தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் புதிய தயாரிப்பு நிறுவனம்ONSKY Technology PVT. LTD !
தமிழ் சினிமாவில் புதிய வரவாக, நல்ல திரைப்படங்களை தரவேண்டுமென்கிற கனவுடன், கால் பதித்திருக்கிறது ONSKY Technology PVT. LTD நிறுவனம். மிகப்பெரும் கனவுகளுடன் இந்நிறுவனத்தை துவங்கியுள்ளார் முத்து சம்பந்தம். ONSKY Technology PVT. LTD நிறுவனம் ஓரிரவில் உருப்பெற்றதல்ல, பல்லாண்டுகளாக DTH உலகில் தனது சேவையை வழங்கி வந்த இந்நிறுவனம், இப்போது திரைத்துறையிலும் தனது இனிய பயணத்தினை துவக்கியுள்ளது.
ONSKY Technology PVT. LTD நிறுவனர் முத்து சம்பந்தம் இது குறித்து கூறியது. “சினிமா மீதான காதலும் வேட்கையும் எனக்கு சிறு வயதிலிருந்தே இருக்கிறது. ஒரு வகையில் இது எனது நீண்டகால கனவு. திரைத்துறைக்குள் தயாரிப்பாளராக நுழையும் முன்பாக, அது குறித்த அனைத்தையும் கற்றுகொண்டு, என்னை சரியான வழியில் முழுதாக தயார்படுத்தி கொண்டே, வர வேண்டுமென நினைத்தேன். அந்த வகையில் டிஜிட்டல் உலகில் மிக சிறந்த போஸ்ட் புரடக்ஷன் நிறுவனமாக, குழுவாக பயணம் செய்து தயார் படுத்தி கொண்டேன். திரைத்துறையின் தலைமையிடம், நகரின் மையமான கோடம்பாக்கத்தில் எங்கள் நிறுவனம் துவங்கப்பட்டிருப்பதை பெருமையுடன் தெரிவித்துகொள்கிறேன்.
ஆர்வமிக்க, புதிய இளம் திறமையாளர்களை, தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி அவர்களின் கனவுகளின் வழி, நல்ல தரமான படைபுகளால் தமிழ் சினிமாவை வளர்த்தெடுப்பதே, ONSKY Technology PVT. LTD நிறுவனத்தின் மிக முக்கிய குறிக்கோளாகும். வழக்கத்தை உடைத்து, உலக அளவில் சாதனை படைக்கும், படைப்புகளை வழங்குவதில் தமிழ் சினிமா எப்போதும் முன்னோடியாக திகழ்ந்து வந்திருக்கிறது. அந்த வகையில் ONSKY Technology PVT. LTD நிறுவனம், தமிழ் சினிமாவினை உயர்த்தி பிடிக்கும் தரமான கதைகளை கொண்ட திரைப்படங்களை தயாரித்து, விநியோகம் செய்யும் நிறுவனமாக இருக்கும்.
ONSKY Technology PVT. LTD நிறுவனம், டிஜிட்டல் OTT தளங்களில் திரைக்காதலர்களுக்கு, வெவ்வேறு வகையிலான ரசனை மிகுந்த படைப்புகளை வழங்கி வருகிறது. எங்கள் நிறுவனம் சார்பில் வெள்ளித்திரையில் உருவாகவுள்ள மிக வித்தியாசமான படைப்புகள் குறித்து விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளிவரும்” என்றார்.