Exclusive

பயணிகள் கவனிக்கவும் – விமர்சனம்!

ம் மக்கள் தொகையை விட அதிகமானோர் புழங்குவது சமூக வலைத் தளங்கள்.. ஃபேஸ்புக். ட்விட்டர், இன்ஸ்டாகிராம், லிங்க்டின் மற்றும் வாட்ஸ் அப்., அது, இது என்று ஏதேதோ புது வடிவில் சகலரின் வாழ்க்கை நேரத்தையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. அதிலும் ரயிலிலும், பஸ்களிலும் ஒருவரையொருவர் பார்த்தால், புன்முறுவல் செய்ய நேரம் இல்லாத அளவுக்கு ஒவ்வொருவரும் தத்தம் செல்போன்களில் மூழ்கிவிடுகின்றனர் என்பது கூட பரவாயில்லை.. ஒரே வீட்டில் இருக்கும் அப்பா & மகன் அல்லது மகள் கூட வாட்ஸ் அப்பில் குட்மார்னிங் மெசெஜ் சொல்லி விடியலைத் தொடங்கி அதே வாட்ஸ் அப்பில் குட் நைட் சொல்லி இருளில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் கழைக்கூத்தாடி கைத்தட்டலுக்கு ஆசைப்படுவது போல் லைக் மற்றும் ஷேர் அதிகமாக கிடைக்க வேண்டுமென்பதற்காக ஆதாரமற்ற, மேம்போக்கான தவறான தகவல்களை பகிர்வோர் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை உண்மை என்று நம்பிவிடும் இளசுகள் பட்டாளம் அதிகமாகி கொண்டுமிருக்கிறார்கள்.  மேலும் இது போன்ற பலவித சமூகவலைகள் மூலம் எளிதில் யார் மீதும் அவதூறு பரப்பும் செயல்களும் அரங்கேறிக் கொண்டேதான் இருக்கின்றன.

இப்படி. தவறான தகவலை பரப்புவது, சமூகத்தில் நடக்கும் தீவிரவாதம் என கூற முயற்சிப்பதுதான் இந்த பயணிகள் கவனிக்கவும் என்ற படம். அதாவது வாய் பேச இயலாத நாயகன் மெட்ரோ ரயிலில் தூங்கி கொண்டிருக்கும் காட்சியை போட்டோ எடுத்து குடித்து விட்டு தூங்குகிறார் என்ற தவறான சேதியுடன் சமூக வலைதளத்தில் பகிர்கிறார் ஒருவர், அதனால் எப்படி எல்லாம் பாதிக்கபடுகிறான் அந்த அப்பாவி நாயகன் என்பதை சகலரும் உணரும் விதத்தில் சொல்லி இருக்கிறார்கள்.

இதில் ஹீரோவாக வரும் விதார்த்தைத் தாண்டி வேறொருவரைக் இந்த கேரக்டரில் நினைத்தே பார்க்க முடியவில்லை. அந்தளவு மிடில் கிளாஸ் ஃபேமிலி தலைவனாக நச்சென்று பொருந்தியிருக்கிறார். முழுதாகப் பேச முடியாத- மூக்கால் பேசுவது போன்ற குரல் எழுப்பியபடி நடமாடும் மாற்றுத் திறனாளி பாத்திரத்தில் வாழ்ந்து சாதித்திருக்கிறார் விதார்த் . அவரின் சைகையுடனான பேச்சு, அதற்கேற்ற உடல் மொழிகள், அவர் சொல்வது ஒவ்வொரு ரசிகருக்கும் புரிய வேண்டும் என்கிற அளவுகோலைக் கவனத்தில் கொண்டு ஹீரோ என்ற எல்லைக்குள் அடங்காமல அதகளம் செய்து மனசில் வந்து பச்செக்-கென்று ஒட்டிக் கொள்கிறார்..அவரது மனைவியாக வரும் லட்சுமி பிரியாவும் தன் யதார்த்த நடிப்பினால் ரசிக்க வைத்திருக்கிறார் . துபாய் ரிட்டன் ஆக வரும் கருணாகரன் யாதொரு கெட்ட நோக்கமும் இல்லை என்றாலும் முட்டாள்தனமாக செய்யும் ஒரு சிறு தவறு விதார்த் வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது என்ற கதை களத்தை தோளில் சுமந்தபடி அநாயசமாக பயணிக்கிறார். அதிலும் நாயகன் வாய் பேச முடியாத அப்பாவி உண்மை தெரியும் நேரத்திலிருந்து குற்ற உணர்ச்சியிலும், தான் செய்த பாவம் தன்னை திரும்பி வந்து தாக்குமோ என்ற அச்சத்திலுமாக நகைச்சுவை தாண்டி தானும் நடிகண்டா என்று நிரூபித்து விட்டார்.

பாண்டிக்குமாரின் கேமிரா சென்னையை பல புதிய கோணங்களில் காட்டி ரசிக்க வைத்திருக்கிறது. அதிலும் கிட்டத்தட்ட மெட்ரோ ரயிலும் இதில் ஒரு பாத்திரமாக ஆகியுள்ள நிலையில் அந்தக் ரயில் காட்சியையும் ரிபீட்டடாக இல்லாமல் காட்டி புன்னகைக்க வைத்து விட்டார் கேமிராமேன். சமந்த நாக்கின் இசைக் கோர்ப்பும் சினிமா பயணிகள் பயணத்துக்கு இணையாக வந்து ஆராட்டுகிறது. .

மலையாளத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளை அள்ளிய விக்ருதி திரைப்படத்தின் ரீமேக் தான் இது. ஆனாலும் ஒரு மாற்று மொழிப் படத்தை நம் மனதுக்கு உகந்த ஆர்டிஸ்டுகளின் துணையோடு சொல்ல வந்த கருத்தை ஒரே நேர் கோட்டில் காட்டி அப்ளாஸ் வாங்குகிறார் டைரக்டர் சக்திவேல். முன்னரே சொன்னது போல் இப்போது நம்மில் பெரும்பாலானோர் புழங்கும் சமூகவலைதள பகிர்வின் பாதிப்பை மிகச் சரியாக எக்ஸ்போஸ் செய்திருக்கிறார். இதன் பொருட்டு அனைத்து நடிகர்களும் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான பங்களிப்பை மிகச் சரியாகவே கொடுத்து இருக்கிறார்கள்.

மொத்தத்தில் அனைவரும் பார்க்க வேண்டிய, ஒரு புதிய சேதி சொல்லும் படமாக ஆஹா ஓடிடியில் வெளியாகி இருக்கிறது இந்த பயணிகள் கவனிக்கவும்.

மார்க் 3.25/5

aanthai

Recent Posts

‘உன்னால் என்னால்’ – விமர்சனம்!

படத்தின் கதை என்னவென்றால் குடும்பத்தின் வறுமையின் காரணமாக ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று கிராமத்தில் இருந்து மூன்று இளைஞர்கள் சென்னை…

16 mins ago

அகாடா என்றழைக்கப்படும் மல்யுத்த மைதானத்துக்கு வெளியே …!

டெல்லியில் கடந்த ஐந்து மாதங்களாக ஒரு துயர நாடகம் அரங்கேறி வருகிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இயங்குபவர் ப்ரஜ்…

8 hours ago

தோனி என்டெர்டெய்ன்மென்ட் தயாரித்து வரும் ‘எல்.ஜி.எம்’செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

சென்னை சூப்பர் கிங்க்ஸ் கேப்டன் தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.…

9 hours ago

இந்தியாவில் கள்ளநோட்டின் எண்ணிக்கை 14 சதவிகிதம் அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

போன நிதியாண்டைக் காட்டிலும், நடப்பு 2022-23ஆம் நிதியாண்டில் 500 ரூபாய் கள்ளநோட்டின் எண்ணிக்கை 14 சதவிகிதம் அளவிற்கு அதி கரித்துள்ளது.…

1 day ago

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கை குலுக்கிய சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகள்! – முதல்வர் ஸ்டாலின் பயண அனுபவங்கள்!

முதலீட்டாளர்களைத் தமிழ்நாட்டை நோக்கி ஈர்த்திட சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகளுக்கு நான் மேற்கொண்ட 9 நாள் பயணத்தை நிறைவுசெய்து தாயகம் திரும்புகிறேன். என்…

1 day ago

‘போர் தொழில்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு விழாத் துளிகள்!

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா…

1 day ago

This website uses cookies.