நியூயார்க் டூ சிட்னி – 20 மணி நேர சொச்ச விமான சர்விஸ் இன்று தொடங்கிடுச்சு!

உலகத்தின் நெடுந்தூர விமான சேவை இன்று முதல் துவக்கம்………. விமான பயணம் இப்போது லாங் ஹால் விமான பயணம் ஒரு சாதாரணமான விஷயமாகி போனது – உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து நேரடியாக அமெரிக்காவுக்கு எங்கும் நிற்காமல் செல்ல முடியும் கடந்த 9 வருடங்களாய் – பின்பு சிங்கப்பூயூர் – அமேரிக்கா பயணமும் சாத்தியம் ஆயிற்று – இப்போது நியூயார்க் டூ சிட்னி – 20 மணி நேர சொச்ச விமான சர்விஸ் இன்று காலை முதல் தொடக்கம்.
இதை ஆஸ்திரேலியாவின் குவான்தாஸ் விமான நிறுவனம் – புது போயிங் 787 – 9 விமானம் மூலம் இதை செய்கின்றனர். இதற்காக இலவசமா 40 பயணிகள் மட்டும் பல டாக்டர்கள் மற்றும் விஞ்ஞானிகள் சென்று – 20 மணி நேர சொச்ச பயணத்தில் பயணிகள் – விமான ஓட்டிகள் இவர்களுக்கு எதாவது மாற்றம் நிகழ்கிறதா – ஏதேனும் ஆபத்து உண்டானு டெஸ்ட் செய்வதால் நாற்பது பயணிகளுடன் செல்லும் இந்த விமான சர்விஸ் பிராஜெக்ட்டுக்கு பெயர் – Project Sunrise என்று கூறப்படுகிறது.
PS – நான் இது வரை அதிக தூரம் பறந்தது – சான்பிரான்சிஸ்கோ டூ சிங்கப்பூர் – 18 மணி நேர சொச்சம்……..
அது போகட்டும்விமான காக்பிட் எப்படி இருக்கும்னு 3D panaromic view பார்க்க .. இதோ லிங்க் – http://www.nagravi.com/cockpit/