பொழுதுப் போக்கு ஊடகம் என்று குறிப்பிடப்படும் சினிமா வகைகளில், குழந்தைகளுக்கான படங்களுக்கென்று தனிச்சிறப்பு இருக்கிறது. அப்படியான படங்கள் குழந்தைகளுக்கான சினிமாக்களாக மட்டும் இல்லாமல், சகல தரப்பினருக்குமான திரைப்படங்களாகவே இருந்திருக்கின்றன. ஒரு பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படத்தைக் காட்டிலும், மிக சிறந்த அறிவியல் புனைவு (science fiction), மற்றும் வேறு வகை படங்களைக் காட்டிலும் குழந்தைகளுக்கான பெரும்பாலான படங்கள் சகல வயதினரையும் கவர்ந்து, மொழிகளைக் கடந்து, மதங்களைக் கடந்து அன்பையும், ஆனந்தத்தையும் பரவச்செய்து, பார்வையாளனின் மனதில் குழந்தைப் பருவ கண்ணோட்டத்தையும் விதைத்து விடுகிறது. அப்படியொரு அலாதியான அனுபவத்தை வழங்க பகீரத பிரயத்தனம் செய்த படமே பிரபுதேவா-வின் ‘மை டியர் பூதம்’.
அதாவது சில பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வேறோர் உலகில் பலவித பூதங்களின் தலைவனாக வாழ்ந்து வருகிறார் பிரபு தேவா. ஒரு கட்டத்தில் முனிவர் ஒருவரின் சாபத்திற்கு ஆளாகிறார். இதனால் தான் தவமிருந்த பெற்ற மகனை பிரிந்து பூமியில் சிலையாக வாழ்கிறார் பிரபுதேவா. மீண்டும் இதே பூத உலகத்திற்கு வர வேண்டுமானால் சில நிபந்தனைகளை விதிக்கிறார் முனிவர். இந்த நிலையில் திக்கி திக்கி பேசும் திக்குவாய் பள்ளி மாணவன் அஸ்வந்த் கையில் பிரபுதேவா சிலை சிக்கி. பிரபு தேவாவுக்கு உயிர் கிடைக்கிறது. அதை அடுத்து அஸ்வந்துக்கு பலவிதங்களில் உதவி செய்கிறார் பிரபுதேவா. அதே சமயம் 48 நாட்களுக்குள் அஸ்வந்த் ஒரு மந்திரத்தை சொன்னால் மட்டுமே பிரபுதேவா மீண்டும் பூத உலகத்திற்கு செல்ல முடியும். அச்சூழலில் என்னாச்சு? திக்கு வாய் ஹீரோ பையன் மந்திரத்தை சரியாக சொன்னானா? பிரபுதேவாவுக்கு பூத லோகம் செல்ல முடிந்ததா ? என்பதே இப்படத்தின் கதை.
சும்மாவே குழந்தைகளுக்கு பிரபு தேவாவையும் அவரது டேன்ஸையும் பிடிக்கும் இதில் அவர் பூதமாகவும் வருவதால் கேட்க வேண்டுமா மனிதர் பூதமாக வந்து காமெடியிலும் அற்புதங்கள் புரிவதிலும் கலக்கி கவர்ந்து இருக்கிறார். இந்த கெட்டப்புக்காக ஒரு உச்சி குடுமி முடியை மட்டும் விட்டுவிட்டு மற்ற மண்டையை முழுவதும் நெசமாகவே மொட்டை அடித்துக் கொண்டு வர எப்படித்தான் பிரபுதேவாவுக்கு மனசு வந்ததோ? ஆனால் அந்த கெட்டப் தான் அவரை பூதமாகவே நம்ப வைக்கிறது. பூதத்துக்கு அடிப்படை தேவை அப்பாவித்தனம் என்ற அளவில் அதற்கு பத்து பொருத்தத்துடன் பொருந்தி போய் விடுகிறார் பிரபுதேவா. அதிலும் குட்டி சிறுவனை குஷிப்படுத்த ஆடம் மாஸ்டர் பாடல் அவரது நடனத்தில் மாஸ்டர் பீஸ்.
பிரபுதேவாவின் நடிப்பு அற்புதமாக இருந்தாலும் அதை மிஞ்சி விடுகிறது சிறுவன் அஸ்வத்தின் திக்குவாய் நடிப்பு அனுபவம் வாய்ந்த நடிகர்களாலேயே இந்த பாத்திரத்தை புரிந்து கொண்டு இவ்வளவு சிறப்பாக நடித்து விட முடியுமா என்று தெரியவில்லை அதனால் ஏற்படும் மன உளைச்சளையும் மற்றவர்களின் பேச்சால் எந்த அளவுக்கு அவன் மனதை பாதிக்கிறது என்பதை அற்புதமான உணர்ச்சிகளின் மூலமே சொல்லி அசத்தி இருக்கிறான் அஸ்வித் அஸ்வத்.
அதே சமயம் பிரபுதேவாவின் உந்துதலால் அவன் தன் திக்குவாய் பிரச்சனையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்வது பாராட்டும்படி இருக்கிறது அதிலும் மாறுவேட போட்டியில் சரஸ்வதி சபதம் சிவாஜி கணேசன் போல் அவன் உட்கார்ந்து சரஸ்வதிக்கு பூஜை செய்து அம்மா அப்பா என்று பேச்சு வருவது போல் நடித்து இருக்கும் காட்சியில் தியேட்டர் கைதட்டல்களால் அதிரும். படம் முழுவதும் திக்குவாய் குறையுடன் நடித்துவிட்டு பட முடிவில் மிக நீண்ட சாட்டில் வளமையான தமிழ் வசனத்தை பேசி அஸ்வத் அசத்தும் போது ரசிகர்கள் ஆரவாரிப்பது நிச்சயம் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான பல விருதுகளை இந்த படத்தின் மூலம் அஸ்வத்துக்கு எதிர்பார்க்கலாம்.
அதிலும் குழந்தைகளை கவர்வதற்காகவே எடுக்கப்பட்ட இந்த படம் முதல் பாதி குழந்தைகளுக்காகவும், 2-வது பாதி அவர்களின் பெற்றோர்களுக்கு ஒரு அட்வைசாகவும் திரைக்கதையை அமைத்திருப்பது சிறப்பு. அதேபோல் திக்குவாய் மாணவனாக நடித்து வரும் அஸ்வந்த் பள்ளியில் கேலி, கிண்டல்களுக்கு ஆளாவது பிரபுதேவா வந்தவுடன் அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். பிரபுதேவ – அஸ்வந்த் கெமிஸ்ட்ரி இந்த படத்தில் ஸ்ராங்காக வொர்க்அவுட் ஆகியிருக்கிறது.
அஸ்வத்தின் அம்மாவாக நடித்திருக்கும் ரம்யா நம்பீசன் ஒரு கதாநாயகிக்கு உரிய அழகுடன் வெளி இருந்தாலும் அவருக்கு ஜோடியாக யாரும் இல்லாதது குறைதான் . இதனிடையே திக்குவாய் என்பது ஒரு குறை அல்ல. மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனை தான் அதற்கு சிகிச்சை என்று செலவு செய்வதை விடுத்து திக்குவாய் உள்ளவர்களின் மனக்குறையை அகற்றி அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்தாலே அதிலிருந்து மீளலாம் என்கிற ஒரு மருத்துவ கருத்தையும் இந்த படத்தில் சொல்லி இருக்கும் இயக்குனரை பாராட்டலாம்.
யுகே செந்தில்குமாரின் கேமரா வண்ணத்தை வாரிக் கொட்டி உழைத்து வாவ் சொல்ல வைத்து இருக்கிறது பூதத்துக்கான காஸ்டியூன்களும் சரி அதற்கான சுற்றுப்புறங்களும் சரி வானவில்லை ஜொலிக்கிறது பூதம் வரும் காட்சிகளில் எல்லாம் இமானின் பின்னணி இசையும் பின்னி எடுக்கிறது.அதிலும் அஸ்வத்துக்காக பூதம் செய்யும் அற்புதங்கள் படம் நெடுக இருப்பதால் சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் குதூகலத்துடன் இந்த படத்தை பார்க்க முடியும்.
மொத்தத்தில் – மை டியர் பூதம் – ஃபேமிலி ஃப்ரண்டலியான மூவி
மார்க் 3.25/5
பிரைம் வீடியோ தமிழ் திகில் தொடரான தி வில்லேஜ் சீரிஸை விளம்பரப்படுத்தும் விதமாக , சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்…
கடந்த ஆண்டு 'காந்தாரா ஏ லெஜன்ட்' எனும் திரைப்படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து ஹோம்பாலே ஃபிலிம்ஸ், 'காந்தாரா- சாப்டர் 1'…
உத்தராகண்ட் மாநிலத்தில் உத்தர்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டு, அதனுள் 41…
நியூசிலாந்தில் முந்தைய அரசு தன் நாட்டில் புகைப்பழக்கம் இல்லாத இளம் சந்ததியினரை உருவாக்கும் நோக்கில், 2004-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த…
இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) டி10 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்தத் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 2…
பூலோக மக்களுக்காக கலியுக தெய்வமாம் ஐயன் ஐயப்ப சுவாமி நைஷ்டீக ப்ரம்மசர்ய யோகத்தில் ஆழ்ந்து தவம் புரியும் அற்புத திருத்தலம்.…
This website uses cookies.