June 1, 2023

சென்னையில் செக்ஸ் தேடல் அதிகம் + செக்ஸ் பொம்மைகள் விற்பனையும் அதிகமாம்!

நாளிதழில் அன்று முதல் இன்று வரை தவறாமல் இடம் பெறும் விஷயத்தில் ஒன்றாகி விட்டது பாலியல் குற்றச் செய்தி. நாட்டில் எங்காவது நடந்த விஷயத்தை விலாவாரியாக விவரித்து செய்தி வெளியிடும் ஊடகங்களும் அதிகமாகி விட்டன. இந்த செய்தியை கொஞ்சம் அலசுவதற்கு முன்னால் ஓரிரண்டு செய்தி முன்னோட்டங்களை பார்த்து விடலாம்.

sex mar 11

செய்தி 1

கடந்த வாரம் சென்னை பிரஸ் கிளப்பில் பாலியல் தொழிலும் ஒரு தொழில்தான்” என்ற அங்கீகாரம் எங்களுக்கு வேண்டும் என்றும், சுதந்திரமாக செயல்பட நல்ல சூழ்நிலை அமைய வேண்டும் என்று ஓர் அமைப்பு முழங்கியதை சில நாளிதழகள் வெளியிட்டு இருந்தன. தேசிய பாலியல் தொழிலாளர்கள் கூட்டமைப்பு எனற பெயரிலான இந்த அமைப்பில் ஆந்திரா, மஹாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா ஆகிய 7 மாநிலங்களை சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள் இடம் பெற்றுள்ளனராம்.

நாடு முழுவதும் 35 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாகவும், அவர்களின் பிரதிநிதிகள் நாங்கள் என்று சொல்லியபடி, ’இந்த தொழிலில் விரும்பி ஈடுபடவில்லை. எங்களுடைய வாழ்க்கை தரத்தை முன்னேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறோம். சட்ட விரோதமாக நாங்கள் எதையும் செய்யவில்லை. எனவே எங்களுக்கான அங்கீகாரம் வேண்டும். பாலியல் தொழிலும் ஒரு தொழில் தான் என்பதை மத்திய, மாநில அரசுகள் அங்கீகரிக்க வேண்டும். எனவே, நாங்கள் சுதந்திரமாக செயல்பட எங்களுக்கான அங்கீகாரம் வேண்டும்’.என்றனர்.

அதாவது சுகாதாரத்துறை பாலியல் தொழிலை அங்கீகரிக்கிறது. ஆனால் தொழிலாளர் நலத்துறை, சமூக நலத்துறையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அரசு துறைகளில் உள்ள முரண்பாடுகள் களையப்பட வேண்டும். பாலியல் தொழிலாளர்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கி எங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

செய்தி 2

அதே கடந்த வாரம் வெளியான குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவலின் படி, தமிழகத்தில் கடந்த 2015ம் ஆண்டில் குழந்தைகள் தொடர்பான பாலியல் குற்றங்கள் சென்னையில் அதிகளவில் நடந்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, திருநெல்வேலி, சேலம், வேலூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகம் காணப்படுவதாக பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

2015ம் ஆண்டில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தொடர்பாக ஆயிரத்து 212 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில், சட்டத்தின் தவறு மற்றும், மறைக்கப்பட்ட உண்மைகளால் 26 வழக்குகள் முடிந்ததாகவும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

செய்தி 3

அண்மையில் இந்திய பார் அசோசியேஷன் ஓர் ஆய்வு நடத்தியது. இதில், 6,047 பேர்களிடம் பாலியல் சீண்டல் குறித்து கருத்துகள் கேட்டக்ப்பட்டது. இதில் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, மும்பை என நாட்டின் முன்னணி நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நீக்கமற, இத்தகைய பாலியல் தொல்லைகள் நேரடியாக அல்லது மறைமுகமாக நடைபெறுவதாகவும் ஆனால், 70 சதவிகித பெண்கள் இது போன்ற பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கவில்லை என தெரிவித்திருந்தனர்.

செய்தி 4

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆனதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார் தொடங்கி, சந்தியா.மாதவி லதா தொடர்ந்து பாடகி சுசித்திராவின் ட்விட்டர் விஷயங்கள் இன்றளவும் நாள்தோறும் விஸ்வரூபம் எடுத்து வருவது தெரிந்திருக்கும்..

இப்போது உங்களிடம் ஒரு கேள்வி – மேற்கண்ட நான்கு செய்திகளில் உங்கள் கவனத்திற்கு வந்த செய்தி எது? நாலாவதாக இடம் பிடித்துள்ள நடிகை சமாச்சாரம்தானே? பதில் ஆம் என்று சொல்லி விட்டு கொஞ்சம் உறுத்தல் தெரிந்தால் அதை களைத்தெரியுங்கள்.. கடந்த வாரத்தில் சுசித்ராவின் ட்விட்டர் கணக்கை கண்காணித்த ஒரு சில கோடிகளில் நீங்களும் ஒருவர் அவ்வளவுதான்.

images

ஆம். கடந்த வாரம் சுசித்ரா தன் டவிட்டரில் சில அந்தரங்க வீடியோ மற்றும் போட்டோக்களை அப்லோட் செய்வதாக கூறியதையடுத்து நள்ளிரவிலும் அவர் பககத்தை ரெப்ரஷ் செய்து பார்த்த வாடிக்கையாளர்களில் 40 சதவீத்திற்கும் மேலானவர்கள் பெண்கள் அதிலும் சென்னைவாசிகள் அதிகம் என்றும் ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த ஆய்வை செய்தது சென்னை சைபர் கிரைம் என்பதுதான் கூடுதல் தகவல்.

இது குறித்து விவரத்தை அறிந்து கொள்ள நாம் தொடர்பு கொண்ட ஆபீசர், “தற்போது இணையதளங்களில் அளவுக்கதிகமாக கொட்டிக்கிடக்கும் ஆபாசதளங்களில் இளம் பெண்கள் தானாகவே தங்கள் நிர்வாணம் உள்ளிட்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்வது அதிகரித்து உள்ளது என்று சமீப காலமாக பல பெற்றோர் தமிழக போலீசாரிடம் தங்கள் வீட்டு பெண்ணின் பலான காட்சிகள் வந்திருப்பதைக் கண்டு புகார் கொடுப்பது அதிகரித்துள்ளது. இதையொட்டி இந்த சர்வேயை மேற்கொண்டோம்” என்றார்.

மேலும் இது குறித்து அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, “டெய்லி மினிமம் ஆறேழு புகார் – தங்கள் வீட்டு பெண்களில் வீடியோவை இணையதளத்தில் பார்த்ததாகவும், அதை எப்படியாவது நீக்கி விட வழி செய்யுங்கள் என்றும் கெஞ்சுகிறார்கள். வருபவர்கள் பெரும்பாலும் கொஞ்சம் வசதியான அல்லது செல்வாக்கான ஆட்களாக இருக்கிறார்கள். அதனால் இவ்விவகாரத்தை மீடியாக்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கேட்டுக் கொள்கிறார்கள். இதில் இன்னோரு சோகம் என்னவென்றால் இப்படி ரகசிய புகார் கொடுத்தவர்களில் ஒரு சீனியர் மோஸ்ட் பத்திரிகையாளரும் ஒருவர். “ என்று கேஷூவலாக தெரிவித்தார்.

தொடர்ந்து அவர்,”ஹைடெக் செல்போன் வைத்துள்ள ஒவ்வொரு பெண்ணும் தன் போனில் தன்னை நிர்வாணமாக ஓரிரு போட்டோ எடுத்து கொள்கிறார் என்றே எங்கள் சர்வே சொல்கிறது. அப்படி எடுக்கும் படங்கள் ஏதோவொரு காரணத்திற்கக குறிப்பிட்ட போனிலிருந்து அழிக்கப்பட்டாலும் எப்போதாவது அது வெளி வந்து விடுகிறது என்பதுதான் உண்மை. இதில் இன்னொரு அதிர்ச்சி தரும் தகவலையும் சொல்ல வேண்டும். அதாவது ஆபாச வீடியோக்கள், ஆபாச இணைய தளங்கள். பட்டியலில் செக்ஸ் பொம்மைகள் சேர்ந்து உள்ளது. மேலை நாடுகளில் பரவலாகக் கணப்படும் செக்ஸ் பொம்மைகள் கலாசாரம் தற்போது இந்தியாவுக்குள் – குறிப்பாக சென்னையிலும் புகுந்து விட்டது. ஆன்லைன் மூலம் நாள்தோறும் சேலொஸ் ஆகிக் கொண்டிருக்கும் இந்த செக்ஸ் பொம்மைகள் தற்போது சில மருந்து கடைகளிலும் வசதி படைத்தவர்கள் வசிக்கும் பகுதிக ளிலும் உள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோர்களிலும் விற்பனையாகிறது.

மேலும் செக்ஸ் பொம்மைகள் விற்பனை பற்றி இன்டர்நெட்களில் சிலர் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையில் முகவரியுடன் விளம்பரம் செய்யப்படுகிறது. அந்த விளம்பரத்தை பார்த்து சென்னையில் உள்ள கடைகளுக்கு சென்று செக்ஸ்பொம்மைகள் வாங்கிச் செல்கிறார்கள். ஆண்களுக்கான செக்ஸ் பொம்மைகள் யாருக்கும் தெரியாதபடி ஆணுறை பாக் கெட்டுகளுடனும், பெண்களுக்கான செக்ஸ் பொம்மைகள் அழகு சாதன பொருட்கள் போலவும் விற்பனை செய்யப்படுகிறது” என்றார்.

இது குறித்து ஒரு செக்ஸாலஜிஸ்டிடம் பேசிக் கொண்டிருந்த போது, “மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது. காம உணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை அடக்க முடியாமல் போகும் பட்சத்தில் பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், கொள்ளைகள் போன்றவைகள் நடக்கின்றன. செக்ஸ் உணர்வுகளை அதிகமாக கட்டுப்படுத்தினால் அது வெடித்து வெளிக்கிளம்புமாம். எனவே செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும். அதனால் இது போன்ற படங்களைப் பார்ப்பதாலோ, செக்ஸ் பொம்மைகளை வாங்கி உபயோகிப்பதாலோ காம உணர்வு கட்டுப்படுத்தப்படும்..”என்கின்றனர்