ராகுல் காந்தியின் நள்ளிரவு லாரி சவாரி: காரணம் என்ன?
நாம் அன்றாடம் இருசக்கர வாகனத்திலோ மகிழுந்துவிலோ தார் சாலையில் பயணம் செய்கிறோம். அப்படி பயணிக்கும்போது ஏகப்பட்ட லாரிகளை நம்மால் கடந்துசெல்ல முடியும். ஏகப்பட்ட லாரிகள் நம்மை கடந்துசெல்லும். அப்போதெல்லாம் நாம் லாரியை எதோ எமவாகனம் என்பது போல கேவலமான மிரட்சியான பார்வையை உதிர்த்து செல்கிறோம். இந்த லாரிக்காரனுங்க இருக்காங்களே… அவனுங்கனால தான் ரோடே நாசமா போவுது… என்று ஏகப்பட்ட இளக்காரச் சொற்கள் அவர்களை நோக்கி அசால்ட்டாக வீசிச் செல்கிறோம். ஆனால் அந்த லாரி டிரைவர்கள் – டிராபிக் போலீஸ் கை நீட்டும் போதெல்லாம் மனதில் பகீர் என்ற உணர்வு ஏற்படும். யாரோ ஒருவர் ஏற்றிய தவறான சரக்குகளுக்கு, இவர்கள் கைகட்டி பதில் சொல்ல வேண்டும். இவர்கள் உடனடியாக குடும்பத்தினரின் பக்கத்தில் இருக்க வேண்டிய நேரத்தில், ஆயிரம் கிலோமீட்டருக்கு அந்தப்பக்கம் இருப்பார்கள். குடும்பத்தை நினைத்து, மனம் மட்டும் திக் திக் என்று அடித்துக் கொள்ளும். யாருமே இல்லாத நடு காட்டில் வண்டி ஆக்ஸில் உடைந்து போவதெல்லாம் ரொம்பக்கொடுமை. இதெல்லாம் லாரி டிரைவர்கள் தினம் தினம் அனுபவிக்கும் கொடுமை. யாருமே விரும்பி இந்த தொழிலுக்கு வருவதில்லை. காலத்தின் கட்டாயத்தால் உள்ளே வந்தவர்கள் தான் பெரும்பாலும். லாரி டிரைவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முன்னர் பணத்தை எடுத்து வைத்தால், அதெல்லாம் தூசி அளவுக்கு கூட நிகராகாது. காட்டுக்குள், டிரைவர் கேபின் மீது ஏறிக்குதிப்பாங்க. என்ன நடக்குதுன்னு கிளீனர் விட்டு பார்க்கச்சொன்னால், கழுத்தை அறுத்துப்போட்டு போயிட்டே இருப்பானுங்க திருடனுங்க. அவர்களால் நிம்மதியாக குடும்ப வாழ்க்கை அமைக்க முடியாது. வாழ்வில் பாதி நேரம் வெளியூர்களில் வண்டி ஓட்டி பயணம் செய்வதிலேயே கழிந்துவிடும். இதன் பெரிய குறை அவர்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தை சரிவர கவனிக்க முடியாது.மொழி புரியாத இடங்களில் சிக்கி தவிக்க வேண்டும். வாகனங்களில் ஏற்றி செல்லும் சரக்கின் எடை, வித்தியாசமாக இருந்தால், இடையில் நிறுத்தப்படுவார்கள். போதிய ஆவணங்கள் இல்லாமல் காவல்துறையால் தண்டிக்கப்படுவார்கள். எவனோ அனுப்பிய பொருளுக்கு, இவங்க கை, காலில் விழுந்து புலம்ப வேண்டும். லாரி டிரைவர்களுடைய வாழ்க்கை மிகவும் பரிதாபமானது. இச்சூழலில் : காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை பின்னிரவில் டெல்லியில் இருந்து சண்டிகர் வரை லாரியில் பயணம் செய்தார். லாரி ஓட்டுநர்களுடன் ராகுல் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லாரி போக்குவரத்து நடைபெறவில்லை என்றால் நாம் அன்றாடம் வாங்கும் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமல்லாமல் கம்ப்யூட்டர் கால்குலேட்டர் என்று எதுவுமே நமக்கு சரியான நேரத்தில் கிடைக்காது தீப்பெட்டி முதல் டிஜிட்டல் விஷயங்கள் வரை நாம் லாரிகளை தான் நம்பி இருக்கிறோம். அதுவும் அவர்களுக்கு வேலை என்பது மிகவும் சவாலானது நித்தமும் கத்தி மேல் நடப்பது போன்று அவர்கள் வாழ்க்கை அமைந்து விடுகிறது. டூவீலர் அல்லது சிறிய காரியம் வைத்துக்கொண்டு நாம் தெருக்களிலே திரும்ப படா தபாடு படுகிறோம் ஆனால் அவர்களைப் பொருத்தவரை 14 வயது 32 வீலர் கன்டைனர் டபுள் கண்டனர் என்று எக்கச்சக்கமான கனரக வாகனங்கள் இருக்கிறது அதை லாவகமாக கொண்டு செல்ல வேண்டும் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அவர்கள் வாழ்வு அப்படியே முடிந்து விடும்.
இப்படியான நிலையில் டெல்லியில் இருந்து ஆம்லா சென்ற லாரி ஓட்டுநர்களுக்கு எல்லாம் ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களைக் கடந்து சென்ற, அவர்கள் கடந்து சென்ற லாரி ஒன்றில் ராகுல் காந்தி ஓட்டுநருக்கு அருகில் இருந்து பயணம் செய்து கொண்டிருந்தார். லாரி ஓட்டுநர்களின் பிரச்சினைகள் அறியவும், அவர்களின் மனதின் குரலைக் கேட்கவும் டெல்லியிலிருந்து சண்டிகர் வரை ராகுல் காந்தி இந்தப் பின்னிரவு பயணத்தை மேற்கொண்டார்.
இதுகுறித்த வீடியோவை காங்கிரஸ் கட்சி அதன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், “ராகுல் காந்தி லாரி டிரைவர்களுடன் பயணித்து, அவர்களின் பிரச்சினைகளை அறிந்துகொண்டார். அவர் டெல்லியில் இருந்து சண்டிகருக்கு பயணம் செய்தார். ஊடகங்களின் தகவல்படி, இந்திய சாலைகளில் சுமார் 9 லட்சம் லாரி டிரைவர்கள் பயணித்தபடி இருக்கின்றனர். அவர்களுக்கும் சொந்தப் பிரச்சினைகள் உள்ளன. அவர்களின் மனதின் குரலை கேட்கும் வேலையை ராகுல் காந்தி செய்தார்” என்று தெரிவித்துள்ளது. அதேபோல் அவர் லாரியினுள் இருக்கும் படங்களைப் பகிர்ந்து “உங்கள் மத்தியில் உங்கள் ராகுல்” என்று பதிவிட்டுள்ளது.
முன்னதாக, இந்த மாதத்தின் தொடக்கத்தில கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி, பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழக பேருந்து நிறுத்தம் ஒன்றில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுடன் அவர் உரையாடினார். அதேபோல் பேருந்து ஒன்றில் பயணம் செய்து பெண் பயணிகளிடமும் உரையாடினார். கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தின்போது, உணவு விநியோகிக்கும் தொழிலாளர்களுடனும் உரையாடினார். அப்போது உணவகம் ஒன்றில் அமர்ந்து அவர்களுடன் மசாலா தோசை சாப்பிட்டு காப்பி குடித்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில், டெல்லி முகர்ஜி நகரில் சிவில் சர்வீஸ் ஆர்வலர்களை சந்தித்தும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.