உலகின் சக்தி வாய்ந்த நபர் மோடி! – பிரிட்டனில் வெளியாகும் பேர் தெரியாத பத்திரிகை அறிவிப்பு!

மோடி ஆட்சி பீடத்தில் இருக்கும் போது சர்வதேச அளவில் சக்தி வாய்ந்தவரிவராக்கும் என்ற செய்திகள் மாதமிரு ரிப்போர்ட் வருவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக பிதரமர் நரேந்திர மோடியை பிரிட்டீஸ் ஹெரால்டு என்ற பெயரிலான ஒரு இதழ் வாசகர் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
பிரிட்டனின் தலைநகர் லண்டனில் செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் ஹெரால்ட் இதழ் 2019-ம் ஆண்டின் உலகில் மிகவும் பவர் ஃபுல் நபர் யார் என்பது குறித்து வாசகர்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது. இதில் இந்திய பிரதமர் மோடி உள்பட உலகில் பிரபலமான 25 நபர்கள் பெயர் இடம் பெற்று இருந்தது.இதில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக பிரதமர் மோடியை வாசகர்கள் தேர்ந்தெ டுத்துள்ளனர்.
கருத்து கணிப்பை தொடர்ந்து கடந்த 16-ம் தேதியன்று ஒட்டெடுப்பு நடந்தது. இதில் பிரதமர் மோடிக்கு 30,9 சதவீத ஓட்டுகளும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 29.9 சதவீத ஓட்டுகளும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 21.9 சதவீத ஓட்டுகளும், சீன அதிபர் ஜி ஜின்பிங் 18.1 சதவீதஒட்டுகளும் பெற்றனர்.ஓட்டெடுப்பில் முதலிடம் பெற்ற பிரதமர் மோடி உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி படம் பிரிட்டிஷ் ஹெரால்டு இதழின் அட்டைப் பக்கத்திலும் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:
இந்த பிரிட்டிஷ் ஹெரால்டு இங்கிலாந்தின் பிரபலமான பத்திரிகையா எனில், அதுவே கேள்விக் குறியான ஒரு விஷயம் தான். ப்ரிட்டிஷ் ஹெரால்டின் ட்விட்டர் அக்கௌன்ட் 2018ம் ஆண்டு ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் ஃபாலோயர்கள் எண்ணிக்கை 4000 மட்டுமே. ஃபேஸ்புக் பக்கமும் 2018ம் ஆண்டு தான் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.