வைஜெயந்தி ஐபிஎஸ் பாணியில் அதிரடி காட்டியதால் இன்று காலை கைதான ரஞ்சனா நாச்சியார் மாலையில் விடுதலை.. நடந்தது என்ன?

வைஜெயந்தி ஐபிஎஸ் பாணியில் அதிரடி காட்டியதால் இன்று காலை கைதான ரஞ்சனா நாச்சியார் மாலையில் விடுதலை.. நடந்தது என்ன?

சென்னைப் பேருந்தில் படிகட்டில் பயணித்த மாணவர்களை தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்ட நடிகை ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி ராம்குமார் உத்தரவிட்டுள்ளார்.!

அண்மையில் சென்னை அருகே கெருகம்பாக்கம் பகுதியில் சென்ற மாநகர அரசுப் பேருந்தில் வழக்கம் போல் படியிலும் , ஜன்னலிலும் தொங்கியபடி மாணவர்கள் சிலர் பயணித்தனர். அப்போது அந்த வழியாக தனது வாகனத்தில் வந்த நடிகையும், பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் அந்த பேருந்தை ஓவர்டேக் செய்து வழிமறித்து நடு சாலையில் நிறுத்தியுள்ளார். பின்னர் மாணவர்களை சரமாரியாகத் திட்டியுள்ளார். படியில் தொங்கியபடி பயணம் செய்ததைக் கண்டித்த அவர், மாணவர்களை இறக்கிவிட்டதோடு மட்டுமல்லாது அவர்களைத் தாக்கியும் உள்ளார். அத்துட பேருந்து ஓட்டுநர், நடத்துநரை ஒருமையில் பேசி சண்டை இழுத்துள்ளார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் நடிகை ரஞ்சனா மீது அரசுப் பேருந்து ஓட்டுநர் சரவணன் போலீஸில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் இன்று (சனிக்கிழமை) காலை மாங்காடு போலீஸார் ரஞ்சனாவை அவரது வீட்டுக்கே சென்று கைது செய்தனர். மாணவர்களைத் தாக்கியது, அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடந்துஅவரை கைது செய்யவந்த காவல்துறையினருடனும் நடிகை வாக்குவாதம் செய்தார்.

கைது ஆணை இருக்கிறதா? என்ன காரணத்துக்காக கைது செய்கிறீர்கள்? என்றெல்லாம் வினவினார். அந்தக் காட்சிகளும் இணையத்தில் வெளியான நிலையில் ரஞ்சானாவை கைது செய்த போலீசார் ஸ்ரீபெரும்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அப்போது ரஞ்சனா ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை நீதிபதி ராம்குமார் விசாரணை செய்தார்.

நடிகை ரஞ்சானா தரப்பில் மாணவர்களின் உயிர் மேல் உள்ள அக்கறையிலே பேருந்தை நிறுத்தி வாக்குவாதம் செய்தார். தன் குழந்தையை போல் பாவித்து தான் மாணவர்களை அடித்தார். உயிர் சேதத்தை தவிர்க்கவே தாய் போன்று வாக்குவாதம் செய்தார். சாலையில் இருந்த பொதுமக்கள் அனைவரும் ரஞ்சனாவின் செயலை பாராட்டினர். படியில் பயணம் செய்தவர்களை பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் காவல்நிலையத்தில் நிறுத்தி இருக்க வேண்டும். ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் குற்றங்களை மறைக்கவும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது . ரஞ்சனாவிற்கு 2 பெண் குழந்தைகள் உள்ளதால் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம்குமார் ஒரு தாய் இப்படித்தான் பேசுவார்களா என்று காட்டமாக கேள்வி எழுப்பினாலும்.ரஞ்சனா 40 நாட்கள் காலை மாலை மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் உடனடி ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

error: Content is protected !!