குரங்கு செல்பியில் காப்புரிமை யாருக்கு ? நீதிமன்றம் புதிய தீர்ப்பு

குரங்கு எடுத்த உலக பிரசித்தி பெற்ற செல்பி படங்களின் சட்ட ரீதியான உரிமை டேவிட் சிலட்டர் எனும் புகைப்பட கலைஞருக்கே சொந்தம் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இப்படங்களின் உரிமை அவருக்கு அன்றி அந்த குரங்குகளுக்கே வழங்கப்படவேண்டுமென குற்றம் சாற்றி விலங்குகள் அமைப்புக்கள் வழக்கு தாக்கல் செய்தன.ஆனால் 2011ஆம் ஆண்டு இந்தோனேஷிய காட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் உரிமை புகைப்பட கலைஞருக்கே உண்டு என இந்தோனேஷிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும் இப்புகைப்படங்களில் இருந்து வருமானம் கிடைக்கப்பெற்றால் அதில் 25 சதவீதம் அந்த குரங்குகளின் முன்னேற்றத்திற்காக வழங்க தயார் என புகைப்பட கலைஞர் தெரிவித்துள்ள நிலையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதாவது 2011-ம் ஆண்டு இந்தோனீசிய வனப்பகுதியில், பிரிட்டிஷ் புகைப்பட கலைஞர் டேவிட் ஸ்லேட்டரின் காமராவைப் பறித்துக்கொண்ட ‘நாருடோ’ என்ற மக்காக் இன குரங்கு தன்னை தானே செல்ஃபி எடுத்துக்கொண்டது. அந்த படத்தை விக்கி பிடியா வெளியிட்ட நிலையுல் அப்படத்தின் காப்பி ரைட் தன்னிடம் இருப்ப்தாக் கூறி வழக்கு தொடர்ந்தார். ஆரம்பத்தில் இவ்வழக்குல் குரங்குக்கும் விக்கி பீடியாவுக்கு ஆதரவாக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்து வழக்காடி வந்தார் போட்டோ கிராபர். தற்போது புகைப்படத்திற்கான காப்புரிமை பாதுகாப்பு குரங்குக்கு பொருந்தாது என அமெரிக்க நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், புகைப்படத்தின் மூலம் குரங்கும் பயனடைய வேண்டும் என பீட்டா கூறியிருந்தது. ஆனாலும் “குரங்கு சார்பாக” பீட்டா செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனிடையே, வருங்காலத்தில் இந்தப் புகைப்படத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 25 சதவிகிதத்தை தானம் செய்ய புகைப்பட கலைஞர் டேவிட் ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது குரங்கு செல்ஃபியை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 25 சதவிகித பணத்தை, நாருடோவின் வாழ்விடத்தைப் பாதுகாக்க பணியாற்றும் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனத்திற்கு புகைப்படகலைஞர் டேவிட் அளிப்பார் என்று பீட்டாவும், டேவிட்டும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பீட்டாவின் இந்த வழக்கு விலங்குகளின் அடிப்படை உரிமைகள் குறித்து சர்வதேச விவாதத்திற்கு வழிவகுத்தது” என்கிறார் பீட்டாவின் வழக்கறிஞர் ஜெப் கேர். இதற்காக நிறைய முயற்சிகளில் ஈடுபட்டதாகவும், புகைப்படத்திற்கான காப்புரிமையை பெற்றதே தனக்கு போதுமானது என்றும் புகைப்பட கலைஞர் டேவிட் தெரிவித்துள்ளார்.