ரங்கோலி – விமர்சனம்!

நம் தமிழ் சினிமாவில் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஹீரோ, ஹீரோயினாக சித்தரிப்பது வாடிக்கையாகி விட்டது. மாணவப் பருவத்தில் உள்ளோர் காதலில் விழுவதில் சினிமாவின் தாக்கம் நிச்சயமாக உள்ளது. ஏனென்றால், மாணவர்கள் பெற்றோரைவிட தங்களின் நண்பர்களுடன்தான் அதிக நேரம் இருக்கிறார்கள். நண்பர்களிடம்தான் மனம்விட்டு பேசுகிறார்கள். அப்படிப் பேசும்போது சினிமாதான் அவர்களின் முக்கியமான பேசுபொருளாக இருக்கிறது இப்படியான சூழலில் ரங்கோலி படமும் பள்ளி மாணவர்கள் பற்றிய கதைதான் ..நல்லவேளையாக இதில் காதல் கத்தரிகாவை முன்னிலைப்படுத்தாமல் பக்காவான ஒரு பள்ளி மாணாக்கர் வாழ்க்கைக் கதையாக. டைரக்டர் வாலி மோகன்தாஸ் உருவாக்கி இருக் கிறார் . ஆனால் எந்த பள்ளியில் படித்தாலும் ஆர்வமாக படிக்கும் மாணவன் வெற்றி பெற்றே தீருவான் என்பதை இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்.
கதை என்னவென்றால் சலவை. தொழிலாளி ஆடுகளம் முருகதாஸ் கார்ப்பரேசன் பள்ளியில் படிக்கும் தன் மகன் சத்யாவை (ஹம்ரேஷ்) சி பி எஸ் இ பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க ஆசைப்படுகிறார். அதற்கு போதிய வருமானம் இல்லாத நிலையில் குடும்பமே வேலைக்கு சென்று படிக்க வைக்கிறது. ஆனால், நாயகன் ஹம்ரேஷுக்கு அதில் விருப்பம் இல்லை, இருந்தாலும் தந்தைக்காக அவர் சேர்க்கும் தனியார் பள்ளியில் சேர்ந்து படிப்பவர், அங்குள்ள சக மாணவர்களால் மட்ட்மாக சீண்டப்படுகிறார். இருந்தாலும் தனக்கு பிடித்த பெண் பிரார்த்தனா அதே பள்ளியில் படிப்பதால் அனைத்தையும் சகித்துக்கொண்டு அங்கேயே படிப்பை தொடர்கிறார். இதற்கிடையே, தமிழ் பாடத்தை தவிர மற்ற பாடங்களில் சரியாக படிக்க முடியாமல் திணறும் ஹமரேஷை, அப்பள்ளியில் இருந்து நீக்கும் முயற்சியில் தலைமை ஆசிரியர் ஈடுபடுகிறார். ஆனால், தமிழ் ஆசிரியரின் ஆதரவால் அது நடக்காமல் இருக்க, ஹமரேஷும் படிப்பில் முன்னேற்றம் அடைகிறார். ஆனால் ஒரு கட்டத்தில் பார்வதியை சத்யா காதலிப்பதாக ரெஸ்ட் ரூம் சுவற்றில் எழுதி இருப்பது புகார் ஆகி சத்யாவை பள்ளியை விட்டு அனுப்ப பிரின்ஸ் பால் முடிவு செய்கிறார் . அவரது காலில் விழுந்து சத்யா மன்னிப்பு கேட்பதால் மன்னிக்கிறார்.. அதன் பின்னர் ஒரு கட்டத்தில் ஹம்ரேஷ் சக.மாணவன் ஒருவனை அடிக்கிறார். அதன் பிறகு நடப்பது என்ன என்பதற்கு கிளைமாக்ஸில் கேள்வி கேட்பதுதான் ரங்கோலி.
புதுமுக ஹீரோ சத்யா கதாபாத்திரத்தில் அறிமுகமாகியிருக்கும் ஹம்ரேஷ் துடிப்பும் சுறுசுறுப்பும் நிறைந்து மனதில் இடம்.பிடிக்கிறார் . கார்ப்பரேஷன் பள்ளியிலிருந்து கான்வென்ட் ஸ்கூலுக்கு மாறும் மாணவனுடைய மனநிலை உளவியல் ரீதியாக கேஷூவலாக எக்ஸ்போஸ் மனதில் நிற்கிறார். ஆனால் பல சீன்களில் ஓட்டம் ஓட்டம் என நண்பர்களுடன்.ஜாகிங் செய்துக் கொண்டேயிருக்கிறார் .ஆனால் இந்த சின்ன வயதில் ஏன் .முறைப்பாகவே காட்ட படுகிறார் என்று தெரியவில்லை..இவருக்கு துணையாக நடித்த சக மாணவர்களும், காதலியாக வரும் பிரார்த்தனாவும் சிறப்பாக நடித்து கதைக்கும் படத்திற்கும் வலு சேர்த்து இருக்கின்றனர். ஏழைக் குடும்பம் என்றாலே எப்பொழுதும் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு பஞ்சப்பாட்டு படுதானே இருக்கும். ஆனால் இந்தப் படத்திலோஅப்பா ரோலில் வரும் ஆடுகளம் முருகதாஸ் அம்மா சாய் ஸ்ரீ மற்றும் மூத்த மகள் அக்ஷயா ஹரிஹரன் ஆகியோர் எல்லா சூழலிலும் ஸ்போர்ட்டிவாகவே அப்ரோச் செய்வது ரசிக்க வைக்கிறது .
கேமராமேன் மருதநாயகத்தின் ஒர்க் கதைக்கு ஏற்றபடி பயணித்து காட்சிகளை ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறது. இசையமைப்பாளர் சக்ரவர்த்தியின் இசையில் பாடல்கள் கேட்டவுடன் மறந்துவிடுகிறது.. ஆனால். பின்னணி இசை திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது.
பள்ளி மாணவர்களை மையப்படுத்திய கதை என்றால் என்னவெல்லாம் இருக்குமோ அவை எல்லாமே இதிலும் இருக்கிறது. அதே சமயம், இந்தக் கல்விக் கூடங்களில் நிகழும் அரசியல் பற்றி பேசியிருக்கும் இயக்குநர் வாலி மோகன் தாஸ், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் இவற்றில் மாணவர்களுக்கு நல்ல கல்வியை கொடுப்பது எது? என்ற விவாதத்தையும் நடத்தி முத்தாய்ப்பாக முரண்பாடான கிளைமாக்ஸைக் கொடுத்து ஏமாற்றி விட்டார்கள்..
மொத்தத்தில் – இந்த ரங்கோலியில் கிளைமாஸால் கலரில்லாமல் போய் விட்டது.
மார்க் 2.25/5