‘ஜித்தன்’ ரமேஷ், 5 கதாநாயகிகளுடன் நடிக்கும் படம் ஒங்கள போடணும் சார்!

‘ஜித்தன்’ ரமேஷ், 5 கதாநாயகிகளுடன் நடிக்கும் படம் ஒங்கள போடணும் சார்!

ஸிக்மா ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில்  மனோஜ்  தயாரிப்பில்  ‘ஜித்தன்’    ரமேஷ்,   5 கதாநாயகிகளுடன் நடிக்கும் படம் ஒங்களபோடணும் சார்.

ஜித்தன் ரமேஷ் உடன்  சனுஜா சோமநாத்,   ஜோனிட்டா,  அனு நாயர்,   பரிட்சித்தா,    வைஷாலி ஆகிய  அறிமுக கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இப்படம் பற்றி இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் கூறுகையில், நான்கு வாலிபர்கள் மற்றும் நான்கு இளம்பெண்கள் ஒரு வேலைக்காக ஒரு இடத்தில் ஒன்றாக தங்குகிறார்கள். ஜாலி, கேலி என நகரும் நாட்களும் இவர்கள் செய்கின்ற களேபரங்களும் ஃயூத்புல்லாக இருக்கும். சவாலாக அந்த வேலையை எடுத்துச்செய்யும் இந்த வாலிபர்களும் இளம்பெண்களும்  ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர். அது என்ன பிரச்சினை? அதில் இருந்து இவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதை கலகலப்பான த்ரில்லராக உருவாக்கி இருக்கிறோம். வழக்கமாக படங்களில் ஆண்கள் தான் பெண்களை கிண்டல் கேலி செய்வதை பார்த்திருப்போம்.. மாறாக, இந்த படத்தில் பெண்கள், ஆண்களை கிண்டல் செய்வதும் கலாய்ப்பதும் புதிய அனுபவமாக இருக்கும்.

நீண்ட இடைவெளிக்குப் பின் ஜித்தன் ரமேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கமர்சியல் என்டர் டெயினராக உருவாகியுள்ள இந்தப்படம் நிச்சயமாக ஜித்தன் ரமேஷ்க்கு பெரிய திருப்புமுனையாக இருக்கும். பாடலாசிரியர் முருகன் மந்திரம், இப்படத்தில் பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதி இருப்பதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.

இந்த படத்திற்கு தலைப்பு யோசிக்கும்போது, சட்டென்று ரீச் ஆகிற மாதிரி இளைய தலை முறைக்குப் பிடித்த தலைப்பாக இருக்கவேண்டும் என்று யோசித்தோம். அப்படி யோசிக்கும்போது “நானும் ரௌடி தான்” படத்தில் நயன்தாரா பேசிய “ஒங்கள போடணும் சார்” வசனம், நினைவுக்கு வந்தது. அதையே தலைப்பாக வைத்துவிட்டோம், நயன்தாராவுக்கு நன்றி… என்று கூறுகிறார்கள் இரட்டை இயக்குநர்கள்.

வசனம் & பாடல்கள்: முருகன் மந்திரம் | படத்தொகுப்பு: விஷ்ணு நாராயணன் | நடனம்: ஸ்ரீசெல்வி | சண்டைப்பயிற்சி: ஃபையர் கார்த்திக் | கலை: அனில் | ஒளிப்புதிவு: S.செல்வகுமார் | இசை: ரெஜிமோன் | இயக்கம்: ஆர்.எல்.ரவி & ஸ்ரீஜித் தயாரிப்பு:ஸிக்மா பிலிம்ஸ் மனோஜ்

Related Posts

error: Content is protected !!