பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான புதிய தேர்வு அட்டவணை -அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான புதிய தேர்வு அட்டவணை -அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

ங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் அருகாமை மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.மழை நின்ற சில மணி நேரங்களில் பல இடங்களில் வெள்ளம் வடிந்தாலும், சில இடங்களில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. மழை நின்று இரண்டு நாட்கள் ஆன பின்னரும், இன்னும் இடுப்பளவுக்கு பல இடங்களில் வெள்ளம் தேங்கியிருக்கிறது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. வீடுகளில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்டு முகாம்களுக்குள் மீட்பு படையினர் அனுப்பி வைத்திருக்கின்றனர். அதேபோல உணவு தேவைப்படுவோருக்கு படகில் சென்று உணவு விநியோகிக்கப்படுகிறது.

இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் 5 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் அறிவித்திருந்தார்.கனமழை முடிந்த பின் இந்த பருவ தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியிடப்படும் என பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி தற்போது கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகளுக்கு புதிய அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி பொறியியல் இளநிலை, முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 11 முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. டிசம்பர் 4ஆம் தேதி தொடங்குவதாக இருந்த செமஸ்டர் தேர்வு, டிசம்பர் 11ஆம் தேதி தொடங்குகிறது. அதேபோல 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி முடிவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள், டிசம்பர் 17ஆம் தேதி முடிவடைகின்றன.

இந்த புதிய அட்டவணை தன்னாட்சி பெறாத அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்று அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். தன்னாட்சி பெற்ற, தனியார் பொறியியல் கல்லூரிகள் தங்களுக்கான பாடத்திட்டம், தேர்வு ஆகியவற்றைத் தாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக திருத்தி அமைக்கப்பட்ட மற்றும் முழுமையான தேர்வு அட்டவணையை ஆந்தை வழிகாட்டி கல்வி என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: https://aucoe.annauniv.edu/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

இந்த அறிவிப்பு, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!