நிவரை அடுத்து வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

நிவரை அடுத்து வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

வங்க கடலில் உருவான நிவர் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தது. விளைநிலங்கள் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கிய நாசமானது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கூடும் பாதிக்கப்பட்டு கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள நிலையில் அடுத்த புயல் வர வாய்ப்பு இருப்பதாக தகவல் வந்துள்ளது.

முன்னதாக கடந்த 21-ந் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நிவர் புயலாக மாறியதுடன், நேற்று அதி தீவிர புயலாக மாறி புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே நவம்பர் 25 நள்ளிரவு 11.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கி, நவம்பர் 26 2.30 மணி வரை முழுவதும் கரையைக் கடந்தது. புயல் கரையை கடக்கும்போது 140 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மாநில அரசுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த புயல் காரணமாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் என்ன என்பதுகுறித்து தமிழகஅரசு பட்டியல் வெளியிட்டு உள்ளது.

அதன்படி மனித உயிரிழப்பு – 3

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை – 3

சேதமடைந்த வீடுகள் மொத்தம் – 101

ஆடு, மாடுகள் – 26

சாலைகளில் சேதமடைந்த மரங்களின் எண்ணிக்கை – 380

மீட்பு முகாம்களின் எண்ணிக்கை 3085

நிவாரண முகாம்களில் தக்க வைக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை – 93,030

சாய்ந்தமின்கம்பங்கள் – 19

நிரந்தர மருத்துவ முகாம்கள் 921

நடமாடும் மருத்துவக் குழுக்கள் – 234

மருத்துவப்பயன்பெற்றவர்கள் – 72,421

பயிர் சேதம் – 14 ஏக்கர்.

இவ்வளவு சேதங்களை ஏற்படுத்தி விட்டு நேற்றிரவு கரையை கடந்த நிவர் புயல் திருவண்ணா மலை அருகே மையம் கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் நிலையில், தற்போது ஆந்திரா நோக்கி பயணம் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் வரும் 29 ஆம் தேதி உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்தமிழக பகுதி நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த நாட்களில் வலுப்பெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Posts