ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் டிகிரி முடித்தவர்களுக்கு அசிஸ்டென்ட் ஜாப்!
ரிசர்வ் வங்கியில் அசிஸ்டன்ட் பிரிவில் 926 காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: மும்பை 419, சென்னை 67, கான்பூர் & லக்னோ 63, கவுகாத்தி 55, போபால் 42, ஜெய்பூர் 37, சண்டிகார் 35, டில்லி 34, புவனேஷ்வர் 28, ஐதராபாத் 25, பாட்னா 24, பெங்களூரு 21, திருவனந்தபுரம் & கொச்சி 20, ஆமதாபாத் 19, நாக்பூர் 13, ஜம்மு 13, கோல்கட்டா 11 என மொத்தம் 926 காலியிடங்கள் உள்ளன.
வயது: 1.12.2019 அடிப்படையில் 20 -28 வயதுக்குள் இருக்க வேண்டும். 2.12.1991 – 1.12.1999க்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு சலுகை உள்ளது.
கல்வித்தகுதி: குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் என இரண்டு கட்ட ஆன்லைன் எழுத்துத்தேர்வு, மொழி தேர்வு ஆகியவை அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, நெல்லை மற்றும் வேலுார்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 450. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 50.
கடைசிநாள்: 16.1.2020
விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு