இந்தியாவில் முழு ஊரடங்கு தேவையில்லை – சௌமியா சாமிநாதன் கருத்து!

இந்தியாவில் முழு ஊரடங்கு தேவையில்லை –  சௌமியா சாமிநாதன் கருத்து!

ன்றைய சூழலில் இந்தியாவில் ஊரடங்கு என்பது தேவை இல்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் அறிவியல் நிபுணர் சௌமியா சாமிநாதன் சனிக்கிழமையன்று கூறினார். கொரானோ வைரஸ் இயல்புகள் என்ன என்பது குறித்து இப்பொழுது நல்ல புரிந்துணர்வு நமக்கு கிடைத்து விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

திருவான்மியூரில் நிகழ்ச்சி ஒன்றில் சத்துணவு தோட்டம் இந்த அமைப்பை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார் அந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது சௌமியா. கொரானோ வைரஸ் தொடர்பாக புதிய கருத்துக்களை வெளியிட்டார்.

முதல் கொரானோ பெருந்தொற்று அலை பரவும் பொழுது நமக்கு அந்த வைரஸ் பற்றி பல விஷயங்கள் தெரியாது. அதனால் பல நாடுகள் முழு ஊரடங்கை அறிவித்தன.

ஆனால் இன்று நிலைமை அவ்வாறு இல்லை,

வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் நெருங்கி பழகுவது, பெரும் கூட்டமாக கூடுவது, மூடிய அறைகளுக்குள் அமர்ந்திருப்பது ஆகியவை கரோனா வைரஸ் பரவ முக்கிய காரணங்கள் என இப்பொழுது தெரியவந்துள்ளது.

அதனால் மக்கள் முகக் கவசத்தை தவறாமல் அணியவேண்டும் என்று சௌமியா தெரிவித்தார்.

வயதானவர்களும் இணை நோய்களை உடையவர்களும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் அவசியம் என்று சௌமியா தெரிவித்தார்.

இன்புளுயன்ஸா போன்ற ஒரு நோயாக கொரானோ வைரஸ் தொற்று இப்பொழுது மாறியுள்ளது. அதனால் தடுப்பு நடவடிக்கைகளில் நாம் கவனம் செலுத்துவது அவசியம்

நடைப்பயிற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் உடற்பயிற்சிகளும் சமச்சீரான உணவும் தேவை. அத்துடன் உயரத்துக்கு ஏற்ற அளவில் உடல் எடை இருக்க வேண்டும், உடல் எடை அதிகரிக்காமல் பராமரிப்பதும் அவசியமாகும்” என்றார்

error: Content is protected !!