வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்தது ரிசர்வ் வங்கி.. இனி பரிவர்த்தனை செய்ய முடியாது!

வங்கிகளின் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் விதிகளை மனதில் கொண்டு, வங்கிகளின் குறைபாடுகளின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி அடிக்கடி நடவடிக்கை எடுக்கும். அந்த வரிசையில் இந்த வாரத்தில் மூன்று வங்கிகளின் உரிமங்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. அதே நேரத்தில், பல வங்கிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட வங்கியை சேர்ந்த வாடிக்கையாளர்களால் வங்கியில் பணம் எடுக்க முடியாது.
திருவனந்தபுரம் அனந்தசயனம் கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக செப்டம்பர் 21ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. தற்போது மேலும், மல்லிகார்ஜுனா பட்டான கூட்டுறவு வங்கி நியாமிதா (மஸ்கி, கர்நாடகா) மற்றும் தேசிய கூட்டுறவு வங்கி லிமிடெட் (பஹ்ரைச், உபி) ஆகிய இரண்டு வங்கிகளின் உரிமங்களையும் மத்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. அவர்களின் வங்கி வணிகம் தடை செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, வங்கிகள் தங்கள் வங்கித் தொழிலைத் தொடர அனுமதித்தால், அது பொது நலனைப் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கிகளுக்கு போதிய மூலதனம் மற்றும் வருவாய் ஈட்டும் திறன் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் இந்த இரண்டு வங்கிகளும் வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949ன் பிரிவு 56, பிரிவு 11 (1) மற்றும் பிரிவு 22 (3)(D) ஆகியவற்றின் விதிகளுக்கு இணங்கத் தவறிவிட்டன. இது மட்டுமல்லாமல், இந்த வங்கியால் அதன் முழுப் பணத்தையும் செலுத்த முடியவில்லை. இவை வைப்பாளர்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பவை என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
உரிமம் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் வங்கி வணிகத்தை மூடுவதற்கான அறிவிப்பு வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், வங்கி இன்னும் வங்கி அல்லாத நிறுவனமாக செயல்பட முடியும். வங்கியின் உறுப்பினர்கள் அல்லாதவர்களின் டெபாசிட்கள் செய்ய உடனடித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி, இந்த வங்கி அதன் உறுப்பினர்கள் அல்லாதவர்களின் செலுத்தப்படாத மற்றும் உரிமை கோரப்படாத தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும்.
செப்டம்பர் 22 முதல் மல்லிகார்ஜுன் பட்டான கூட்டுறவு வங்கி நியாமிதா மற்றும் தேசிய கூட்டுறவு வங்கி லிமிடெட் ஆகியவற்றின் வங்கி வணிகத்தை ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. டெபாசிட்களை ஏற்றுக்கொள்வது மற்றும் டெபாசிட்களை திருப்பிச் செலுத்துவதும் இதில் அடங்கும். டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) விதிமுறைகளின் கீழ், ஒவ்வொரு டெபாசிட்டரும் ரூ. 5 லட்சம் வரை தனது டெபாசிட்களை கோருவதற்கு உரிமை பெறுவார்களாக்கும்.
அபராதம் விதிக்கப்பட்ட 4 வங்கிகள் :
“டெபாசிட் கணக்குகளை பராமரித்தல் – முதன்மை கூட்டுறவு வங்கிகள்” தொடர்பான வழிகாட்டுதல்களுக்கு இணங்கத் தவறியதற்காக ஸ்ரீ வர்ணா கூட்டுறவு வங்கி லிமிடெட் (கோலாப்பூர், மகாராஷ்டிரா) மீது ரிசர்வ் வங்கி ரூ. 1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
கடன்கள் மற்றும் முன்பணங்கள் தொடர்பான விதிகளை மீறியதற்காக HCBL கூட்டுறவு வங்கி லிமிடெட் (லக்னோ, UP) மீது ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தி ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட் (மும்பை, மகாராஷ்டிரா) “டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதித் திட்டம், 2014” தொடர்பான வழிமுறைகளை பின்பற்றாததற்காக ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தி சிட்டிசன்ஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட் (ஜம்மு) க்கு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடவடிக்கை வங்கிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே நடைபெறும் பரிவர்த்தனைகளை பாதிக்காது என்றும் கூறியுள்ளது