உலகின் மிகப்பெரிய மைதானமான மொடேரா கிரிக்கெட் ஸ்டேடியம் திறக்கப் போறாங்கோ!

உலகின் மிகப்பெரிய மைதானமான மொடேரா கிரிக்கெட் ஸ்டேடியம் திறக்கப் போறாங்கோ!

விளையாட்டுப் பிரியர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி நாளை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் (மொடேரா ஸ்டேடியம்) நாளை பகலிரவுப் போட்டியாக தொடங்குகிறது. இதன் முன்னதாக மைதானத்தை குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் நாளை திறந்துவைக்கிறார்.

உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,10,000 இருக்கைகள் இந்த மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், தலா 25 பேர் வசதியாக அமரக் கூடிய 76 கார்ப்பரேட் பாக்ஸ் கேலரிகளும் அடங்கும்.

இந்த மைதானத்தில்தான் முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வந்திருந்தபோது “நமஸ்தே ட்ரம்ப்” என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 50 சதவித ரசிகர்கள் மட்டுமே போட்டியை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்படி 3-வது டெஸ்ட் போட்டிக்கு உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அங்கு 55 ஆயிரம் ரசிகர்கள் அனுமதிக் கப்படுகிறார்கள். இதற்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. இப்போது பயிற்சி பெற்று வரும் இந்திய – இங்கிலாந்து வீரர்கள் இந்த மைதானத்தின் பெருமையை தங்களுடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் மைதானம்தான் உலகிலேயே மிகப்பெரிய மைதானமாக இருந்தது. தற்போது அதை விட பெரிய மைதானம் என்ற பெருமையை மொடேரா ஸ்டேடியம் பெற்றுள்ளது. இந்த மைதானம் சுமார் 63 ஏக்கர் அளவிலான நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்துக்கு 4 நுழைவு வாயில்கள் உள்ளன. விரைவாக வெளியேற்றும் வசதிகள் இந்த மைதானத்தில் செய்யப்பட்டுள்ளன.

மற்ற மைதானங்களில் இல்லாத வகையில் மழை நீரை மைதானத்திலிருந்து விரைவாக வெளியேற்றும் வசதிகள் இங்கு செய்யப்பட்டுள்ளன. ஆட்டத்தின்போது 8 செ.மீ. அளவுக்கு மழைப்பொழிவு இருந்தாலும், நீரை விரைவாக வெளியேற்றி ஆட்டம் ரத்தாகாமல் மீண்டும் தொடங்க வகை செய்யப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!