எஸ்.ஆர்.ரங்க நாதன் – தேசிய நூலக தின சாதனையாளர்!

நூலக அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் நூலகங்களில் புத்தகங்களை பாதுகாப்பாக சேமிக்கும் கோலன் தொகுப்பு முறையை உருவாக்கியவர். 1948-ல் இவரது முயற்சியால்தான் சென்னை பொதுநூலகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படிதான் உள்ளாட்சி நிறுவனங்கள் வசூல் செய்யும் சொத்துவரியில் 10 சதவீதம் நூலகத்துறைக்கு வழங்கப்படுகிறது.இந்திய நூலகத்துறைக்கு அவர் அளித்த கொடைதான் கோலன் பகுப்புமுறை. நூல்களைப் பொருள்வாரியாகப் பிரித்து அடுக்குவதற்கான அறிவியல்பூர்வமான அணுகுமுறையே கோலன் பகுப்புமுறை எனப்படுகிறது. இந்தப் பகுப்பு முறை இவரால் ஆராய்ந்து கண்டுப்பிடிக்கப்பட்டதாகும். இது நூலகத்துறையைச் சார்ந்த பல மேனாட்டு அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டது. நூலக அறிவியல் பள்ளி என்ற அமைப்பைத் தொடங்கி, 15 ஆண்டுகள் அதன் இயக்குநராகப் பணியாற்றினார். தன் சேமிப்பு முழுவதையும் அதற்காக வழங்கினார்.1945-ல் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நூலக அமைப்பை மேம்படுத்தும் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு 2 ஆண்டுகள் தனி ஒருவராக அங்கிருந்த ஒரு லட்சம் நூல்களை வகைப்படுத்தினார். மேலும் அங்கு நூலக அறிவியல் பட்டயப்படிப்பை அறிமுகப்படுத்தி அவரே அதற்கான ஆசிரியராகவும் செயல்பட்டார். அதன் பிறகு டெல்லி பல்கலைக்கழக அழைப்பை ஏற்று அங்கு சென்று நூலக அறிவியல் பாடம் கற்பித்தார். அவர் அங்கு பணியாற்றியபோதுதான் நூலக அறிவியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்புகள் தொடங்கப்பட்டன, இப்படி இந்தியாவில் நூலகத்துறையின் வளர்ச்சிக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்தவர். தனது சொத்துகளையும் தானம் செய்தவர். எனவே தான் அவர் இந்திய நூலக அறிவியல் ஆவணக்காப்பக மற்றும் தகவல் அறிவியலின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
நம்மில் பலருக்கும் நூலகங்களில், எப்படி நூல்களை அடுக்கி வைப்பது என்பது, சவாலான பணி. விரும்பிய நூலை, அவ்வளவு எளிதாக தேடி எடுத்து விட இயலாது. அதற்கான வழிமுறையை ஏற்படுத்தியவர் ஒரு தமிழர் என்பதில், நாம் மார் தட்டுவோம். அப்பெருமைக்குரிய இந்திய நூலக தந்தை எனப்போற்றுபவர் சீர்காழி ராமாமிர்தம் ரங்கநாதன். அவரது பிறந்த நாளான இன்றைய தினத்தை தேசிய நூலக தினமாக்கி கொண்டாடுகிறோம் .
நாகை மாவட்டம், சீர்காழி, வேதாந்தபுரத்தில், 1892 ஆக., 12ல், ராமாமிர்தம்- சீதாலட்சுமி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ரங்கநாதன். சீர்காழியில், பள்ளி கல்வியை முடித்து சென்னை கிறிஸ்தவ கல்லூரியில், கணிதத்தில், இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றார். சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரியில், ஆசிரிய தகுதிச்சான்று பெற்றார். உயர் கல்வியை முடித்த பின், மங்களூர், கோவையில், அரசு பள்ளிகள் பின், சென்னை மாநில கல்லூரியில், கணிதம், இயற்பியல் பாடங்களை போதித்தார். தொடர்ந்து, கணிதவியல் துறை, உதவி பேராசிரியராக பணிபுரிந்தார். விரும்பிய ஆசிரியர் பணி கிடைத்தும், அவருக்கு, போதிய வருமானம் கிடைக்கவில்லை.
அதனால், சென்னை பல்கலையில், 1924ல், முதல் நூலகராக பணியில் சேர்ந்தார். அதிக ஊதியம் கிடைத்தும், கற்பித்தல் பணியில் கிடைத்த மனநிறைவு கிட்டவில்லை. அதை அடுத்து லண்டன் சென்று, நூலக அறிவியலில் பல்வேறு நுணுக்கங்களை கற்று தேர்ந்தார். பின், நாடு திரும்பிய அதே வேகத்தில், பல்கலை நூலகத்தை சீரமைக்க தொடங்கினார். அடுத்து, சென்னை நூலக சங்கத்தை தொடங்கி, அதன் அமைப்பு செயலராக, 1928 முதல், 1945 வரை செயல்பட்டார். அச்சங்கமே, நூலக இயக்க சின்னமானது. நூலக அறிவியல் பள்ளி என்ற அமைப்பை தொடங்கி, 15 ஆண்டு, அதன் இயக்குனராக இருந்தார். அதற்கு, தன் சேமிப்பு முழுதையும் வழங்கினார். 1945ல், ஓய்வுக்கு பின், பனாரஸ் பல்கலையில் நூலக அமைப்பை மேம்படுத்தும் பணியில், தன்னை அர்ப்பணித்து, 2 ஆண்டில், ஒரு லட்சம் புத்தகங்களை வகைப்படுத்தினார்.
நூலக அறிவியல் பட்டயப்படிப்பை அறிமுகம் செய்து, அதற்கு ஆசிரியராகவும் செயல்பட்டார். பின், டில்லி பல்கலையில், நூலக அறிவியல் பாடம் கற்பித்தார். அப்போது தான், நூலக அறிவியலில், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் தொடங்கப்பட்டன. சிறந்த எழுத்தாளரான இவர், நூலக நிர்வாகம் தொடர்பாக, 60க்கும் அதிகமான நூல்கள், 2,000க்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியுள்ளார். பல நாடுகளில், நூலகம் குறித்து உரையாற்றினார். கடும் முயற்சியால், நூலகம், தகவல் அறிவியலுக்கு, புது அடிப்படை கோட்டுபாடுகளை நிறுவினார்.
பனாரஸ் பல்கலையில், நூலகர், டெல்லி நூலகத்துறை தலைவர், டில்லி நூலக தரக்குழுவினர் தலைவர் என, பன்முக தன்மையில், திறமையை வெளிப்படுத்தினார். இவரது, தீவிர முயற்சியால், 1948ல், சென்னை பொது நூலக சட்டம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டப்படி, உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும், சொத்து வரியில், 10 சதவீதம், நூலக வளர்ச்சிக்கு வித்திட்டது. நூலகத்துறைக்கு, அவர் அளித்த கொடை, கோலன் பகுப்பு முறை. நூல்களை பொருள் வாரியாக பிரித்து அடுக்குவதற்கான அறிவியல் பூர்வ அணுகுமுறையே, கோலன் பகுப்புமுறை, அவரால், ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்டது.
அதை, பல மேல்நாட்டு அறிஞர்களும் ஏற்றுக்கொண்டனர். அதற்கு முன், கையாளப்பட்ட பகுப்புமுறையை விட, கோலன் பகுப்புமுறை, மாறுபட்டது; தனித்தன்மை வாய்ந்தது. அதனால், பல்வேறு நாடுகளில் உள்ள நூலகங்கள், இன்றளவும், கோலன் பகுப்பு முறையை கையாள்கின்றன. நூலகவியலுக்கு, அவரது பங்களிப்பை கவுரவித்து, 1957ல், மத்திய அரசு, பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது. அவர், நூலகத்துறைக்கு ஆற்றிய அளப்பரிய செயலால், ரங்கநாதன், இந்திய நூலக தந்தை என, அழைக்கப்படுகிறார்.
இவர் சிறந்த எழுத்தாளரும்கூட. நூலக நிர்வாகம் உள்ளிட்டவை தொடர்பாக 60-க்கும் மேற்பட்ட நூல்கள், 2,000-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். பல நாடுகளுக்குச் சென்று நூலகம் குறித்து உரையாற்றினார். கடுமையாகப் பாடுபட்டு நூலகம் மற்றும் தகவல் அறிவியலுக்கான புதிய அடிப்படைக் கோட்பாடுகளை நிறுவிய அவரது, பிறந்த நாளான, ஆக., 12ஐ நூலக தினமாக அறிவித்து, பெருமைப்படுத்தியது மத்திய அரசு. இந்நன்னாளில் நூலகத்தை சிறப்பாக பயன்படுத்தி, அறிவார்ந்த சமூகம் உருவாகவே இந்த விழிப்புணர்வு.