பஞ்சாப்பில் பிரதமர் மோடி நிகழ்ச்சி ரத்து: உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்! -வீடியோ!

பஞ்சாப்பில் பிரதமர் மோடி நிகழ்ச்சி ரத்து:  உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்! -வீடியோ!

பிரதமர் மோடி தனது பஞ்சாப் பேரணி மற்றும் அடிக்கல் நாட்டு விழாக்களை ரத்து செய்துவிட்டு திரும்பினார். பிரதமரின் பார்வையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடைகளை எழுப்பி இருந்த காரணத்தினால் ஃபிளைஓவரின் மீது கார் முன்னேறிச் செல்ல முடியாமல் அரைமணி நேரத்துக்கும் மேலாக நின்றது. பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தடைகளை எழுப்ப முடிந்தது. இது பாதுகாப்பு ஏற்பாடுகளில் தோன்றிய குறைபாடுகளைக் காட்டுகிறது இது தொடர்பாக ஆய்வு செய்து யார் இந்த குறைபாட்டுக்கு காரணம் என்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் பஞ்சாப் அரசுக்கு அவசரத் தகவல் தெரிவித்துள்ளது.

ஃபெரோஸ்பூர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று காலை பத்திண்டா நகருக்கு வந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டர் வழியாக ஹூசயின்வாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு செல்ல இருந்தார். மழை காரணமாக மோசமான வானிலை நிலவி வந்ததால், ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்கமாக ஹூசயின்வாலா செல்ல இருந்தார். பஞ்சாப் காவல்துறையினரிடம் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உறுதி செய்யப்பட்டு பிரதமர் இருந்த வாகனம் சாலை வழியாக புறப்பட்டுச் சென்றுள்ளது.

கார் பயணத்துக்கு 2 மணி நேரம் ஆகும் என்று கணக்கிடப்பட்டு பிரதமர் காரில் புறப்பட்டார். ஆனால் ஹுசைனி வாலா என்ற இடத்தில் உள்ள தேசிய தியாகிகள் நினைவு அரங்கத்திற்கு 30 கிமீ இருக்கும் பொழுது ஃபிளை ஓவர் ஒன்றின் மேல் பிரதமர் கார் சென்று கொண்டிருந்தபொழுது மேலும் செல்ல முடியாமல் சாலையில் தடைகள் ஏற்படுத்தப்பட்டு இருந்ததை கண்டனர். பஞ்சாப்
விவசாயிகள் அமைப்புகள் சாலையில் தடங்கல்களை ஏற்படுத்தி இருந்தார்கள். அதனால் பேருந்துகளும் சாலையின் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தப்பட்டிருந்தன அவற்றை ஒருமுகப்படுத்த போலீசாரால் முடியயவில்லை. 15 முதல் 20 நிமிடங்கள் பிரதமரின் கார் அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டுவிட்டது.

அதன் பிறகு பஞ்சாப் பணியை ரத்து செய்துவிட்டு பிரதமர் டெல்லி திரும்பிவிட்டார். இதை அடுத்து வெளியான மத்திய உள்துறை அறிக்கையில், ‘இது பிரதமரின் பாதுகாப்பில் பெரும் குளறுபடியாகும். பிரதமரின் நிகழ்ச்சி அட்டவணை மற்றும் பயணத் திட்டம் பஞ்சாப் அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. நடைமுறையின்படி, அவர்கள் பாதுகாப்பிற்கு ஏற்பாடுகளை தயாராக வைத்திருந்திருக்க வேண்டும். மாற்று திட்டத்தையும் தயாராக வைத்திருக்க வேண்டும். மேலும் மாற்று திட்டத்தின்படி, பஞ்சாப் அரசு, சாலை வழியாக எந்தவொரு பயணத்தையும் பாதுகாக்க கூடுதல் பாதுகாப்பை செய்திருக்க வேண்டும். ஆனால் அது செய்யப்படவில்லை. இந்த பாதுகாப்பு குறைபாட்டிற்கு பிறகு, மீண்டும் பதிண்டா விமான நிலையத்திற்கு திரும்பி செல்ல முடிவு செய்யப்பட்டது. உள்துறை அமைச்சகம் இந்த கடுமையான பாதுகாப்பு குறைபாடு குறித்து மாநில அரசிடம் இருந்து விரிவான அறிக்கையை கேட்டுள்ளது. இந்த தவறுக்கு மாநில அரசு பொறுப்பேற்று கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!