சபரிமலையில் 6.5 லட்சம் அரவணா பாயாசம் டின்களை அகற்றுவதில் சிக்கல் !

சபரிமலையில் 6.5 லட்சம்  அரவணா பாயாசம் டின்களை  அகற்றுவதில் சிக்கல் !

பரிமலையில் பக்தர்களுக்கு அரவணை எனப்படும் பாயாசம் தயாரிக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் சேர்க்கப்படும் ஏலக்காயில் பூச்சிக்கொல்லி மருந்தின் அளவு அதிகம் இருந்த காரணத்தினால் அதன் மூலம் தயாரான அரவணை பாயாசத்தை  பக்தர்களுக்கு வழங்கக்கூடாது. அவை அழிக்கப்பட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதன்படி கிட்டங்கியில் உள்ள ஆறரை இலட்சம் டின் அரவணை நீதிமன்றம் உத்தரவிட்டு பல வாரங்களாகியும் அது அங்கிருந்து அப்புறப்படுத்தப்படவில்லை. அதை அகற்றுவதற்கு பெருந்தகை செலவாகும் என்று தேவசம் போர்டு நிர்வாகம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இன்னும் ஒரு சில நாட்களில் மண்டல பூஜை துவங்க உள்ள நிலையில் இதை அகற்றாவிட்டால் புதிதாக தயாரிக்கப்படும் அரவணை டின்களை எங்கு வைப்பது என்று கேள்வி எழுந்துள்ளது.

இதை வனப் பகுதியில் குழி தோண்டி புதைக்கலாம் என்று ஒரு யோசனை எழுந்தது. ஆனால் வனத்துறை அதற்கு அனுமதி மறுத்துவிட்டது பெருமளவு கொட்டப்படும் அரவணா பாயாசத்தின் வாசத்தால் காட்டெருமை போன்ற விலங்குகள் பக்தர்கள் நடமாடும் இடத்திற்கு வந்து விடும் ஆபத்து இருக்கிறதாம்

இதனால் 6. 5 லட்சம் டின் அரவணையை எப்படி அகற்றுவது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் தேவசம் போர்டு அதிகாரிகள்.

error: Content is protected !!