Exclusive

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் விரைவிலேயே இறந்து போய் விடுவார்கள். இது உண்மையா?

‘கடவுள் நம்பிக்கையை கேலி செய்ததினால்தான் நடிகர் மாரிமுத்து இறந்து போனார்,’ என்று பல்வேறு பதிவுகள் எக்களிப்புடன் உலா வருகின்றன. கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் 100 ஆண்டுகள் உயிர் வாழ்கிறார்களா என்ன? எனும் கேள்வி ஒரு புறம் இருக்க, இவர்கள் சொல்வதை உண்மை என்று எடுத்துக் கொண்டால், அதன் அர்த்தம் என்ன? தன்னைப் பற்றி விமர்சித்து விட்டதினால் கடவுளுக்கு கோபம் வந்து விட்டது என்கிறார்களா? அப்படியானால் ‘அன்பே சிவம்’ என்று உருட்டியது எல்லாம் பொய்யா கோப்பால்?

Religion confusion

நிஜமாகவே கடவுள் இருந்து, அவரை ஒருவர் விமர்சிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது கடவுள் நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும்? அவர் முன் காட்சி தந்து தன் இருப்பை நிரூபித்திருக்க வேண்டும். அல்லது வேறு வகைகளில் தன் மீதிருக்கும் விமர்சனத்தை சரி செய்ய முயற்சிகள் எடுத்திருக்க வேண்டும். அது தானே நீதியை நிலை நாட்டும் செயல்? அதை விட்டு விட்டு சொன்னவர் மீது கோபம் கொண்டு ‘என்னை கலாய்ச்சிட்ட இல்லே! உன்னையப் போடறேன்டா!’ என்று கிளம்புபவர் கடவுள் அல்ல. அவர் ஒரு ரவுடி. அதுவும் போட்டது எப்படி? கண்ணுக்கு நேரே வந்து கூட போடவில்லை. மறைந்திருந்து போட்டிருக்கிறார். கடவுள் ஒரு ரவுடி மட்டுமல்ல, கோழைத்தனமான ரவுடி என்பதுதான் இவர்கள் சொல்ல வருவது.

சரி, இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நாமும் அவர்களைப் போல இதை உணர்வுபூர்வமாக அணுகக் கூடாது இல்லையா. எனவே அறிவியல் பூர்வமாகவே இதை அணுகிப் பார்ப்போம். அதாவது சொல்வது என்ன: கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் விரைவிலேயே இறந்து போய் விடுவார்கள். இது உண்மையா? உலகில் கடவுள் நம்பிக்கை மிக மிகக் குறைவாக உள்ள நாடுகள் உள்ளன. இங்கே நாத்திகர்கள், மதம், கடவுள் சாராமல் வாழ்பவர்கள் அதிகம். அந்த நாடுகளை எடுத்துக் கொள்வோம். அங்கே சராசரியாக எத்தனை ஆண்டுகள் மக்கள் உயிர் வாழ்கிறார்கள் என்று பார்ப்போம்:

சீனா:
நாத்திகர் விகிதம்: 51.8%
சராசரி ஆயுள்: 78 ஆண்டுகள்

ஜப்பான்:
நாத்திகர் விகிதம்: 39%
சராசரி ஆயுள்: 84.8 ஆண்டுகள்

செக் ரிபப்ளிக்:
நாத்திகர் விகிதம்: 39%
சராசரி ஆயுள்: 78 ஆண்டுகள்

ஃபிரான்ஸ்:
நாத்திகர் விகிதம்: 31.9%
சராசரி ஆயுள்: 78 ஆண்டுகள்

சுவீடன்:
நாத்திகர் விகிதம்: 29%
சராசரி ஆயுள்: 81.4 ஆண்டுகள்

இதையே வேறு மாதிரி பார்க்கலாம். கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள் வாழும் சமூகங்களில் சராசரி விகிதம் இதை விடப் பற்பல மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் இல்லையா? அரபு நாடுகள் அனைத்திலும் நாத்திகம் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

அதாவது, இங்கே நாத்திகர்களாக இருக்கும் சிலர் கூட வெளிப்படையாக கடவுள் இருப்பை கேள்வி கேட்க முடியாது; அப்படியானால் கடவுள் இந்த சமூகங்களை மிகவும் மகிழ்வுடன் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்; இல்லையா?

அரபு நாடுகள் அனைத்தும் சேர்ந்த சராசரி ஆயுள்: 70.8 ஆண்டுகள்

மேலே கவனிக்க வேண்டியது, அரபு நாடுகள் என்றால் அதில் இஸ்ரேலும் அடக்கம். ஆனால் இஸ்ரேலில் நாத்திகத்துக்கு அனுமதி உள்ளது. அங்கே சுமார் 20% பேர் நாத்திகர்களாக இருக்கிறார்கள். இஸ்ரேலின் சராசரி ஆயுள் 82.7 ஆண்டுகள். அதை நீக்கி விட்டால் அரபு நாடுகளின் சராசரி இன்னமும் குறையும். இந்தியாவை எடுத்துக் கொள்வோம். இங்கே நாத்திகத்துக்குத் தடை இல்லை எனினும் அவர்களின் விகிதம் மிக மிகக் குறைவு. 2011 சென்சஸ்படி இந்தியாவில் 0.27% பேர்தான் வெளிப்படையாக நாத்திகர்களாக தங்களை அறிவித்துக் கொண்டுள்ளார்கள். இந்தியாவின் சராசரி ஆயுள்: 70.15 ஆண்டுகள். இதுவும் நம்பிக்கையற்ற சமூகங்களை விடக் குறைவுதான்.

இந்தியாவுக்கு உள்ளேயே கடவுளை நம்பாமல் அதிகம் மக்கள் வாழ்வதாக இந்துத்துவர்கள் நம்பும் மாநிலங்கள் இரண்டு:

* தமிழ் நாடு: 74 ஆண்டுகள்
* கேரளா: 78 ஆண்டுகள்

கடவுள் நம்பிக்கையில் மூழ்கி இருக்கும், கோயில் குளம் என்று சுற்றிக் கொண்டிருக்கும் மாநிலங்கள்:

* மத்தியப் பிரதேசம்: 67. 4
* குஜராத்: 69.9
* உத்திரப் பிரதேசம்: 66.7

இந்தத் தரவுகள் நமக்கு சொல்வது ஒன்றுதான்: கடவுள் நம்பிக்கைக்கும் ஆயுள் நீடிப்பதற்கும் எதிர்-தொடர்புதான் இருக்கிறது. அதாவது நம்பிக்கை குறையக் குறைய ஆயுள் நீடிக்கிறது.

அது எப்படி நடக்கும் என்று கேட்கலாம். பதில் மிக எளிமையான ஒன்று. கடவுள் நம்பிக்கை இல்லாத சமூகங்கள் பெரும்பாலும் அறிவியலை நம்புகின்றன. நவீன மருத்துவங்கள் அங்கே பெரும் ஆதரவு பெறுகின்றன. கடவுள் பெயரால் மதங்கள் கொடுத்த பழம்பஞ்சாங்க சட்ட திட்டங்களை தூக்கி எறிந்து விட்டு, உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்வியல் போன்றவை நவீனப்படுத்தப்பட்டு, மேம்படுகிறது. அதன் மூலம் வாழ்வுத்தரம் அதிகரிக்கிறது. வாழ்நாள் நீடிக்கிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகெங்கும் 99.99 சதம் நம்பிக்கையாளர்கள்தான் இருந்தார்கள். அப்போதுதான் உலக மக்களின் சராசரி ஆயுள் படு மோசமாக இருந்தது. 17ம் நூற்றாண்டின் வாழ்வுத்தரத்தை விளக்குகையில் தாமஸ் ஹாப்ஸ் எனும் அறிஞர் Man’s life was solitary, poor, nasty, brutish and short’ என்கிறார். ஐரோப்பா முழுவதும் கடவுள் நம்பிக்கையில் மூழ்கி இருந்த காலம் அது.

அது எப்படி உலக அளவில் சமூகம் கடவுள் நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும் காலத்தில் சமூகங்கள் செத்து விழுகின்றன? நம்பிக்கை குறையும் போது ஆயுள் அதிகரிக்கிறது, வாழ்வுத்தரம் மேம்படுகிறது, என்று கடவுள் நம்பிக்கையாளர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். அதில் கிடைக்கும் பதிலில்தான் அவர்கள் நம்பும் கடவுளின் லட்சணம் வெளிப்படும்.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்

admin

Recent Posts

ரெப்போ விகிதத்தில் 5வது முறையாக மாற்றம் இல்லை: 6.5% ஆக தொடரும்!

ரெப்போ விகிதம் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்…

1 hour ago

மெஃப்டால்’ வலி நிவாரணி மாத்திரைகளால் மோசமான எதிர்விளைவுகள்!- அரசு எச்சரிக்கை

பல பெண்களுக்கு, மாதவிடாய் சுழற்சியானது வலிமிகுந்த பிடிப்புகளுடன் சேர்ந்து, அன்றாட செயல்பாடுகளை மட்டும் பாதிக்காமல்,தாங்குவது மிகவும் கடினமாக இருக்கும். அத்தகைய…

3 hours ago

புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள நிதி கோருகிறார் முதல்வர்!

மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் மு..ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை…

7 hours ago

24 மணிநேரத்தில் 103 மில்லியன் பார்வைகளைப் பெற்ற ஒரே இந்தித் திரைப்படம் “டங்கி” டிராப் 4 டிரெய்லர் !!

SRK இந்த ஆண்டில் மீண்டுமொருமுறை சாதனை நிகழ்த்தியுள்ளார்! டங்கி டிராப் 4 (டிரெய்லர்) வெளியான வேகத்தில் பெரும் சாதனை படைத்து…

8 hours ago

மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பு-நான்கு பேருக்கு கூடுதல் பொறுப்பு!

அண்மையில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் மத்திய அமைச்சர்களான நரேந்திர சிங் தோமர், ப்ரஹலாத்…

11 hours ago

ரஷ்ய அதிபர் தேர்தல் : மார்ச் 17ம் தேதி நடைபெறும்!

ரஷ்ய அதிபராக புடின் உள்ளார். அவரது பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு அங்கு மார்ச் 17ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று…

11 hours ago

This website uses cookies.