சர்வதேச விமான சேவைகள் காலவரையின்றி ஒத்திவைப்பு!- ஓமைக்ரான் பீதிதான் காரணம்!
மூன்றாவது அவதாரமாக ஒமைக்ரான் என்ற பெயரில் உருமாறிய கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் டிசம்பர் 15ம் தேதியிலிருந்து தொடங்கவிருந்த பன்னாட்டு விமான சேவை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட சர்வதேச விமான சேவைகள் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் மீண்டும் துவங்கும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனர் ஜெனரல் அலுவலகம் அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பை காலவரையின்றி ஒத்தி வைக்கும் புதிய அறிவிப்பினை டிசம்பர் மாதம் முதல் தேதியன்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து போக்குவரத்து இயக்குனர் ஜெனரல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளில் புதிதாக உருமாறிய ஒமைக்ரான் என்ற கொரானா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிவிரைவில் பரவக்கூடியது கடுமையான நோயை தரக்கூடும் தடுப்பூசி மருந்துகளை பயனற்றதாக மாற்றக்கூடும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக உலகிலுள்ள பல நாடுகள் உள்நாட்டு வெளிநாட்டு விமான சேவைகளை ரத்து செய்துள்ளன அல்லது கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தி உள்ளன.
இந்தப் பின்னணியில் சர்வதேச விமான போக்குவரத்து 20 மாதங்களுக்கு பின்னர் டிசம்பர் 15ஆம் தேதி அனுமதிக்கப்படும் அனுமதிப்பது என்று அறிவித்திருந்த முடிவை மத்திய அரசு விலக்கிக் கொண்டு விட்டது மீண்டும் சர்வதேச விமான சேவைகள் எப்பொழுது துவங்கும் என்ற அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
நிலைமையை கூர்ந்து கவனித்து வருவதாகவும் கலந்து ஆலோசனைக்குப் பிறகு உரிய முடிவு வெளியிடப்படும் என்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனர் ஜெனரல் அலுவலகம் அறிவித்துள்ளது.