ஆசான் சுஜாதா -வை இன்று மட்டுமல்ல என்றுமே மறவேன்!

ஆசான் சுஜாதா -வை இன்று மட்டுமல்ல என்றுமே மறவேன்!

எல்லோருக்கும் வாழ்க்கையிலே ஒரு திருப்புமுனு வருவதற்க்கு ஒரு ஆசான் ( மென்ட்டர்) இருப்பார்கள் அல்லது நல்ல கர்மா இருந்தால் அமைவார்கள். அவ்வகையில் எனக்கு ஒன்றல்ல இரண்டல்ல நான்கு ஆசான்கள் என் வாழ்க்கையை திருப்பி போட்ட அந்த நாலு ஆசான்களில் ஒரு ஆசானாவது உங்கள் மனம் கவரந்தவராய் இருப்பார் என்று 100% நம்புகிறேன். அந்த நான்கு பேரை இங்கு பட்டியிலிட்டு சொன்னால் கண்டிப்பாய் பொறாமைபடுவீர்கள். ஏன் என்றால் இந்த நாலு பேரும் என்னோட கனவு நாயகர்கள் இவர்களை பார்ப்பேனா என்று எண்ணிய காலத்தில் அவர்களுடன் நண்பராய் அவர்கள் வீட்டில் ஒருவராய் அமைந்த போது – சத்தியமாக என் பிறவி பயன் அடைந்தேன்.

அந்த நாலு பேர்….

1. சுஜாதா – 20 -21ஆம் ஆண்டின் சிறந்த ஜீனியஸ்.
2. கமலஹாசன் – இந்த நூற்றான்டின் உலக நாயகன்.
3. பிசி ஸ்ரீராம் – மாடர்ன் சினிமாவின் மூன்றாவது கண்.
4. அப்துல் கலாம் – உலகத்தின் சிறந்த மனிதர்.

மிக மிக நிறைய பேருக்கு நான் யார் என்ன செய்தேன் என்ன செய்கிறேன் என்று சொல்லும் அளவுக்கு அதிக அளவில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எல்லோருக்கு எதையாவது கண்டுபிடிக்க வேணும், என்று கனவு கண்டிப்பாய் இருக்கும் அந்த கனவு நமக்கு புதிதானதல்ல. பிரிட்டிஷ் டெலிகாமில் லன்டனில் வேலை செய்த போதே எதாவது கண்டுபிடிக்க வேண்டும் அதுவும் மொபைல் டெக்னாலஜியில் என்ற தனியாத தாகத்தை உண்மையாக்கி காட்டியவர் திரு சுஜாதா அவர்கள் ஆவார்.அந்த சுஜாதாவை அறிமுகபடுத்தியவர் நண்பர் கமலஹாசனும், நிகில் முருகன் தான்.

அந்த முதல் நாளிலே அவரை எனக்கு பிடித்தது பெரிதல்ல என்னை அவருக்கு அதிகமாய் பிடித்து போனது தான் நான் செய்த பாக்கியம். அந்த லஸ் வீட்டில் காபி, பிரேக்ஃபாஸ்ட் என்பது முதல் டின்னர் வரை சர்வசாதாரணமாய் அவரின் ஒரு வீட்டின் பிள்ளையானேன். என்னுடைய கண்டு பிடிப்புக்கு ஆசானாய் ஐஐடி மூளை அதிகம் உதவி செய்து ஒரு வழியாக கண்டுபிடித்து முதல் 1 கோடி ரூபாயை சம்பாதித்த போது 20களில் வயது என்னுடையது.

அவர் ஒரு நாள் ’ரவி உனக்கு வாழ் நாள் ஆசை என்ன்?’வென்று கேட்டபோது சார் உங்களது “கற்றதும் பெற்றதும்” ஒரு எபிஸோடில் என்னுடைய பெயர் வந்தாலே போதும் என்று தயங்கி தயங்கி கூறினேன். அவர் பதில் ஏதும் சொல்லாமல் ஒகே நாளை மீட் பண்ணலாம்னு என்னை அனுப்பி வைத்தார். அப்புறம் நாம அளவுக்கு மிஞ்சிய ஆசை பட்டுவிட்டோமான்னு யோசிச்சு ரெண்டு வருஷம் ஆகி அந்த “கற்றதும் பெற்றதும்” ஒவ்வொரு எபிசோடையும் படிக்கும் போது என்ன எழுத்து நடை என்ன அறிவு எத்தன் உலக புகழ் பெற்ற மனிதர்கள் என்று எண்ணிய நாட்கள் பல.

ஒரு நாள் காலை 6 மணிக்கு திருமதி சுஜாதா ( ஒரிஜினல் சுஜாதா) என்னை ஃபோனில் அழைத்து ஆனந்த விகடனில் கற்றதும் பெற்றதும் இந்த வார ஆர்டிக்களை படினு சொன்னார். உடனே நடந்தே முக்கு கடைக்கு போய் புக் வராமல் ஆட்டோ பிடித்து அடையார் ஜங்க்ஷன் போய் புக்கை வாங்கி புரட்டினால் அதில் என்னை பற்றியும் என்னுடைய கண்டுபிடிப்பையும் பற்றி எழுதியிருந்தார். சத்தியமா அந்த ஒரு மணி நேரம் நான் நானாக இல்லை என்பது தான் உண்மை. ( முதல் கமென்ட்டில்)

அதை எழுதியது மட்டுமில்லாமல் அதை லான்ச் செய்து என்னுடைய ஒவ்வொரு முன்னேறத் துக்கு கூடவே இருந்து என்னுடைய கல்யான வீட்டில் ஒருவராய் மூன்று வேளையும் இருந்து கவனித்த என்னுடைய ஆசான் என்னுடன் இல்லை தமிழகர்களின் அனைத்து மனங்களில் நிறைந்து உள்ள ஆசான் சுஜாதாவை இன்று மட்டுமல்ல என்றுமே மறவேன்.

error: Content is protected !!