Exclusive

தேசிய விருதுபெற்ற மலையாள ஜல்லிக்கட்டு படம் தமிழில் ரிலீஸ்!

லையாளத்தின் பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ஜல்லிக்கட்டு படம் கடந்த 2019 ம் ஆண்டு வெளியானது.கேரள அரசின் விருது பெற்ற இந்த படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது.சிறந்த ஒளிபதிவிற்காக இப்படம் தேசிய விருதினையும் வென்றுள்ளது . மேலும் ஆஸ்கர் விருத்திற்காகவும் தேர்ந்தெடுத்து பரிந்துரை செய்யப்பட்டது . இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சாபுமோன் அப்து சமது ,சாந்தி பாலச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.

கிரிஷ் கங்காதரன் இந்த படத்திற்காக ஒளிப்பதிவு செய்து தேசிய விருதினை பெற்றுத்தந்தார் . தீப்பு ஜோசப் இப்படத்திற்கு பின்னணி இசையை உருவாக்கியுள்ளார் . மாபெரும் வெற்றி மற்றும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் தமிழ் உரிமையை AR என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பாளர் அமித் குமார் அகர்வால் கைப்பற்றி தமிழில் டப்பிங் செய்து தற்போது அமேசான் பிரைமில் வெளியிட்டுள்ளார் .

கேரளாவில் ஒரு மலையோர கிராமத்தில் இறைச்சிக்காகக் கொண்டு வரப்படும் ஒரு எருமை, கட்டை அவிழ்த்து ஓடுகிறது. அந்த எருமையை ஊர் மக்களே சேர்ந்து பிடிப்பது தான் இந்தப் படத்தின் கதையாகும். மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான இப்படம் தற்போது தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது .

admin

Recent Posts

ராஜ்குமார் ஹிரானியின் அன்புநிறை உலகம் வெளியானது,டங்கி தற்போது டிராப் 4 வெளியானது!

ஷாருக் கான் மற்றும் அவரது 'சார் உல்லு தே பத்தே' - ஆகியவை இணைந்து வாழ்நாள் பயணத்துக்கு உங்களை அழைத்துச்…

14 mins ago

சின்னவர் ஏற்பாட்டில் நடக்க இருந்த சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பு!

சிங்காரச் சென்னையில் இந்த டிச.9,10-ல் நடைபெற இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழை,…

58 mins ago

சென்னையை சூறையாடிய மிக்ஜாம் புயல் கரையை கடந்தது!

வங்கக் கடல் அந்தமான் அருகில் உருவான, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக உருமாறியது. இதற்கு…

2 hours ago

சென்னையின் அறிவுசார் வரலாற்று நினைவிடம் – கன்னிமாரா நூலகம்!

ஒரு நகரத்தின் நூலக வரலாற்றை வைத்து அதன் அறிவு சார்ந்த கலாச்சாரத்தைப் பற்றி அதிகம் சொல்ல முடியும். பெருமைப்படக்கூடிய பல…

4 hours ago

உலகின் மிக வயதான ஆமைக்கு குவியும் வாழ்த்துகள்..:-191-வது பிறந்தநாளை எட்டியது!

சர்வதேச அளவில் அதிக நாள் வாழும் உயிரினம் எதுவென நினைக்கிறீர்கள்? ஆமை? யானை? திமிங்கிலம்? இவை மூன்றும் பொதுவாக அதிக…

2 days ago

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள்!

2007 வரை, இது "ஊனமுற்ற நபர்களின் சர்வதேச தினம்" என்று அழைக்கப்பட்ட நாளிது. உடலில் குறைபாடு இருந்தாலும் உள்ளத்தில் உறுதியுடன்…

3 days ago

This website uses cookies.