கொரோனா தொற்றை விட, சுற்றுச்சூழல் மாசு காரணமாக அதிக இறப்பு!- ஐ.நா.தகவல்

கொரோனா தொற்றை விட, சுற்றுச்சூழல் மாசு காரணமாக அதிக இறப்பு!- ஐ.நா.தகவல்

லகளவில் கொரோனாவால் 41.79 கோடி பேர் பாதிப்புக்குள்ளாகி உலகளவில் இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 5,867,669 ஆகி உள்ள நிலையில் கொரோனா தொற்றை விட, சுற்றுச்சூழல் மாசு காரணமாக அதிகமானோர் இறந்துள்ளதாக ஐநா கூறியுள்ளது.

வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாடு, தொழிற்சாலைகள் வெளியேற்றும் ரசாயனத்தால் நிலத்தில் பாதிப்புகள் என்பதைத் தவிர்த்து மின்னணு கழிவு பொருட்களாலும் சுற்றுசூழல் பாதிக்கப்படுகிறது. பூச்சி மருந்துகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் எலெக்ட்ரானிக் கழிவுகள் ஆகிய மூன்றுமே மனித உரிமைகளை மீறுவதாக காணப்படுகிறது.

அது மட்டுமின்றி, அண்மை சில ஆண்டுகளில் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக, கிட்டத்தட்ட 90 லட்சம் இறப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கொரோனா தொற்று, உலகத்தை முடக்கியதோடு மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 60 லட்சம் பேர் இறப்புக்கு காரணமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

சுற்றுசூழல் பாதிப்பால் மிகவும் அதிகமாக மாசடைந்த இடங்களை ‘நியூக்ளியர் டெஸ்ட் சோன்’ என்று சில காலங்களுக்கு முன் வரை அழைக்கப்பட்டது. இத்தகைய இடங்கள், பருவ நிலை மாற்றம் காரணமாக வாழ முடியாத இடம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது இந்த இடங்களை ‘சாக்ரிபைஸ் சோன்’ என்று பெயர் மாற்றியுள்ளனர்.

ஐக்கிய சபை உரிமைகளின் தலைவரான மிச்செல் பச்லெட், இந்த சுற்றுச் சூழல் ஆபத்துகள், உலகம் முழுவதிலுமே மனித குலத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அது மட்டுமின்றி அதிகரித்து வரும் பருவநிலை மாற்றங்களும் மனிதர்களுக்கு அடிப்படை தேவைகளை மற்றும் உரிமைகளை கூட பாதித்து விடும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!