June 1, 2023

உலக நாடுகள அத்தனைக்கும் வழிகாட்டி மகாத்மா காந்தி- மோடி பெருமிதம்

உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ இந்தியா விரும்புகிறது என்று ஐ. நா. அவையில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி தனது உரையில் இந்தியாவின் சாதனைகளை அடுக்கடுக்காக பட்டியலிட்டு பேசினார்.

அதாவது மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஐக்கியநாடுகள் சபையில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றினை இந்தியாவின் சார்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமை ஏற்று நடத்தினார். இந்நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி சூரிய மின்சார பூங்கா திறந்து வைக்கப்பட்டது. இந்த சூரிய மின்சார பூங்கா50 கிலோ வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய கூடியதாகும். ஐநா சபையில் உறுப்பினராக உள்ள ஒரு நாட்டுக்கு ஒரு மின்கலத் தொகுப்பு என்ற வகையில் 193 மின்கல தொகுப்புகளை இந்தியா வழங்கியுள்ளது. இந்த சூரிய மின்சார பூங்கா அமைக்க 10 லட்சம் டாலர் இந்தியா அன்பளிப்பாக வழங்கியது. நியூயார்க் அரசு பல்கலைக்கழகத்தின் காந்தி அமைதிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகம். லாங் ஐலேண்ட்டில் இருக்கும் சேவை அமைப்பான சாந்தி நிதி, நியூயார்க் அரசு பல்கலைக்கழகம் ஆகியவை இந்த அமைதிப் பூங்காவில் 150 மரங்களை நட தீர்மானித்துள்ளன. இந்த பூங்காவில் நடப்படும் மரங்களை பொது மக்கள் யார் வேண்டுமானாலும் தத்தெடுத்து பராமரிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. தலைமை யின் முக்கியத்துவம் -இன்றைய உலகில் காந்தியின் தேவை என்று தலைப்பிடப் பட்டுள்ளது .

மக்களின் தலைமை மீதும் மகாத்மா காந்திக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. இன்றுள்ள உலகில் நாடுகளை வழி நடத்திச் செல்லும் தலைவர்களுக்கு ஒரு தார்மீக வழிகாட்டியாக மகாத்மா காந்தி விளங்குகிறார் .பிரிட்டிஷ் ராணி எலிசபெத் அவரது திருமணத்தின் போது மகாத்மா காந்தி அன்பளிப்பாக வழங்கிய கைக்குட்டையை இன்றும் போற்றி பாதுகாத்து வருகிறார். அவரைச் நான் சந்திக்க சில ஆண்டுகளுக்கு முன்பு வாய்ப்பு கிடைக்கும்போது அவர் என்னிடம் அந்த கதர் கைக் குட்டையை காண்பித்தார் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

அப்போது அவர் பேசியதன் சாராம்சம்:

மகாத்மா காந்தியின் போதனைகள் இன்றும் உலகிற்கே வழிகாட்டி வருகின்றன

அவரது பிறந்த நாளில் துவங்கப்பட்ட ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களக்கு இந்தியா முழுமையாக தடை விதித்து உள்ளது

மிகப் பெரியதொரு சுகாதாரத் திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்தியாவில் 15 கோடி மக்களுக்கு வீட்டில் குழாய் மூலம் நீர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்தியா முழுவதும் 2 கோடி வீடுகள் கட்டித் தருவது என்று திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல 2025- ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது

அரசுத் திட்டங்களின் பலன்கள் மக்களை நேரடியாகச் சென்றடைய ஏதுவாக 37 கோடி மக்களுக்கு வங்கி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்