ஓட்டல் உணவுகள் மீது இனி சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது!- மத்திய அரசு தகவல்!

ஓட்டல் உணவுகள் மீது இனி சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது!- மத்திய அரசு தகவல்!

பெரும்பாலும் பெரிய பெரிய ஓட்டல்களுக்கு செல்லும் பொழுது அங்கு வாடிக்கையாளர்களுக்கு ஊழியர்கள் உணவு சப்ளை செய்வார்கள். வாடிக்கையாளர் சாப்பிட்ட உணவில் திருப்தி இருந்தால், அந்த ஊழியருக்கு டிப்ஸ் கொடுப்பது வாடிக்கையாளர்கள் வழக்கம். ஆனால் ஒரு சிலர் டிப்ஸ் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று கேட்பார்கள். இந்த நிலையில் ஓட்டல் உணவு மீது சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என்று மோடி அரசின் தொழில் வணிகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, தங்கள் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் தர விரும்பினால், உணவுப் பொருட்களின் விலையை உயர்த்திக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு சேவை கட்டணம் என்ற பெயரில், உணவுப் பொருள்களின் மீது, அந்த சுமையை வாடிக்கையாளர்களின் தலையில் சுமத்த கூடாது. சேவையில் திருப்தி ஏற்பட்டால் வாடிக்கையாளர்களே டிப்ஸ் தர முன்வருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!