ஐக்கிய நாடுகள். பாதுகாப்பு கவுன்சில் தலைவராகிறார் இந்திய பிரதமர் மோடி!

ஐக்கிய நாடுகள். பாதுகாப்பு கவுன்சில் தலைவராகிறார் இந்திய பிரதமர் மோடி!

நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்க போகும் முதல் இந்திய பிரதமராக நரேந்திர மோடி இருப்பார் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் முன்னாள் தூதுவர் சையது அக்பருதீன் தெரிவித்தார். கடந்த 75 ஆண்டுகளில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு இந்திய தலைவர் ஒருவர் தலைமை வகிக்க முன் வந்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.

இந்தியத் தலைவர்கள் உலகை வழி நடத்த தயாராக இருக்கிறார்கள் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும் என்று அக்பருதீன் தெரிவித்தார். ஐநாவுக்கான இந்திய தூதராக இருந்து ஓய்வு பெற்ற சையத் அக்பருதீன் தற்போது பொது கொள்கைக்கான கௌசல்யா கல்வி நிறுவனத்தின் டீன் விளங்குகிறார். ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைவர் பதவி சுழற்சி முறையில் வகிக்கக் கூடியது ஆகும் ஜூலை மாதத்தில் பிரான்ஸ் நாட்டின் தலைமைப் பதவி இருந்தது ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் கைக்கு தலைமைப் பதவி வந்திருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்துக்கு இந்திய தலைவர்கள் தலைமை வகித்து நடத்தலாம்.

இப்பொழுது பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்கள் எல்லாம் காணொளிக் காட்சி முறையில்தான் நடத்தப்படுகின்றன. காணொளிக் காட்சி முறையிலும் இந்திய தலைவர்கள் தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தலாம்.

இதற்கு முன்னர் 1992 ஆம் ஆண்டு பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்தது அப்பொழுது நடந்த பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் அன்றைய பிரதமரான நரசிம்மராவ் கலந்து கொண்டார்.

இப்பொழுது பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்துக்கு இந்திய பிரதமர் தலைமை வகிக்க இருக்கிறார் அந்த வகையில் இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமையும். ஆகஸ்ட் மாதத்தில் மூன்று மிக முக்கியமான பிரச்சனைகள் குறித்து கூட்டம் நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்த இருக்கிறது.

1. கடற்பயண பாதுகாப்பு

2. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படை

3. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள்.

இந்த மூன்று தலைப்புகளில் எந்த தலைப்பு தொடர்பான கூட்டத்திற்கு இந்திய பிரதமர் தலைமை வகிப்பது என இன்னும் முடிவாகவில்லை.

பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் இல்லை. ஆனால் ஒராண்டு காலத்துக்கு இந்தியா உறுப்பினராக செயல்பட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் ஆகஸ்ட் மாதத்தில் கூட்டங்களுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

Related Posts

error: Content is protected !!