’நிறம் மாறும் உலகில்’ -விமர்சனம்!

’நிறம் மாறும் உலகில்’ -விமர்சனம்!

நம் நாட்டைப் பொறுத்தவரை அம்மா சென்டிமென்ட் இல்லாமல் ஒரு படம் கூட எடுக்க முடியாது. அம்மா என்பது துணை கதாபாத்திம்தான் என்றாலும், அதை வலிமை பொருந்தியதாக உருவாக்க வேண்டும் என்பது தான் இந்திய சினிமாவின் இலக்கியம்.அதே சமயம் அம்மா கேரக்டர்களை வலிமையாக உருவாக்கியத்தில் கோலிவுட் சினிமாவின் பங்கு பெரியது. எம்.ஜி.ஆர் காலம் தொட்ட தமிழ் சினிமாவில் ஹீரோவிற்கு பிறகு அம்மா தான் முக்கியமானவர். பிறகு தான் கதாநாயகி, வில்லன், கதை எல்லாம்.இதை பின்பற்றி உருவாக்கப்பட்ட ஏகப்பட்ட தமிழ் படங்களில் அம்மா என்பவரின் பண்புகளை, அவர் மீதான அன்பை ஒரே பாடலில் சொல்லிவிடுவதும் வழக்கம். இப்படி தமிழ் சினிமாவில் எவர்கிரீன் அந்தஸ்தை பெற்ற அம்மாவை மையமாக வைத்து நான்கு கதைகளிலும் அளவுக்கு அதிகமான சோகத்தை பிழிந்திருபதை தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதிலும், ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒரு பிளாஷ்பேக் என்று படம் அழை வைக்க முயன்று, முயன்று ஓடிக்கொண்டே இருப்பதே படு சோகம்.

error: Content is protected !!