ஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட் நாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

அமெரிக்காவின் தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட் நாசா வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதனை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், துணை அதிபர் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.
கடந்த 2003ஆம் ஆண்டு அமெரிக்காவின் ராக்கெட் வெடித்து சிதறியதால் பாதுகாப்பு காரணங் களுக்காக தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்தது நாசா. அதனை அடுத்து ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இறங்கியது நாசா.
இதில் நாசா விஞ்ஞானிகள் ராபர்ட் மற்றும் டக்லஸ் ஹர்லி ஆகியோர் தற்போது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் விண்வெளியில் 2 மாதங்கள் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதி காலை 3.22 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் நாளை விண்ணில் உள்ள ஆராய்ச்சி மையத்தை அடையும் என்று கூறப்பட்டுள்ளது.
முதல் முறையாக தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸுடன் இணைந்து நாசா இந்த திட்டத்தை செயல்படுத்தியது வரலாற்று சிறப்பு மிக்கதாக பார்க்கப்படுகிறது. 9 ஆண்டுகால முயற்சிக்கு பிறகு தனியார் நிறுவனத்துடன் இணைந்து நாசா செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
This is the first time in human history @NASA_Astronauts have entered the @Space_Station from a commercially-made spacecraft. @AstroBehnken and @Astro_Doug have finally arrived to the orbiting laboratory in @SpaceX's Dragon Endeavour spacecraft. pic.twitter.com/3t9Ogtpik4
— NASA (@NASA) May 31, 2020