June 7, 2023

அரசியல்வாதி ஆன ரஜினி! சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்!!

அதிர் வெடிக்கும் புஸ்வாணத்திற்கும் பெயர் பெற்றது தமிழக அரசியல்.

இது நாள் வரை புஸ்வானம் எனக் கருதப்பட்ட ரஜினி வெடி, அதிர் வேட்டு ஒன்றைப் போட்டு பல அரசியல் தலைவர்களை உறங்க விடாமல் செய்ததின் சேம்பிள் கூட திருமாவளவன் வெளியிட்டுத் தன் அஜீ்ரணத்தை முதல் முதலில் ஏப்பமாக வெளிப்படுத்தி உள்ளார்.

அரசியல் கட்சி தொடங்குவாரா என்பது அறிவிப்பிற்குப் பின்னும் நிஜமாகவே தொடங்கி விடுவாரா என்ற 25% சந்தேகம் உள்ள நிலையில், பலர் கடப்பாறையை விழுங்கி இஞ்சிக் கஷாயத்தைத் தேடும் மன நிலையில் உள்ளனர்.

சரி கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்து விடுவாரா ரஜினி?

ஒரு மாஸ் ஹீரோ கோபத்தோடு வெளியேறினால் அரசியல் களத்தை துவம்சம் செய்வார் என்ற கருத்து எம்ஜிஆர் என்டிஆரோடு போயாச்சு. ஆட்சியைப் பிடிக்க முடியாது என்றாலும் நிச்சயம் அரசியல் கணக்குகளை ரணகளமாக்க ரஜினி கட்சியால் முடியும்…!

ரஜினிக்குப் பின்னே இயக்குவது பாஜக என திருமா, மற்றும் ₹200 உபிக்கள் செட்டு செட்டாக சொல்லி வருவது அவர்களது விளக்கெண்ணெய் குடித்து வயிற்றைத் தடவும் மனோநிலையைக் காட்டுகிறது.

ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம், அந்த வரவில் சிறப்பேதும் இல்லை என்று கூறிய திமுக, அதிமுக, காங் உள்ளிட்ட பெரிய கட்சிகள், இன்று வாயே திறக்காமல் உள்ளதின் காரணம் வாயுக் கோளாறல்ல…. வாயைத் திறந்து ஏதேனும் உளறிவிட்டால் ஒரு வேளை தேர்தல் நேரத்தில் ரஜினி கூட்டணி கிடைக்காமல் போய் விடலாம் என்ற பயம்தான்…!

இந்தக் கட்டுரை, ரஜினி ஜெயிப்பாரா என்பது பற்றி அல்ல… இனி உள்ள அரசியல் நிகழ்வுகள் இன்னும் ஆறு மாதத்திற்கு அவரைச் சுற்றித்தான் என்பதை எடுத்துக் காட்டவே. ரஜினியின் முதல் நண்பர் கமல் விழுங்கிய மருந்து வில்லை, பெரியது. எனவேதான் அவர் ‘என் நண்பர் உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும் ‘ என பயத்தோடு கூறி ‘புலிக்கு பயந்தவனெல்லாம் என் மேலே படுத்துக்குங்க’ என்று முதல் தகவல் அறிக்கை விட்டார்… காரணம் அவர் தனது வங்கி என நினைத்திருந்த ஓட்டாளர்களை, ஒரே அறிவிப்பில் தனது கூடாரத்திற்குள் ரஜினி இழுக்கத் தொடங்கி விட்டார்..

இனி ஜெயகுமார்களும், ஆர் எஸ் பாரதிக்களும், கே எஸ் அழகிரிகளும் ஒற்றை வார்த்தை கூட ரஜினிக்கு எதிராகப் பேசப் போவதில்லை… சரி… பேசித்தான் பாருங்களேன்…. பாஜக இதன் சூத்திரதாரி என்பது போல உபிக்கள் இனி எழுத வேண்டாம்…. இது ஒரு குண்டு பாய் அதித்ஷாவின் படா பிக்பாஸ் ஸ்க்ரிப்ட், சரியான சமயத்தில் ரிலீஸ் செய்ய கடந்த ஐந்து வருடங்களாக காத்திருந்திருக்கிறது…. அதனாலேயே தனது கட்சிப் பொறுப்பாளரை ரஜினியிடம் விட்டு வைத்து அவரையே இன்று ஒருங்கிணைப்பாளராக்கி, பாஜகவிலிருந்து தூக்கி ஏதோ ட்ரான்ஸ்ஃபர் ரீ போஸ்ட்டிங் ஜாய்னிங் போன்ற நிகழ்வை நிகழ்த்தி உள்ளது.

திமுக கலகப் பேச்சாளர்கள் இனி சவால் விட முடியாது. இந்து மத விசுவாசிகளை மத ரீதியாக விமர்சிக்க முடியாது. ஏனென்றால் அருணாசலம் பார்த்துக்குவான். ஜெயகுமார் போன்றவர்கள் ரஜினி விஷயத்தில் கருத்து சொல்ல விடாமல் தடுக்கப் பட்டு ராஜேந்திர பாலாஜி முன்னிலைப் படுத்தப் படுவார்.

நீர்த்துப் போய் கொண்டிருக்கும் காங்கிரஸுக்கு குண்டுராவ்கள் திமுக டாக்டரிடம் உயிர் ப்பிச்சை கேட்டுக் கொண்டு இருக்கும் நேரத்தில் ரஜினியாவது, குஷ்புவாவது?…. இன்னும் சில காங் மணிகள் ரஜினி மாலையில் கோர்க்கப் படும்…


திருமா போன்ற மூன்றாம் தர பேச்சாளர்கள் வண்ணை ஸ்டெல்லா, வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் லெவலில் இறங்கிப் பேசினால் ரஜினி ரசிகர்கள் மற்றும் பாஜகவின் அண்ணாமலை தொண்டர்கள் பதிலடி கொடுப்பார்கள் என்ற பயத்தில் அந்த சாக்கடை சற்றே சுத்தமாகும்…

எது எப்படியோ, வட்டம் மாவட்டம் என திமுக அராஜகம் செய்து கொண்டு இருந்த காலத்தில் எம்ஜிஆர் எனும் நாயகன் உதயமாகி 14 ஆண்டுகள் திமுகவை வனவாசத்திற்கு அனுப்பினார்….

அதேபோல ரஜினி இன்று…

தமிழகம் ஒரு நல்ல விடியலை நோக்கி என்று நம்புவோம்!