டாடா என்ற பெயரை கூறினால் அனைவரும் எழுந்து நிற்பர் அத்தகைய மரியாதை தொழில் துறையில் அவர் பெற்றிருந்தார். 1904 ஆம் ஆண்டு பிரான்சிஸ் பிறந்து பள்ளி படிப்பு அங்கே முடித்து கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் பட்டம் பயில வந்தஆவர் பாதியிலே அதை கைவிட்டு 21ம் வயதில் டாடா ஸ்டில் நிறுவனத்தில் சக ஊழியர்களுடன் வேலை செய்தார். தன்னுடைய அசாத்திய திறமையினால் அனைத்தையும் விரைவிலேயே கற்றுக்கொண்டவர் ஜே.ஆர்.டி.
1932ல் இந்தியாவில் முதன் முதலாக டாடா ஏர்லைன்ஸ் என்ற விமான சேவையை தொடக்கி அக்டோபர் 15ம்தேதி விண்ணில் பறந்தது அதை ஓட்டியவர் ஜே.ஆர்.டி தான். திறமையான இளைஞர்களை கண்டுபிடித்து அவர்களை டாடாவினுள் அழைத்து வந்து அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை நம்பி ஒப்படைப்பது இதுவே அவரது பல தொழில் வளர்ச்சிக்கு வெற்றியாக அமைந்தது. 1938ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தின் ஒட்டு மொத்த பொறுப்பேற்று இரண்டு தலைமுறை ஊழியர்கள் தலைவர்கள் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்து விலகாமல் டாடா நிறுவனங்களுக்கு மட்டுமின்றி இந்திய தொழில் துறைக்கே அவருடைய வழிகாட்டுதால் மிகப்பெரிய பலமாக அமைந்தது இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு உள்நாட்டு உற்பத்தி தேவை அதிகரிக்க அப்போதைய பிரதமர் நேருவுடன் இணைந்து இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க செய்தவர் ஜே.ஆர்.டி.
இந்திய தொழில் துறை வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்கிற்கு அவருக்கு 1992 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெறும் முதல் தொழில் அதிபர் ஜே.ஆர்.டி. தான். உள்நாட்டு வெளிநாட்டு சந்தைகளையும் அவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். சின்ன சிறு மாற்றம் கூட அவர் கண்ணில் இருந்து தப்பியதில்லை. ஒரு தொழிலில் வரும் லாபத்தை கொண்டு அடுத்த ஒரு தொழிலை உருவாக்கி பலருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடு்ப்பது தான் அவர் வழக்கமாக கொண்டிருந்தார். தொழில் துறையின் லாபத்தை விட அதன் மீது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிறந்த மதிப்பே உயர்ந்தது என்பார்.
இன்போசி்ஸ் தலைவர் நாராணமூர்த்தியின் துணைவியர் சுதா நாராயணன் ஆரம்ப காலத்தில் டாடா நிறுவனத்தில் தான் வேலை செய்தார் அந்த நிறுவனத்தை விட்டு நிற்கும் தருவாயில் ஜே.ஆர்.டி.யை அவர் சந்தித்தார் அப்பொழுது ஜே.ஆர்.டி. அவருக்கு வாழ்த்து கூறி நீ எந்த சமூகத்தால் பலனடைகிறாயே அதை அதே சமூகத்திற்கு திருப்பி அளிக்க வேண்டும் என்று கூறினார் அதுவே பின் நாளில் இன்போசீ்ஸ் அறக்கட்டளை உருவாக காரணமாக இருந்தது என்று சுதா நாராயணன் அவர் ஒரு பத்திரி்க்கையாளர் சந்திப்பில் கூறினார்.
ஜே.ஆர்.டி. தொழில் துறையில் மட்டுமின்றி சமூக நலனிலும் இந்தியாவின் மீதும் கடைசி வரை மிகுந்த அக்கரை கொண்ட மனிதராகவே நடந்து கொண்டார் இந்த சாதனை மனிதர்🙏🏼