உள்ளாட்சித் தேர்தல் குறித்து புகார் தெரிவிக்கணுமா?

தமிழ்நாட்டில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர்களாக 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாநில தேர்தல் ஆணையம் நியமித்தது. அவர் களுடைய செல்போன் எண்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த எண்களைத் தொடர்பு கொண்டு தேர்தல் பார்வையாளர்களிடம் புகார்களைத் தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
டி.எஸ்.ராஜசேகர் (அரியலூர்) – 76899 79879
ஜி.கோவிந்தராஜ் (கோயம்புத்தூர்) – 73388 50002
சி.முனியநாதன் (கடலூர்) – 82206 66601
டி.பி.ராஜேஷ் (தருமபுரி) – 63801 14501
கே.பி.கார்த்திகேயன் (திண்டுக்கல்) – 76959 35205
கே.விவேகானந்தன் (ஈரோடு) – 63857 15486
எஸ்.நாகராஜன் (கன்னியாகுமரி) – 87544 46788
என்.வெங்கடாசலம் (கரூர்) – 98944 60084
டி.ஆப்ரஹாம் (கிருஷ்ணகிரி) – 99948 87435
என்.சுப்பையன் (மதுரை) – 95006 30195
ஜான் டாம் வர்கீஸ் (நாகப்பட்டினம்) – 89250 42131
பி.பிரபாகர் (நாமக்கல்) – 81443 33336
அனில் மேஷ்ராம் (பெரம்பலூர்) – 83009 84504
எஸ்.அமிர்தஜோதி (புதுக்கோட்டை) – 76390 29699
அதுல் ஆனந்த் (ராமநாதபுரம்) – 91501 31122
சி.காமராஜ் (சேலம்) – 98403 77970
எம்.கருணாகரன் (சிவகங்கை) – 96000 67274
எஸ்.அனீஸ் சேகர் (தஞ்சாவூர்) – 63821 81417
டி.மோகன் (நீலகிரி) – 63830 28272
எம்.ஆசியா மரியம் (தேனி) – 93852 86480
வி.சம்பத் (தூத்துக்குடி) – 94448 62028
எஸ்.கணேஷ் (திருச்சி) – 84899 36800
ஆர்.கஜலட்சுமி (திருப்பூர்) – 94427 00705
ஏ.ஞானசேகரன் (திருவள்ளூர்) – 94450 01100
இ.சுந்தரவல்லி (திருவண்ணாமலை) – 94431 58866
கவிதா ராமு (திருவாரூர்) – 63818 97351
கே.சீனிவாசன் (விருதுநநகர்) – 70704 50459
மேலும் இந்தத் தேர்தலையொட்டி விளம்பரம் செய்வதற்கான கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றிடவும் தேர்தல் நடத்தை விதிகளின்படி தேர்தல் காலங்களில் ஒலிபெருக்கிகள் போன்றவற்றை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பயன்படுத்தவும், முறைப்படுத்தவும் பின்வரும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஆணைகளை வெளியிட்டுள்ளது.
ஒலிபெருக்கி
தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதிலிருந்து தொடங்கி தேர்தல் நடைபெறும் நாள்வரை, தேர்தல் பிரச்சாரங்களுக்காக எந்தவொருவகை வாகனங்களிலும் பொருத்தப்பட்டிருக்கு ஒலி பெருக்கிகளை காலை 6:00 மணியிலிருந்து இரவு 10:00 மணிவரை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றது.
மேல்கூறிய நேரத்திற்கு அப்பாலும் அல்லது அதிகாரிகளின் எழுத்து மூலமான அனுமதியின்றியும் பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிபெருக்கிகளும், அதனை பயன்படுத்துவதற்கான கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
யாதொரு பொதுக்கூட்டங்களுக்கும் அல்லது ஊர்வலங்களுக்கும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டுமாயின் காவல்துறையின் எழுத்துமூலமான முன் அனுமதி பெற வேண்டும்.
சுவர் விளம்பரம்
பொது மற்றும் தனியார் சுவர்களில் பிரச்சார விளம்பரம் செய்யத் தடை செய்யப்பட்டுள்ளது.
ஓர் இடத்தின் உரிமையாளரின் சம்மதம் பெறப்பட்டுள்ளது என்ற காரணத்தின் அடிப்படையில் எந்த சூழ்நிலையிலும் சுவரில் எழுதுவதோ அல்லது சுவரொட்டி ஒட்டுவதோ கூடாது.
என ஊரக உள்ளாட்சி தேர்தலில் விளம்பரத்திற்கான கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணை நகல் கீழே தரப்பட்டுள்ளது.