பெண்களைக் குறிவைத்து தாக்கும் எலும்புப்புரை!

பெண்களைக் குறிவைத்து தாக்கும் எலும்புப்புரை!

வ்வொரு ஆண்டும் அக்டோபர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் உலக எலும்புப்புரை தினம் கடைபிடிக்கப்படுகிறது. எலும்புப்புரை நோயைத் தடுத்தல், கண்டறிதல், சிகிச்சையளித்தல் ஆகியவற்றிற்காக இந்நாள் அர்ப்பணிக்கப்படுகிறது. தகுந்த சத்துணவுகள், எலும்பை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைக்கின்றன என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

குறைந்த எலும்பு நிறையால் எலும்புத் திசுக்கள் நலிவடைந்து எலும்புப்புரை ஏற்படுகிறது. எலும்பு பலவீனமும், உடையும் தன்மையும் அடைவதால் முதுகெலும்பு, இடுப்பு, மணிக்கட்டு போன்றவை உடையும் அபாயம் உள்ளது. 50 வயதுக்கு மேல், ஆண்களை விட பெண்களுக்கே எலும்புப்புரை நோய் ஏற்படும் ஆபத்து அதிகம்.

ஆம்.. மனித சமுதாயத்தை மிகவும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஓசையற்ற உயிர்க்கொல்லி நோய் ‘எலும்பரிப்பு நோய்’ எனப்படும் இந்த ஆஸ்டியோபோராசிஸ் நோயாகும். நூறு கோடிக்கு மேல் மக்கள் தொகை உள்ள இந்தியாவில் 50 சதவீதம் பெண்கள், இவர்கள் மாதவிடாய் நின்றபின் எலும்பரிப்பு நோயினால் அவதிப்படுகின்றனர் என்ற தகவல் அதிர்ச்சி அடையச் செய்கிறது.

ஏனெனில், பின்மாதவிடாய் காலத்தில் இயக்குநீர் மாற்றத்தால் எலும்பு இழப்பின் வேகம் அதிகரிக்கிறது. 8-ல் 1 ஆணும் 3-ல் 1 பெண்ணும் இந்தியாவில் எலும்புப்புரை நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரம்.

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் எலும்புப்புரை (Osteoporosis) என்பது அதிகமாக எலும்பு முறிவு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு எலும்பு சம்பந்தப்பட்ட நோய் ஆகும். எலும்புப்புரையினால் உடலில் எலும்புத் தாது அடர்த்தி (Bone Mineral Density) குறைவதும், எலும்பு நுண்ணியக் கட்டமைப்பு தகர்க்கப்படுவதும் நிகழ்கிறது. மேலும் எலும்பில் உள்ள இணைப்புதிசு வெண் புரதம் (கொலாசென்) அல்லாத புரத வகைகளின் எண்ணிக்கையை இது மாற்றுகிறது. “நிறுவப்பட்ட எலும்புப்புரை” என்ற இந்த சொல் எளிதில் ஏற்படும் எலும்பு முறிவு இருத்தலையும் குறிக்கிறது.

இந்த எலும்புப்புரை மாதவிடாய் நிற்றலுக்குப் பிறகு பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. அதனால் இது மாதவிடாய்க்கு பிந்தைய எலும்புப்புரை என்றழைக்கப்படுகிறது. இது ஆண்களுக்கும், குறிப்பிட்ட இயக்குநீர் சீர்குலைவுகள், நாட்பட்ட நோய்கள் இருக்கும் எவருக்கும் ஏற்படலாம். இஸ்டீராய்டு அல்லது குளூக்கோகார்ட்டிகாய்டு-தூண்டப்பட்ட எலும்புப்புரை (SIOP or GIOP) என்றழைக்கப்படும் நோயிருக்கும்போது குளூக்கோகார்ட்டிகாய்டுகள் என்ற மருந்து உட்கொள்ளலின் காரணமாகவும் இது ஏற்படலாம். இதில் எளிதில் ஏற்படும் எலும்பு முறிவின் ஆபத்து இருப்பதினால் எலும்புப்புரை, குறிப்பாக ஆயுள் எதிர்பார்ப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கலாம்.

வாழ்க்கை முறை மாற்றங்களினாலும் சிலநேரங்களில் மருந்து உட்கொள்ளலினாலும் எலும்புப்புரையை தடுக்கலாம். எலும்புப்புரை இருப்பவர்களுக்கு இவை இரண்டுமே சிகிச்சையில் உள்ளடங்கியிருக்கும். வாழ்க்கை முறை மாற்றத்தில் பிசியோதெரபி சிகிச்சை முறையில் செய்யபடும் உடற்பயிற்சி மற்றும் கீழே விழுதலை தவிர்த்தல் ஆகியவை சேர்ந்திருக்கிறது. மருந்து உட்கொள்ளுதலில் கால்சியம், உயிர்ச்சத்து டி , பைஃபோஸ்போனேடு கள் மற்றும் பல சேர்ந்திருக்கிறது. நடப்பதற்கு உதவும் தசைகளை பண்படுத்தும் உடற்பயிற்சி மற்றும் அசைவு சீராக்கத்‌தை மேம்படுத்தும் உடற்பயிற்சிகள் ஆகியவை கீழே விழுதலை தடுக்கும் அறிவுரையில் உள்ளடங்குகிறது. எலும்புப்புரையை தடுத்தல் மற்றும் குணபடுத்துதலில் பிசியோதெரபி முக்கிய பங்கு வகிக்கிறது.

Related Posts

error: Content is protected !!