தகவல் & ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் OTT தளங்கள் – மத்திய அரசு அதிரடி..!!

தகவல் & ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் OTT தளங்கள் – மத்திய அரசு அதிரடி..!!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், திரைப்பட தயாரிப்பாளர்கள தங்களது படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட்டு வருகிறன்றனர். இதில் ரசிகர்கள் அதிகளவு உபயோகிப்பதால், இணைய தொடர்கள், திரைப்படங்கள் அதிகளவு வெளியாகி வருகின்றன. மேலும் ஓடிடி தளத்தில வெளியாகும் படங்களுக்கு சென்சார் கிடையாது என்பதால் ஆபாச காட்சிகள், அவதூறு காட்சிகள், கெட்ட வார்த்தைகள் அதிகம் இடம்பெறுவதாக பலர் புகார் அளித்து வந்தனர்.

இதனிடையே ஆபாசமான பதிவுகளை ஒளிப்பரப்பியதாக பிரபல ஓடிடி தளமான ஆல்ட் பாலாஜி (ALT Balaji) உட்பட 7 ஆன்லைன் ஓடிடி தளங்கள் மற்றும் இரண்டு இணையதளங்கள் மீது மகாராஷ்டிர சைபர் கிரைம் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது. இதனால், ஓடிடி தளங்கள் அனைத்தும் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையின் கட்டுப்பாட்டிற்குள் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இதன் மூலம் அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள், அவற்றில் வெளியாகும் படங்கள், சீரியல்கள், யூடியூப் சேனல்கள் மற்றும் ஆன்லைன் செய்தி தளங்கள் ஆகிய அனைத்தும் தகவல் ஒளிபரப்பு துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் இனி இணைய தொடர்கள் சென்சார் செய்யப்படவோ, அதன் கருத்துருவாக்கம் தவறாக இருக்கும் பட்சத்தில் நீக்கவோ அரசு நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

Related Posts

error: Content is protected !!