ஒரு நாள் பார்த்து சொல்றேன் – திரை விமர்சனம்! = ”சிரிச்சுடுவாங்க” என்ற அதீத நம்பிக்கை

ஒரு நாள் பார்த்து சொல்றேன் – திரை விமர்சனம்! = ”சிரிச்சுடுவாங்க” என்ற அதீத நம்பிக்கை

ஒரு வீட்டுல ஒரு நல்ல எலி இருந்துச்சாம். அது அந்த வீட்டு கோழி, அந்த வீட்டு ஆடு, அந்த வீட்டு வான் கோழி ஆகியவற்றோடு நல்ல நட்பாக பழகியதாம். அது அப்பப்போ அந்த வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் கடிச்சு திண்ணுச்சாம். அந்த வீட்டு எஜமானர் யோசித்தாராம். இந்த எலியை பிடிப்பது எப்படினு. அப்படி அவர் யோசிச்சதுல ஒரு எலி பொறி வாங்கி வைக்கலாம்னு ஒரு ஐடியா வந்துச்சாம். அவர் ஒரு எலி பொறி வாங்கி வந்து விட்டார். அதை அந்த எலியும் பார்த்துவிட்டது.

ஒடனே ஓடிப் போய் அந்த வீட்டு கோழியிடம் போய் சொன்னதாம். நண்பா நண்பா இந்த வீட்டு எஜமானர் எலி பொறி வாங்கி வந்துட்டார். நான் தப்பி்க்க ஏதாவது ஐடியா இருந்தா சொல்லேன் என்று கெஞ்சியதாம். ஓ எலி பொறியா? அப்படின்னா! அதனால எனக்கு எந்த ஆப்த்தும் வராது!. அப்பா! நான் தப்பிச்சேன். எனக்கு ஒன்னும் ஆகாது! உனக்குதானே ஆபத்து! எனக்கென்ன வந்தது என்று அசால்ட்டடா சொன்னதுடன் அந்த எலியை அலட்சியமாக பார்த்ததாம் கோழி. சரி இவன் நம்மை காப்பாத்த எந்த முயற்சியும் செய்யலை.

நாம் போய் நம்ம வான்கோழி அண்ணாச்சியை போய் கேட்கலாம் என்று எண்ணி வான் கோழியை பார்த்து எலி பொறி வாங்கிய விசயத்தை சொன்னதாம் எலி. வான் கோழியும் எலியை காப்பாத்த எந்த முயற்சியும் எடுக்க வில்லை. இம் எனக்கு இந்த எலிப்பொறியை பார்த்து எல்லாம் பயம் வராது நான் ரொம்ப தைரிய சாலி. அதனால எனக்க எந்த பிரச்சனையும் வராது என்று சலிப்புடன் சொன்னதாம் வான்கோழி!

அதனால மனம் வெறும் வெறுத்துபோன எலி எலி ஓடிப் போய் ஆடு பக்கத்தில் போய் சொன்னது. அட போப்பா உனக்கு வேற வேலை இல்லையா. நான் ஒண்ணும் உன்னை போல கோழை இல்லை. போயும் போயும் இந்த எலிபொறிக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்லை என்று இளக்காரமாக பதில் சொன்னது. ஆக எந்த நண்பனும் எலியை காப்பாற்ற தயாராக இல்லை. எலி கவலையுடன. இருந்தது.

அன்னிக்கு நைட் எலி பொறியில் ஒரு மீனை வறுத்து வைத்து இருந்தார்கள். அந்த மீனை சாப்பிட ஒரு நல்ல பாம்பு வந்தது. அது அந்த எலி பொறியில் மாட்டியவுடன் டமால் என்று சத்தம் கேட்டது. உடனே அந்த வீட்டு எஜமானியம்மா ஆகா எலி மாட்டிவிட்டது என்று நினைத்து எலிபொறி அருகே வந்த எஜமானியம்மாளை அந்த துண்டாகி கிடந்த பாம்பு கொத்திவிட்டது. இதனால் உடனே அந்த எஜமானியம்மாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள். உடனே மருந்து மாத்திரை என வைத்தியம் பார்த்தார்கள். அந்த வீட்டில் இருந்த பாட்டிதான் சொன்னார்கள் பாம்பு கடிக்கு சிக்கன் கறி சாப்பிட்டா நல்லது என்று. உடனே அந்த வீட்டு கோழியை பிடித்து சிக்கன் குழம்பு வைத்தார்கள். அந்த குழம்பு கறி எல்லாம் அந்த எஜமானிக்கு தரப்பட்டது. அப்புறம் சொந்த பந்த மெல்லாம் அந்த எஜமானியை பார்க்க வந்தார்கள். அவர்களுக்கு விருநது வைக்க வான் கோழி கொல்லப்பட்டது. அந்த எஜமானி உயிர் பிழைத்த சந்தோஷத்தை ஆட்டை கொன்று ஊருக்கே விருந்து வைத்து கொண்டாடினார்.

அக்கம் பக்த்துல ஏதாவது ஒரு பிரச்சனைன்னா நமக்கேன் வம்புனு நாம ஒதுங்குறது நமக்கே ஒரு நாளைக்கு ஆப்பா வந்து முடியும்ங்கிறதுதான் இந்த கதை சொல்லும் நீதி

என்ன கதையை படிச்சாச்சா.. ஆம்,, கோலிவுட்-டில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நுழைந்த எலியாகப்பட்ட விஜய் சேதுபதி புரொடியூசர், டிஸ்ட்ரிபியூட்டர், மற்றும் ரசிகர்கள் என்று நட்பாக இருந்த அத்தனை பேரையும் ‘ஒரு நாள் பார்த்து சொல்றேன்’ என்று சொல்லி காவு கொடுத்து விட்டார் என்பதுதான் இந்த படத்தின் நீதி ..

ஆம்.. வேறு வழியில்லாமல் கதையை சொல்வதென்றால்..

ஆந்திரா பகுதியில் உள்ள காட்டுவாசி கும்பல் (இவர்களுக்கான பின்ன?ணியை சொல்ல பிரபஞ்சம், பால் வீதி, நட்சத்திரம் என்றெல்லாம் சொல்லி பில்ட் அப் கொடுத்ததை இப்போ நினைச்சாலும் பி.பி. எகிறுது), .. அவிய்ங்க எமன் பேரில் பிராமிஸ் பண்ணிகினு மனைவியோட தாலியை தங்கள் கழுத்துலே போடுகினு ராப்பரி பண்ண போற கும்பலாம். அதுவும் குயந்தைங்க, லேடீஸூக்கு எதுவும் ஆகாமல், யாரையும் அடிக்காமல், கொல்லாம குறிப்பா அரசியல் பண்ணாம நேர் வழியில் திருடும் தொழில் செய்யற குமபல் வாரிசாம் விஜய் சேதுபதி. (ரொம்ப பொருத்தம்தான்)

அந்தக்கூட்டத்தில் மாட்டிக்கொள்ளும் இப்போதைய மாடர்ன் ஸ்டூடண்ஸ் லவ்வர்ஸ் -இவங்களை பின்னி பிணைஞ்சு பிளாக் காமெடி’ என்ற பெயரில் வித்தியாசமான படமொன்றை கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் ஆறுமுககுமார். அவரின் திட்டமிடல் மோசம் என்று அறவே சொல்லி வைட முடியாது.. ஆனால் அதை வடிவமைத்த விதத்தில் இது நாள் வரை வி. சே. மீது இருந்த ரசிக நம்பிக்கையை பனிக்கட்டியாக்கி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்!

ஆனாலும் தன் கையில் கிடைத்த கேரக்டரில் விதம் விதமாய் வேஷம் போட்டு டான்ஸ் கிளாஸ் போய் விட்ட கெத்தில் தலையை சிலிர்ப்பிக் கொண்டு ஆடி, நடிக்கவே செய்யாமல் தன் பங்கை கச்சிதமாக செய்து அசத்தி இருக்கிறார் எனபதையும் ஒப்புக் கொள்ளதான் வேண்டும். கூடவே இதே சேதுபதியால் சிபாரிசு செய்யப்பட்ட கெளதம் கார்த்திக்

வெட்கம், மானம், சூடு, சொரணை என்றால் என்னவென்றே தெரியாத கேரக்டரில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.(ஆனால் பல சீன்களில் ‘அட.. கொய்யாலே.. ஓவர் சீன் வேண்டாமுடா.. அடங்குடா.. என்று பக்கத்து சீட பெரிசு வாய் விட்டு சொல்லுமளவு ஃபர்பார்மென்ஸ்)

நிகாரிகா, கோலிவுட்டுக்கு நல்வரவு.. இன்னொரு நாயகி காயத்ரி கல்லூளி மங்கி இருந்து அண்டர் கிரெளண்ட் வேலையெல்லாம் செய்து கவருதில் ரசிகர்களையும் அட்ராக்ட் செய்கிறார். .

ஃபேண்டஸி கதைதான் இது என்றெல்லாம் எந்த பில்ட் அப்பும் கொடுக்காமல், தான் நினைத்ததை காட்சி, காமெடி என்று லாஜிக்-கெல்லாம் பார்க்காமல் ”சிரிச்சுடுவாங்க” என்ற அதீத நம்பிக்கையில் முழுப் படத்தை கொடுத்து இருக்கிறார் ஆறுமுக குமார். அது பல இடங்களில் சலிப்பை கொடுக்கிறது.. படத்தின் தொடக்கத்தில் ஆந்திரா-வுக்கு அறிமுகம் கொடுத்த யோசனையையும், எண்ட் கார்டின் போது பார்ட் டூ பற்றி பில்ட் அப் பண்ண கொடுத்த ஐடியா வையும் படம் முழுக்க தூவி இருந்தால் கோலிவுட்டின் தங்க வாத்தான விஜய் சேதுபதிக்கு சேதாரம் ஆகாமல் போயிருக்கும்..

மார்க் 5 / 2.5

error: Content is protected !!