மியூசிக் டைரக்டர் அருள்தேவ் வழங்கும் மியூசிக் தெரபி சேனல்!

மியூசிக் டைரக்டர் அருள்தேவ் வழங்கும் மியூசிக் தெரபி சேனல்!

‘பாகுபலி’ இசையமைப்பாளர் மரகதமணியுடன் ‘பாகுபலி2’வில் கீபோர்டு பிளேயராக பணியாற்றியவர் அருள்தேவ். நம் ஆந்தை சினிமா அப்டேட் குரூப்-பில் இருக்கும் இந்த அருள்தேவ் தாத்தா சந்தானம் ஆர்மோனியம் பிளேயர். இவர் அப்பா அக்கார்டின் சுவாமிநாதன். இவர் மனைவியின் தாத்தா தன்ராஜ் மாஸ்டர். அவர்கிட்டதான் ஏ.ஆர்.ரஹ்மான்ல இருந்து விஜய் வரை பல பிரபலங்கள் இசை கத்துக் கொண்டார்கள். அதனால இவருக்கும் மியூசிக்ல ஆர்வம் வந்து சென்னை வந்ததும் வித்யாசாகர் சார்கிட்ட கீபோர்டு பிளேயரா ஒர்க் பண்ண ஆரம்பிச்சார். ‘தில்’, ‘கில்லி’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘பேராண்மை’ வரை வித்யாசாகர் சார் இசையமைச்ச மாஸ் ஹீரோக்கள் படங்கள் அத்தனைக்கும் ஒர்க் பண்ணியிருக்கிறார்.

இப்படி ஸ்ட்ராங்கான பின்னணியுடன் வளர்ந்து வரும் இசையமைப்பாளர் அருள்தேவ் தமிழில் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் ஹீரோவாக நடித்த ‘போட்டா போட்டி’ மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி ‘கத்துக்குட்டி’, ‘பூவரசம் பீப்பி’, மிருகா உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இவரின் சில பாடல் வைரல் ஹிட். சரிகமா தயாரிப்பில் ‘கண்ணாலே பேசி பேசி கொல்லாதே’ பாடலை நவீனமாக்கி இசையமைத்திருந்தார் அருள்தேவ். 2. 4 மில்லியனுக்கும் மேலாகப் பார்க்கப்பட்டிருக்கிறது அந்தப் பாடல்.

இப்பேர்பட்ட இசையமைப்பாளர் இந்த கொரோனா கால ஊரடங்கின் போது மன உளைச்சலுக்கு ஆளாகி கொஞ்சம் சஞ்சலத்துடன் பொழுதைக் கடத்துவோரின் மன ஓட்டத்தை மாற்றி படுத்தும் நோக்கில் Mystic Mind என்ற யூ டியூப் கணக்கின் மூலம் அரிய இசைக் கோர்வைகளை மியூசிக் தெரபி பாணியில் வழங்கி வருகிறார், அவை ஒவ்வொன்றும் நூறு டாக்டர்களுக்கு சமமாக ஆறுதலைக் கொடுக்கிறது என்றால் அது மிகையல்ல.

இந்த யூ டியூப் சேனல் குறித்தும் மியூசிக் தெரபி குறித்தும் அருள்தேவ்-விடம் கேட்ட போது, “இசை.. காதுக்கு விருந்து.. சிந்தனைக்கு தெளிவு.. மனதுக்கு அருமருந்து… தளர்வான நேரத்தில் ஊக்குவிப்பு.. தவிப்பான நேரத்தில் ஆறுதல்.. களிப்பான நேரத்தில் உற்சாகமூட்டி.. களைத்த உழைப்பாளிக்கு களிப்பூட்டி… எல்லாவிதங்களிலும் மகிழ்விப்பது இசை ஒன்றே! மொழியே இல்லாத சூழலிலும் குழந்தையை தாலாட்டி தூங்கவைத்தும், மகுடிக்கு நாகத்தை மயங்க வைத்தும், காதலரை ஏங்க வைத்தும், வயல் வெளியில் பயிர் வளர உதவி செய்தும், நோய்க்கு மருந்தாக விளங்குவதையும் பார்க்கின்றோம். இசைக்கு வசப்பட்டதைப் போல வேறு எந்த கலைக்கும் உள்ளம் வசப்பட்டதாக வரலாறு இல்லை. தற்கால மருத்துவ முறைகளில் இசையின் பயன்பாடு ஏராளம். குறிப்பாக மனோதத்துவ மருத்துவத்திலும், மன வளர்ச்சி தேவைப்படுகிற சிறப்பு குழந்தைகளுக்கும் முக்கியமாக பயன்படுகிறது.

பாடலைப் பாட முயற்சிப்பது அல்லது கேட்பது மட்டுமல்ல, தாளங்களை ஒருவர் வாத்தியத்தில் வாசிக்க, அதை நோயாளிகள் எதிரில் பின்பற்றி வாசிப்பது என்பது ஆழ்மனக் கட்டுப்பாட்டை ஒரு சாராருக்கும் கை மூட்டுகளில் வலியோடு இருப்பவர்களுக்கு நிவாரணமும் தருகிறது என்பதை எல்லாம் நம் தாத்தா, அப்பா தொடங்கி பலரும் சொல்லைக் கேட்டு வருகிறோம்.

மியூசிக் தெரபி பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.. இசையின் மூலம் நோயை குணப்படுத்தக் கூடிய ஒருவகை சிகிச்சைதான் இது. நோயை மட்டுமின்றி மனிதனுக்கு தேவைப்படுகிற ஒய்வு, நினைவாற்றல் போன்ற ஆரோக்கியம் சார்ந்த தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடிய சிகிச்சையும் இந்த தெரபிதான்.மனதுக்கும், மூளைக்கும் இதமான வகையில் மெல்லிய இசைக்கருவிகளால் வாசிக்கப்பட்ட வருடும் இசை. பாடல் வரிகள் இல்லாத இசை கருவிகளால் மட்டுமே வாசிக்கபடும் இது போன்ற இசைக் கோர்வையால் கவன திறன் அதிகரிக்கும். நினைவாற்றல் பெருகும். மன சோர்வு நீங்கும், கொஞ்சம் மிகைப்படுத்துதல் போல் தொன்றினாலும் சர்க்கரை நோய் குணமாக, பயம் மற்றும் கவலைகள் நீங்க, இதயத்தின் செயல்பாடு சீராக, மன அமைதி பெற, கருவுற்று இருக்கும் பெண்களுக்காக, தூக்கம் மற்றும் ஒய்வு கிடைக்க, மன அழுத்தம் மற்றும் பளு குறைய, அறிவு மற்றும் படைப்பாற்றல் திறன் ஒங்க, வலி குணமாக, தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி நீங்க, குழந்தை அழுவதை நிறுத்த, ஓய்வை நிம்மதியாக அனுபவிக்க, குழந்தை தூங்குவதற்கு போன்ற நன்மைகளை செய்கிறது இந்த மியூசிக் தெரபி.. இப்படி எல்லோரிடமும் விலாவாரியாக சொல்வதை விட உணர வைத்தால் என்ன? என்று யோசித்து இந்த யூ டியூப் சேனல் மூலம் என் படைப்புகளை வழங்கி வருகிறேன்.. ஒரு முறை கேட்டுத்தான் பாருங்களேன்’ என்று சொல்லி ’Thanks for listening to my unrestricted music creation which is not subject to any restrictions. Kindly continue to give your support so that it will inspire me to work harder on my music – என்ற குறிப்புடன்
Pl Note ►My socials Addresses :
Wikipedia :- https://en.wikipedia.org/wiki/Aruldev
Twitter :- @ArulDevofficial
Instagram :-aruldevofficial  

Facebook Page :-  @ArulDevOfficial   என்று டீடெய்லுடன் அனுப்பி இருக்கும் அருள்தேவ்-வின் 3 hours of Relaxing Ambient Music for Stress Relief லிங்க் இதோ

https://www.youtube.com/watch?v=vrgCbqRmJ8s&t=1554s

error: Content is protected !!