நகை வாங்க மட்டுமல்ல – விற்கும் போது பான் கார்ட் தேவை!
வரி ஏய்ப்பை தடுக்கும் வகையில் நுகர்வோர் தங்கள் வசம் உள்ள தங்கத்தை விற்பதற்கும் பான் எண் கட்டாயம் தேவை என நிதி கட்டுப்பாடு குழு பரிந்துரை செய்துள்ளது.
கடந்த சில மாதங்களின் முன்னர் நகைக்கடைகளில் ரூ.2,00,000 மேல் நகைகள் வாங்கினால் பான் கார்ட் அவசியம் என கூறப்பட்டது. அதன்பின் ஒரு கிராம் தங்கம் வாங்குவதற்கும் பான் கார்ட் கட்டாயம் தேவை என மத்திய அரசு அறிவித்தது. பான் கார்டு இல்லாமல் நகைகளை விற்பனை செய்யக் கூடாது எனவும் நகைக்கடைகளுக்கு நிதி கட்டுப்பாடு குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது தங்கத்தை விற்கும் போது பான் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் என இந்த குழு கூறியுள்ளதால் அதை செயல்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. .