நேபாளத்தில் உள்ள போக்கரா சர்வதேச விமான நிலையம் அருகே எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. விமான விபத்து நடந்த பகுதியிலிருந்து 68 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்றும், ஆனால், அவர்களுடைய நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் கூறினார் காஸ்கி மாவட்ட உதவி தலைமை அதிகாரி குருதத்தா தாகல்.
மலேசியா காத்மாண்டுவில் இருந்து நேபாளம் கஸ்கி மாவட்டத்தில் உள்ள பொக்காரா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற எட்டி ஏர்லைன்ஸின் விமானம் விபத்துக்கு உள்ளானது. பழைய விமான நிலையத்திற்கும் பொக்காரா சர்வதேச விமான நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. விபத்தில் சிக்கிய விமானத்தில் 68 பயணிகளும், நான்கு விமான குழுவினரும் பயணம் செய்தனர்.
விபத்தில் சிக்கிய விமானம் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அங்கு கரும்புகை சூழ்ந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படை வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து, விமானத்தில் பயணித்தவர்களை மீட்கும் பணிகள் துரிதப்பட்டன. இதுவரை 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த விமானத்தில், 5 இந்தியர்கள், ரஷியாவை சேர்ந்த 4 பேர், தென் கொரியாவை சேர்ந்த 2 பேர் மற்றும் ஐயர்லாந்தை சேர்ந்த ஒருவரும் பயணித்துள்ளனர். விபத்தில், விமானத்தில் பயணித்த 68 பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் 4 பேர் என மொத்தம் 72 பேரும் உயிரிழந்துள்ளதாக பலியானதாகவும், யாரும் உயிர் பிழைத்து இருக்க வாய்ப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது.
மேலும் விபத்து நடந்தது குறித்து விசாரித்த போது, தரையிறங்கும் போது விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதாக கூறப்படுகிறது. அதன்படி, விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றபோது தீ பிடித்து எரிந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் தற்போதைக்கு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் அதிக நாள் வாழும் உயிரினம் எதுவென நினைக்கிறீர்கள்? ஆமை? யானை? திமிங்கிலம்? இவை மூன்றும் பொதுவாக அதிக…
2007 வரை, இது "ஊனமுற்ற நபர்களின் சர்வதேச தினம்" என்று அழைக்கப்பட்ட நாளிது. உடலில் குறைபாடு இருந்தாலும் உள்ளத்தில் உறுதியுடன்…
டைரக்டர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும், முதல் திரைப்படமாக வெளிவருகிறது “ஃபைட் கிளப்”. திரைப்படம். ரீல் குட்…
மத்தியப் பிரதேச ஐகோர்ட்டுக்கு திருமண உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஆணைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு ஒன்று வந்தது. அந்த விசாரணையில், கணவர்…
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட்மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இவர் கிராண்ட்…
பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மூலம் தங்களை நிரூபித்த நடிகர்கள் சசிகுமார் மற்றும் சரத்குமார் இருவருக்கும் சினிமாவில்…
This website uses cookies.