June 3, 2023

லடாக்கில் வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு முழு விபரம் – வீடியோ!

கிருஷ்ணர் வாசிக்கும் புல்லாங்குழலிடம் பிரார்த்தனை செய்பவர்களும் நாங்கள் தான், ஆனால் ‘சுதர்ஷன சக்கரம்’ சுமக்கும் அதே பகவான் கிருஷ்ணரை விக்கிரகமாக பின்பற்றும் நபர்களும் நாங்கள் தான் – என்று பேசி பிரதமர் மோடி எல்லை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார்.

இந்திய-சீன எல்லையில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி சீன வீரர்களுடன் நடந்த கைகலப்பில் கொல்லப்பட்ட 20 இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். காயமடைந்த இந்திய வீரர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்குச் சென்று அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் இந்திய ராணுவ வீரர்கள் .இந்திய விமானப்படை வீரர்கள் .இந்திய திபெத் எல்லை காவல் படை வீரர்கள் ஆகியோர் அடங்கிய கூட்டத்தில் பிரதமர் மோடி உணர்ச்சிமிகு சிறப்பு உரை ஆற்றினார் .

மோடி உரை விவரம்:

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய நாட்டை காக்க உயிர் நீத்த துணிச்சலான வீரர்களுக்கு வீர அஞ்சலி. நமது ராணுவ வீரர்களால் தான் மக்கள் நிம்மதியாக உள்ளனர். இந்திய ராணுவ வீரர்களின் மனஉறுதி மலையை போல பலமாக இருக்கிறது. உங்களது தைரியம் உங்களது உறுதி இந்திய திருநாட்டை பாதுகாப்பதில் உங்களுக்கு உள்ள ஈடுபாடு ஆகியவற்றிற்கு இணையாக எதையும் கூற முடியாது. இந்திய நாட்டிற்கு கவசம் போல மிகவும் கடினமான சூழ்நிலைகளில் நீங்கள் பாதுகாத்து நிற்கிறீர்கள் .

உங்கள் கரங்கள் நீங்கள் காத்து நிற்கிற. உங்களை சுற்றியுள்ள மலைகளை விட வலிமை வாய்ந்தது. உங்கள் எண்ணம் உங்களைச் சூழ்ந்துள்ள மலைச்சிகரங்கள் போல அசைக்க முடியாது. நீங்கள் திறமை மீது இந்தியா அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து இருக்கிறது . நீங்கள் இங்கு காவலுக்கு நிற்கின்ற காரணத்தினால் நாங்கள் கவலை இல்லாமல் இருக்க முடிகிறது .உங்கள் உறுதியையும் தீரச்செயலையும் நீங்கள் சமீபத்தில் உலகுக்கு உணர்த்தி இருக்கிறீர்கள் .அதன் மூலம் இந்தியாவின் வலிமையை உலகுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இங்கு இந்திய மண்ணை காப்பதற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த வீரர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் அவர்களுடைய தீரச் செயல்களை இங்கு உள்ள பள்ளத்தாக்குகளும் மலைச் சிகரங்களும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன .ரிஜாங் முதல் கல்வான் வரை இந்திய ராணுவத்தின் 14வது படைப்பிரிவு‌ வீரர்களுடைய தீரச்செயல்களுக்கு சான்று கூறிக் கொண்டு உள்ளன.

இந்திய ராணுவ வீரர்களின் உள்ளத்தில் பற்றி எரியும் உணர்ச்சியையும் தீரத்தையும் அன்னை இந்தியாவின் எதிரிகள் இப்பொழுது உணர்ந்து கொண்டுள்ளனர் .லடாக் இந்தியாவின் நெற்றி இந்தியாவின் கவுரவத்தின் அடையாளம்.

ரின்போச்சி இப்பகுதியில் தோன்றியவர் தான். இப்பகுதியை தனித்து துண்டாட விரும்பிய பிரிவினைவாதிகளை அவர் தலைமையில் நாம் லடாக்கை விட்டு விரட்டி அடித்தோம்.

நம்முடைய உறுதியும் வலிமையும் இமயமலையை விட உயர்ந்தது நாம் குழலூதும் கண்ணபிரானின் பக்தர்கள். அதே நேரத்தில் கிருஷ்ண பரமாத்மாவின் சுதர்சன சக்கரத்தினால் உத்வேகம் பெற்றவர்கள்.

இன்றைய உலகம் அமைதியும் நட்புறவையும் ஏற்றுக்கொண்டுள்ளது .ஆனால் இன்னொரு செய்தியையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் .பலவீனமானவர்கள் ஒருபோதும் அமைதியை நிலைநாட்ட முடியாது .தைரியமும் உறுதியும் அமைதியை ஏற்படுத்தவும் நிலைபெறச் செய்யவும் தேவையான அடிப்படை பண்புகள் ஆகும் .இந்தியா எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் அடைகிறது என்றால் அதன் பயன்கள் உலகத்துக்கே கிடைக்கும் .இந்தியா நவீனமான உள்கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறது என்றால் அதன் அடிப்படையும் உலகத்திற்கான பயன் கருதி தான். இரண்டாவது உலகப்போர் காலத்திலும் நம்முடைய வீரர்களின் தீரச் செயல்கள் உலகுக்கு நன்கு அறிமுகம் ஆனது. அதே பாரம்பரியத்தை நீங்கள் இப்பொழுது மீண்டும் ஏற்படுத்தி இருக்கிறீர்கள். வீரம்.மரியாதை கண்ணியம் நம்பகத்தன்மை ஆகிய நான்கும் ஒரு ராணுவத்தின் அடிப்படைப் பண்புகள் என திருவள்ளுவர் தெரிவித்துள்ளார்

(மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே ஏமம் படைக்கு. அதிகாரம் படை மாட்சி-குறள் எண் 766 )

நாடு பிடிக்கும் காலனி ஆதிக்க காலம் மலையேறிவிட்டது .இந்த யுகம் வளர்ச்சிக்கானது .முன்னர் ஒவ்வொரு நாடாக கைப்பற்றி தனது அதிகாரத்தை விரிவுபடுத்திய ஆதிக்க சக்திகள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது அவை தோற்கடிக்கப்பட்டுவிட்டன. அவை இப்பொழுது இல்லை .அதனால் உலகம் இப்பொழுது விரிவுபடுத்துதல் அல்லது நாடு பிடித்தலின் இருந்து விலகிச் செல்கிறது .வளர்ச்சிப் பாதையை தேர்ந்தெடுத்து பயணம் மேற் கொள்கிறது. இந்த வளர்ச்சிப் பாதையில் மற்ற நாடுகளும் போட்டியிடுகின்றன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி இந்திய ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார் .

பிரதமருடன் முப்படைகளின் தலைமைத் தளபதி நிவின் ரவாத். ராணுவத் தளபதியின் மனோஜ் நரவானேயும் உடன் இருந்தனர்.