போலி மருந்து உற்பத்தி : இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் அதிரடி!

இந்தியாவில் போலி மருந்து உற்பத்தி விவகாரத்தில் 18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஹோமியோபதி, அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், வர்மக்கலை, பேலியோ, வீட்டு வைத்தியம், கை வைத்தியம், பாட்டி வைத்தியம், மாந்திரீகம், தாந்திரீகம் என்று இந்தியாவில் ஏகத்துக்கும் மருந்து வகைகளும், மருத்துவர்களும் இருக்கிறார்கள். இதில், மருத்துவத்தைக் குறைச் சொல்ல முடியாது. ஆனால், கைக்கொள்கிற மருத்துவர்களில் தான் யார் நிஜ மருத்துவர் என்றே தெரியாமல் பல இடங்களில் இன்னமும் பத்தாப்பு பெயிலானவர்கள் மருத்துவர்களாக பணியாற்றி வருகிறார்கள்.
இதனிடையே நாடு முழுவதும் 20 மாநிலங்களில் உள்ள 76 மருந்து நிறுவனங்களில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் சார்பில் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டது. இதில் போலி மருந்துகளை தயாரித்ததற்காக 18 மருந்து நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
இவற்றில் மிக அதிக அளவாக, இமாச்சல பிரதேசத்தில் 70 நிறுவனங்கள், உத்தரகாண்டில் 45 நிறுவனங்கள் மற்றும் மத்திய பிரதேசத்தில் 23 நிறுவனங்கள் மீது போலி மருந்துகள் தொடர்புடைய அரசின் அதிரடி சோதனையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, அந்த நிறுவனங்களுக்கு மாத்திரைகள், கேப்சூல்கள், இருமல் மருந்துகள், ஊசிகள், புரத பவுடர்கள், உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்கு எதிராக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அவற்றின் உற்பத்தியையும் நிறுத்தும்படி கூறியுள்ளது. .