Exclusive

தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ரவி கண்ணன் மகசேசே விருது பெறுகிறார்!.

லகளவில் புகழ்பெற்ற புற்றுநோய் சிகிச்சை மருத்துவரும் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கச்சார் கேன்சர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனருமான தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ரவி கண்ணனுக்கு ‘ராமோன் மகசேசே’ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர் சென்னையைச் சேர்ந்தவர். இந்திய விமானப் படை வீரரின் மகன் ஆவார். மருத்துவம் படித்துவிட்டு சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தில் 15 ஆண்டுகள் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றியும் இருக்கிறார். இயற்கைப் பேரழிவுகள், குண்டுவெடிப்புகள், பதற்ற நிலை போன்ற அசாதாரண சூழல் அசாமில் நிலவிய 2007-ம் ஆண்டில் அவர் தனது பிறந்த ஊரான சென்னையில் இருந்து சில்சார் புற்றுநோய் மருத்துவமனையில் இயக்குநராக பணியாற்ற இடம்பெயர்ந்தாராக்கும்.

ஆசியாவின் நோபல் பரிசு’ என்று அழைக்கப்படும் ‘ராமோன் மகசேசே’ விருது, ஒவ்வொரு ஆண்டும் ஆசிய நாடுகளில் ஒருமைப்பாடு, துணிச்சல் மற்றும் தன்னலமற்ற சேவை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் தனிநபர்களை கவுரவிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான ‘ராமோன் மக்சேசே’ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.  செப்டம்பர் 1, 2023 அன்று 2023ம் ஆண்டுக்கான  ‘ராமோன் மக்சேசே’ விருது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி,  65வது ரமோன் மகசேசே விருதுகள்  4 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.  ராமன் மகசேசே விருது, விதிவிலக்கான மனப்பான்மை மற்றும் செல்வாக்கு மிக்க தலைமைத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குறிப்பிடத்தக்க பாராட்டு ஆகும். இந்த ஆண்டு, விழாவின் 65 வது பதிப்பில், நான்கு ஆசியர்களுக்கு ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டது, சர் ஃபசில் ஹசன் அபேட், அன்னை தெரசா, தலாய் லாமா, சத்யஜித் ரே மற்றும் பலர் வரிசையில் இணைந்தனர். அவர்கள் வங்காளதேசத்தைச் சேர்ந்த கோர்வி ரக்ஷாந்த், திமோர்-லெஸ்டீயைச் சேர்ந்த யூஜெனியோ லெமோஸ், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மிரியம் கரோனல்-ஃபெரர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ரவி கண்ணன்  ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.  இந்த விருது ஒரு சான்றிதழும், மறைந்த ஜனாதிபதியின் உருவம் கொண்ட பதக்கமும், அமெரிக்க டாலர் 50,000 ரொக்கப் பரிசையும் கொண்டுள்ளது.

இனி சிறப்புத் தகவல்கள்

டாக்டர் ரவி கண்ணன் மருத்துவ வட்டாரத்தில் டாக்டர் கண்ணன் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இவர் அவ்வப்போது சென்னைக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் கண்ணன் எப்படி அஸ்ஸாமுக்குச் சென்றார் என்பது தெரியுமா?.

இந்தியா-பங்களாதேஷ் நஎல்லையில், அஸ்ஸாம் மாநிலத்தின் தென்பகுதியில் அமைந்திருக்கிறது பாராக் பள்ளத்தாக்கு. இப்பகுதியில் புற்றுநோய் வேகமாக பரவிக்கொண்டிருந்தது. இதற்கு காரணம் அப்பகுதி மக்கள் புகையிலையை அதிகமாக பயன்படுத்துவதுதான். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து சிகிச்சைக்காக ஒரு நல்ல மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்றால், 350 கி.மீ. தொலைவில் இருக்கும் குவஹாத்திக்குதான் செல்லவேண்டும். சாலை வசதிகள் சரியில்லாத மலைப்பிரதேசத்தில் சிகிச்சைக்காக அவர்கள் குறைந்தது ஒரு நாள் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட பாராக் பகுதியில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை ஒன்று அவசியம் என்று கருதிய சில சுதந்திரமான தனிமனிதர்கள் சமூக அக்கறையுடன் 1992-ம் ஆண்டில், அஸ்ஸாம் மாநிலத்தின் கச்சார் மாவட்டத்தின் தலைநகரான சில்சாரில், கச்சார் கேன்சர் ஹாஸ்பிட்டல் சொசைட்டி’ (Cachar Cancer Hospital Society) என்று ஒரு மருத்துவமனையை தொடங்கினர்.

இந்த மருத்துவமனைக்கு பொருளாதார பலம் இல்லாததால் போதுமான வசதிகளைக் கொண்டுவர இயலவில்லை. மருத்துவமனைக்கு நல்ல மருத்துவர்களையும் பணியில் அமர்த்த முடியவில்லை. பெரளவில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில்தான், 2007-ம் ஆண்டு டாக்டர் கண்ணனுக்கு கச்சார் புற்றுநோய் மருத்துவமனையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. கச்சார் மருத்துவமனையில் பணிக்குச் சேர்ந்த டாக்டர் கண்ணன், அந்தப் பகுதியில் புற்றுநோயின் பாதிப்பு பற்றியும் அப்பகுதி மக்களுக்கு தனது மருத்துவ சேவை எந்தளவுக்கு அவசியமானது என்பதையும் உணர்ந்து செயல்பட்டார்.

டாக்டர் கண்ணன், அஸ்ஸாம் மக்களுக்கு மிகவும் தரமான புற்றுநோய் சிகிச்சையை இலவசமாக அளித்தார். டாக்டர் கண்ணனின் மிகவும் கடுமையான உழைப்பாலும் முயற்சியாலும், அந்த மருத்துவமனை, கச்சார் கேன்சர் ஹாஸ்பிட்டல் அண்ட் ரிசர்ச் சென்டர் (Cachar Cancer Hospital and Research Centre – CCHRC) ஆக மாறியது. தற்போது இந்த மருத்துவமனையில் டாக்டர் ரவி கண்ணனின் முயற்சியால், ஆண்டுக்கு 3500 புதிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு 14,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 1300 புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பராக் பள்ளத்தாக்கில் ஏழை, எளிய மக்களுக்கு உலகத் தரத்தில் புற்றுநோய் கிசிக்கை கிடைக்கிறது.

இங்கே ஆயிரக்கணக்கானோர் புற்றுநோயின் தொடக்கநிலையிலேயே சிகிச்சை பெற்று முற்றிலும் மீண்டிருக்கிறார்கள். அஸ்ஸாம் மட்டுமின்றி திரிபுரா, மேகாலயா, மணிப்பூர், மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்களுக்கான முக்கியமான புற்றுநோய் சிகிச்சை மையமாக கச்சார் கேன்சர் ஹாஸ்பிட்டல் அண்ட் ரிசர்ச் சென்டர் செயலாற்றிவருகிறது. இங்கே வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு முற்றிலும் இலவச சிகிச்சை; நடுத்தர மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை; மலிவு விலையில் மருந்துகள், நோயாளிகளுக்கு இலவச உணவு, மற்றவர்களுக்கும் மலிவு விலையில் உணவு, மிகக் குறைந்த கட்டணத்தில் உணவுடன்கூடிய தங்கும் வசதி என அனைத்தையும் சாத்தியப்படுத்தியிருக்கிறார் டாக்டர் ரவி கண்ணன்.

அதுமட்டுமில்லாமல், நோயாளி சிகிச்சை பெறும்போது அவர் உடனிருப்போர், தினக் கூலி அடிப்படையில் அங்கே பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். சிகிச்சை பெற்றுச் செல்லும் நோயாளிகளின் இல்லத்துக்கே சென்று அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று தொடர்ந்து கவனிக்கிறார்கள். மருத்துவமனைக்கு வர முடியாத நோயாளிகளின் வீடுகளைத் தேடிச் சென்று சிகிச்சை செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது இந்த மருத்துவமனை இந்தியாவின் மிக முக்கியமான கிராமப்புற புற்றுநோய் கிசிச்சை மருத்துவமனையாக விளங்குகிறது.

இது குறித்து டாக்டர் கண்ணன் கூறுகையில், எங்களிடம், அர்ப்பணிப்புடன் இயங்கும் ஒரு குழு இருக்கிறது. வேறு ஏதாவது பெருநகரத்தில் நல்ல சம்பளத்தில் பணியாற்றாமல், இங்கே சேவை நோக்குடன் அவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் நோயிலிருந்து குணமாகி, மகிழ்ச்சியுடன் சிந்தும் அந்தப் புன்னகைதான் எங்களுக்கான திருப்தி. அந்த உணர்வை நிச்சயம் வார்த்தைகளால் விவரிக்க இயலாது” என்று நெகிழ்ச்சியாக கூறினார்

மேலும் மருத்துவத் துறையில் சிறந்த பங்காற்றியதற்காக இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை 2020-ம் ஆண்டில் மருத்துவர் ரவி கண்ணன் பெற்றுள்ளார். தற்போது மகசேசே விருது பெற்றுள்ளது தன்னுடைய ஒருவரின் சேவைக்கானது அல்ல; தன்னுடன் சேர்ந்து பணியாற்றிய அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்குமான விருது என்று தெரிவித்துள்ளார் மருத்துவர் ரவி கண்ணன்.

admin

Recent Posts

. ‘இறைவன்’ படம் எல்லாருக்கும் பிடிக்கும் – ஜெயம் ரவி!

பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் ஐ. அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா…

10 mins ago

ஷாருக்கானின் ‘ஜவான்’ 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது!

ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் வெளியான 19 நாட்களில் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை…

31 mins ago

தமிழ்நாடு முழுவதும் தொழிற் சாலைகளில் வேலை நிறுத்தப் போராட்டம்!

தமிழகத்தில் பீக் ஹவர் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், மின்சார நிலைக் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்,…

48 mins ago

மீண்டும் இந்து மகா சமுத்திரத்தில் சீனா உளவுக்கப்பல்!

ஒரு காலத்தில் இந்தியாவின் தெற்கே முக்கடலும் சங்கமிக்கும் இந்து மகா சமுத்திரம் அமைதி நிலவும் மண்டலமாக இருந்தது. இரண்டு உலகப்…

3 hours ago

அதிமுக – பாஜக இடையிலான கூட்டணி முறிவு -பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், கட்சிக்குள் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறைகள் என…

3 hours ago

கனடா குடியுரிமையை விரும்பும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகம்!

கனடாவில் சீக்கியச் சமயத் தலைவரும் காலிஸ்தான் தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் (Hardeep Singh Nijjar) கொலை விவகாரத்தால் கனடாவிற்கும்…

4 hours ago

This website uses cookies.